பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?

அடடா... எவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் பட்டிமன்றம்!!! மக்களே... யாரும் ரெஸ்ட் எடுக்காம கிடைக்கும் நேரம் எல்லாம் இங்க ஓடி வந்து பதிவை போட்டு அசத்துங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். ;)

இன்னைக்கு நம்ம தலைப்பு அன்பு தோழி கவிசிவா தந்தது... நன்றி கவிசிவா :)

தலைப்பு:

“கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

சின்ன மாற்றத்தோடு தான் அந்த தலைப்பை கொடுத்திருக்கேன். எல்லாரும் ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டிப்பார்த்து உண்மையை சொல்லுங்கன்னு வேண்டிக்கறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும். அம்புட்டு தான் என் பேச்சு முடிஞ்சுது... இனி உங்க பேச்சை கேட்பது மட்டும் தான் என் வேலை ;) நிறைய வேலை வெச்சு, நிறைய படிக்க வெச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லன்னா தீர்ப்பை எழுத நான் ரொம்ப வேலை செய்ய வேண்டி வந்துடும். அப்படி என்னை விட்டுடமாட்டீங்கன்னு நம்பி துவங்கி இருக்கேன். இப்பவே நன்றி நன்றி நன்றி :) புது முகங்களும், வழக்கமான பட்டிமன்ற ரசிகர் மக்களும் ஆர்வமா இருக்கீங்க... வருக வருக.

நீண்ட‌ இடைவெளிக்குப்பின் பட்டியை துவங்கியுள்ள‌ நடுவர் வனிக்கு வாழ்த்துக்கள் பல‌......:) அருமையான‌ தலைப்பு கொடுத்த‌ கவிக்கு நன்றிகள்.....(அப்பா.....நாந்தான் முதல் பதிவு ).
நடுவரே கொஞ்சம் பொறுமையா இருங்க‌ அணி தேர்வு செய்திட்டு வரேன்.

மக்களே... வாரீர், ஆதரவு தாரீர் என அன்போடு அழைக்கிறேன்.

குறிப்பு:

இதுல எல்லாம் பிழை இருந்தா யாரும் பிரெச்சனை பண்ணப்புடாது. ;) ஆனா வருபவர் எல்லோரும் நிச்சயம் தமிழில் மட்டுமே தட்டனும், இல்லன்னா நான் அந்த பதிவுக்கு பதில் தட்ட மாட்டேனாக்கும். எதாவது ஒரு அணி பக்கமே உங்கள் வாதம் இருக்க வேண்டும்... நடுவுல வந்து தத்துவம் எல்லாம் பேசி இரண்டு அணியிலும் இல்லாம டீல்ல போனா ஒத்துக்கிட மாட்டேன். 3:)

வனி ருல்ஸ் பேசுறேன்னு ஓடாதீங்க... நடுவராச்சே, பேசுவோம் ;) இதுக்கு தான் நீங்க யாராச்சும் நடுவரா வாங்கன்னேன்... யாரும் கேட்கல. சிக்குனீங்களா என்கிட்ட? வாங்க வாங்க... இல்லன்னா நான் கோச்சுக்குவேன், பென்ச் மேல ஏத்துவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

நான் இதுவரை ஹாஸ்டலில் தங்கி படித்தது இல்லை,
வீட்டை விட்டு பிரிந்து இருப்பது சிரமம் என்றாலும்,
ஆனால் உடன் படிக்கும் தோழிகள் ஹாஸ்டல் லைப் பத்தி சொல்லும் போது ஆசையாக‌ இருக்கும், ஒருத்தருக்கு ஒருத்தர் சுக‌,துக்கங்களை பகிர்தல், மிக‌ ஜாலியாக‌ எல்லாரையும் கலாய்க்கிறதுலாம் சான்சே இல்ல‌, எவ்ளோ நாள் ஆனாலும் அந்த‌ நிகழ்வுகளை மறக்கவே முடியாது . இன்னும் எனக்கு அந்த‌ ஏக்கம் இருக்கு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நடுவருக்கு வணக்கம். அவையோருக்கும் வணக்கம்.

நடுவர் அவர்களே .!! உங்களுக்கு தனியா அரட்டை அடிக்கிறது பிடிக்குமா? கும்பலோடு அரட்டை அடிக்கிறது பிடிக்குமா? எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?” தீர்ப்பு சொல்லுங்க. கொஞ்சம் பிசி , லேட்டா ஜாயின் பண்ணிக்கிறேன்.

உன்னை போல் பிறரை நேசி.

நானும் வரேன் பா ஆனால் என்னால தொடா்ந்து பதிவிட முடியாது,என் சூழ்நிலை அப்படி ஆனால் நிச்சயம் நேரம் கிடைக்கும் போது அதிகம் பதிவிடுவேன்பா, நானும் வரலாமா பா?

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

அணி தேர்வு முடிந்தது நடுவரே.....
கல்லூரிகாலத்தில் வீட்டிலிருந்து போய்வருவதே ஸ்வாரஸ்யமான‌,மறக்கமுடியாத‌, சுகமான‌ நினைவுகளை கொடுக்கக்கூடியது என்ற‌ அணிக்கு என் கருத்துகளை வாதங்களாக‌ எடுத்துவைக்க‌ தயாராகிட்டு இருக்கேன். அடுத்த‌ பதிவில் வாதங்களுடன் தொடர்கிறேன்.

வீட்டிலிருந்தது செல்வதே சிறந்தது பா. வீட்டிலிருந்து சென்றாலும் நம்ம சுகதுக்கங்களை பகிரா்ந்துக்க முடியும் பா,விடுதில படிச்சோம்னா நம்ம தோழிங்ககூட ஒருநாள் சண்டை போட்டால் கூட நம்மள சாப்பிடுன்னு யாரும் சொல்லமாட்டாங்க பா,ஆனால் நம்ம வீட்ல அப்படி கிடையாது நம்ம அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு சாப்பிடாம போனா கூட நமக்காக நம்ம அம்மாவும் நாம கல்லூாி மடிந்து வரும்வரை நமக்காக சாப்பிடாமலே இருப்பாங்க,நம்ம முகத்த பாத்து ஒரு வாா்த்தையாவுது பேசிட்டு அப்பறம்தான்சாப்பிடுவாங்க, நம்ம அம்மா அப்பா நம்மள கவணிக்கிற மாதிறி நம்மள வேற யாரும் கவணிச்சிக்க மாட்டாங்க பா.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

ஹாய் அனைவருக்கும் மாலை வணக்கம்.,

என்னோட‌ ஜாய்ஸ் ஹாஸ்டல் தான். நம்ம எப்ப‌ வேணும்னாலும் வீடு ல‌ இருக்கலாம்.பட் அந்த‌ குறிப்பிட்ட‌ வயது ல‌ தான் பிரண்டுங்களோட‌ என்ஜாய் பன்ன‌ முடியும். நான் ஹாஸ்டல‌ படிக்கல‌.அதானலே எனக்கு ஹாஸ்டல் பிடிக்கும். ஹாஸ்டல் நெரையா பிரன்ட்ஸ் கிடைப்பாங்க,பிரண்டோட‌ ஊர் சுத்துறது, பிரண்டோட‌ சாப்பிடுறது எல்லாம் எனக்கு ரெம்ப‌ பிடிக்கும்.பிரன்ட்ஸ் நம்ம‌ வீடுக்கு கூட்டிட்டு வரது.அவங்க‌ வீடுக்கு போறது..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

"நடுவர்'' அவர்களுக்கும், நல்லதொரு தலைப்பை தந்த "கவிசிவா அக்காங் "அவர்களுக்கும் மற்றும் பட்டியில் கலந்துகொண்டு சிறப்பிக்கப்போகும் "அனைவருக்கும்" எனது வணக்கங்கள் :-)
நான் எந்த அணி என்று முடிவு செய்து கொண்டு விரைவில் வருகிறேன்..

நட்புடன்
குணா

கல்லூரி காலத்தில் வீட்டிலிருந்து போய் வருவதே சிறந்தது?

-> பெற்றோர்களைப் பிரிந்து கஷ்டப்பட்டு படிக்கனும்னு அவசியம் இல்லை நடுவரே..

-> வீட்டிலிருந்து போறதால பெற்றோருக்கு ஹாஸ்டல் ஃபீஸ் மிச்சமாகும். பஸ்ல போறதுக்கு செலவாகலாம்.. ஆனால் அது ஹாஸ்டல் ஃபீஸ் அளவுக்கு இருக்காது.

-> முக்கியமான விஷயம் : வீட்டிலிருந்து போவதால் சாப்பாடு பற்றிய கவலையே இருக்காது.. ஹெல்தியான வீட்டுச் சாப்பாடு 3 வேளைக்கும்... ஆனால் ஹாஸ்டலில் அப்படியா? எல்லா கல்லூரி ஹாஸ்டலிலும் வீட்டுச் சாப்பாடு அளவுக்கு கிடைக்கும்னு சொல்ல முடியாதே..

வாதங்களுடன் மீண்டும் வருகிறேன்... :-)

-> ரம்யா

மேலும் சில பதிவுகள்