பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?

அடடா... எவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் பட்டிமன்றம்!!! மக்களே... யாரும் ரெஸ்ட் எடுக்காம கிடைக்கும் நேரம் எல்லாம் இங்க ஓடி வந்து பதிவை போட்டு அசத்துங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். ;)

இன்னைக்கு நம்ம தலைப்பு அன்பு தோழி கவிசிவா தந்தது... நன்றி கவிசிவா :)

தலைப்பு:

“கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

சின்ன மாற்றத்தோடு தான் அந்த தலைப்பை கொடுத்திருக்கேன். எல்லாரும் ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டிப்பார்த்து உண்மையை சொல்லுங்கன்னு வேண்டிக்கறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும். அம்புட்டு தான் என் பேச்சு முடிஞ்சுது... இனி உங்க பேச்சை கேட்பது மட்டும் தான் என் வேலை ;) நிறைய வேலை வெச்சு, நிறைய படிக்க வெச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லன்னா தீர்ப்பை எழுத நான் ரொம்ப வேலை செய்ய வேண்டி வந்துடும். அப்படி என்னை விட்டுடமாட்டீங்கன்னு நம்பி துவங்கி இருக்கேன். இப்பவே நன்றி நன்றி நன்றி :) புது முகங்களும், வழக்கமான பட்டிமன்ற ரசிகர் மக்களும் ஆர்வமா இருக்கீங்க... வருக வருக.

நடுவர் அவர்களுக்கும், அவையோர் அனைவருக்கும் எனது மாலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,
எனக்கு ஹாஸ்டலில் தங்கி படிப்பதே சிறந்தது நானும் இது வரைக்கும் ஹாஸ்டலில் தங்கி படித்தது இல்லை ஆனால் எனக்கும் அந்த ஆசை உள்ளது,

ஹாஸ்டலில் தங்கி படிப்பது தான் சுவாராசியமானது, எந்த நேரத்திலும் அந்த நிகழ்வுகள் நெஞ்சை விட்டு நீங்காத மறக்க முடியாத நிகழ்ச்சிகள் பலவும் ஹாஸ்டலில் தான் நடைப்பெறுகின்றன.

தன் தோழிகளுடன் முழு நேரமும் தங்குவதற்கு, உணவு உள்கொள்ள மற்றும் எங்கே போனலும் ஒன்றாக இருக்க எல்லா ஹாஸ்டல் தான் சிறந்தது.

நம்ம‌ ஹாஸ்டல் போய் படிக்கும்போது வீட்டுக்கு லீவுக்கு தான் வருவோம். சோ அப்போது அம்மா, அப்பா,சகோதரிகள் எல்லாம் இன்னும் நம்ம‌ மேல‌ அதிகமாக‌ அன்போடு இருப்பாங்க‌, நம்ம‌ பொன்னு நல்லாவே சாப்பிடு இருக்கு மாட்டாள் என‌ நமக்கு அம்மா வேனும்னு சொல்றதுல்லாம் வாங்கி தருவாங்கா.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

வீட்டிலிருந்தது செல்வதே சிறந்ததுஏனெனில்,அம்மா அப்பா பாசமும் கிளாசில் தோழிகள் பாசமும் கிடைக்கும்.இரண்டு சைடும் நன்மை தீமைகளை பகிர்ந்துகள்ள முடியும்.இதுவே ஹாஸ்டலில் என்றால்வீட்டு நினைவால் தோழிகளிடமும் பேசமுடியாமல் வீட்டாரிடமும் எதுவும்சொல்லமுடியாமல் போகும்

\\ ஹாஸ்டலில் என்றால்வீட்டு நினைவால் தோழிகளிடமும் பேசமுடியாமல் வீட்டாரிடமும் எதுவும்சொல்லமுடியாமல் போகும்\\ எதிர் அணி வாதம் தவறு, அதற்கு தான் தொழில் நுட்பம் கைப்பேசி கண்டுபிடித்துள்ளது.

\\ பஸ்ல போறதுக்கு செலவாகலாம்.. ஆனால் அது ஹாஸ்டல் ஃபீஸ் அளவுக்கு இருக்காது\\ நடுவர் அவர்களே, கல்லுரி பேருந்து செலவு, ஹாஸ்டல் ஃபீஸ் ஒண்ணு. அரசு பேருந்துகளில் சென்றால், செலவு குறையும். ஆனால் இடி மன்னர்களின், இம்சையை தாங்க வேண்டும்.

மீண்டும் வருகிறேன் நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

நான் இரண்டு வகையிலும் படித்துள்ளேன்.என்னுடைய விருப்பம் விடுதி தான்.மீண்டும் வருகிறேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

முதல் ஆளாக வந்து வீட்டில் இருந்து போவதே அணிக்கு தலைவி ஆகிட்டீங்க... தொடருங்க. :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹஸ்டல் அணிக்கு தலைவி ஆகிட்டீங்க ;) ஹாஸ்டல் வாழ்கையே தெரியாம அந்த அணிக்கு ஆதரவா நீங்க என்ன பேசப்போறீங்கன்னு நான் பார்க்கப்பொறேன். நன்றி.

//ஒருத்தருக்கு ஒருத்தர் சுக‌,துக்கங்களை பகிர்தல், மிக‌ ஜாலியாக‌ எல்லாரையும் கலாய்க்கிறதுலாம் சான்சே இல்ல‌, எவ்ளோ நாள் ஆனாலும் அந்த‌ நிகழ்வுகளை மறக்கவே முடியாது . இன்னும் எனக்கு அந்த‌ ஏக்கம் இருக்கு.// - இனி ஏங்கி என்ன பண்ண?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்களும் ஹாஸ்டல் அணியா.. குட் குட். //அரசு பேருந்துகளில் சென்றால், செலவு குறையும். ஆனால் இடி மன்னர்களின், இம்சையை தாங்க வேண்டும்.// - ம்ம்... வீட்டில் இருந்து போறதுல இந்த சிக்கல் எல்லாம் வேறு இருக்கில்ல... நான் யோசிக்கவே இல்லையே!! தொடருங்க க்றிஸ். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னங்க இப்படி கேட்டுட்டீங்க? எப்பலாம் முடியுதோ அப்பலாம் வந்து பதிவிடுங்க. வரலாமா என்றெல்லாம் கேட்கவே கூடாது :) நன்றி ஹாசனி.

//ஒருநாள் சண்டை போட்டால் கூட நம்மள சாப்பிடுன்னு யாரும் சொல்லமாட்டாங்க பா,ஆனால் நம்ம வீட்ல அப்படி கிடையாது நம்ம அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு சாப்பிடாம போனா கூட நமக்காக நம்ம அம்மாவும் நாம கல்லூாி மடிந்து வரும்வரை நமக்காக சாப்பிடாமலே இருப்பாங்க// - ஹாசனி அம்மா செல்லம் போல... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க... :) பிள்ளையும் ஹாஸ்டல் வாழ்கையை அனுபவிக்காமலே அதுக்கு ஏங்குறாங்க!!! சுபிக்கு எற்ற அணி ஜோடி. //அந்த‌ குறிப்பிட்ட‌ வயது ல‌ தான் பிரண்டுங்களோட‌ என்ஜாய் பன்ன‌ முடியும். நான் ஹாஸ்டல‌ படிக்கல‌.அதானலே எனக்கு ஹாஸ்டல் பிடிக்கும். // - ம்ம்... நியாயமா தான் இருக்கு.

//அப்போது அம்மா, அப்பா,சகோதரிகள் எல்லாம் இன்னும் நம்ம‌ மேல‌ அதிகமாக‌ அன்போடு இருப்பாங்க‌, நம்ம‌ பொன்னு நல்லாவே சாப்பிடு இருக்கு மாட்டாள் என‌ நமக்கு அம்மா வேனும்னு சொல்றதுல்லாம் வாங்கி தருவாங்கா.// - ஹஹஹா... ட்ரூ ட்ரூ. ;)

நன்றி. தொடருங்க கனகமுத்து.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்