பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?

அடடா... எவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் பட்டிமன்றம்!!! மக்களே... யாரும் ரெஸ்ட் எடுக்காம கிடைக்கும் நேரம் எல்லாம் இங்க ஓடி வந்து பதிவை போட்டு அசத்துங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். ;)

இன்னைக்கு நம்ம தலைப்பு அன்பு தோழி கவிசிவா தந்தது... நன்றி கவிசிவா :)

தலைப்பு:

“கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

சின்ன மாற்றத்தோடு தான் அந்த தலைப்பை கொடுத்திருக்கேன். எல்லாரும் ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டிப்பார்த்து உண்மையை சொல்லுங்கன்னு வேண்டிக்கறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும். அம்புட்டு தான் என் பேச்சு முடிஞ்சுது... இனி உங்க பேச்சை கேட்பது மட்டும் தான் என் வேலை ;) நிறைய வேலை வெச்சு, நிறைய படிக்க வெச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லன்னா தீர்ப்பை எழுத நான் ரொம்ப வேலை செய்ய வேண்டி வந்துடும். அப்படி என்னை விட்டுடமாட்டீங்கன்னு நம்பி துவங்கி இருக்கேன். இப்பவே நன்றி நன்றி நன்றி :) புது முகங்களும், வழக்கமான பட்டிமன்ற ரசிகர் மக்களும் ஆர்வமா இருக்கீங்க... வருக வருக.

அதென்ன “நடுவர்” ??? “நடுவர்ங்க” இல்லையாங்க? ;) வருக வருக. அணி தேர்வு செய்து கொண்டு விரைந்து வருக.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் ரம்யா... தமிழர் பழக்கம்... வணக்கத்துக்கு பதில் வணக்கம்... பல நேரம் எனக்கு மறந்தே போகுது. ;) வருக.

//வீட்டிலிருந்து போவதால் சாப்பாடு பற்றிய கவலையே இருக்காது.. ஹெல்தியான வீட்டுச் சாப்பாடு 3 வேளைக்கும்... ஆனால் ஹாஸ்டலில் அப்படியா? // - இந்த பாயிண்டை பழைய ஹாஸ்டல் வாழ்கையை நினைத்து நானும் ஆமோதிக்கிறேன் ;)

குறிப்பு: நடுவர் ஆனா எந்த அணி பக்கமும் சாயல சாயல சாயல்!! சாப்பாடு கொஞ்சம் அடிக்கடி ஃபீல் பண்ண வைக்கும்னு ஆமோதிக்கிறேன் அம்புட்டு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வருக வருக. இரவு வணக்கம் :) //தன் தோழிகளுடன் முழு நேரமும் தங்குவதற்கு, உணவு உள்கொள்ள மற்றும் எங்கே போனலும் ஒன்றாக இருக்க எல்லா ஹாஸ்டல் தான் சிறந்தது.// - ம்... உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் பிடிக்கும் போல. ;) தொடருங்க பாரதி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வருக வருக இனியா வருக. நீங்க வீட்டு பக்கமா... ;) ஹாஸ்டலில் வீட்டு நியாபகம்!! - நியாயமா தான் தெரியுது. ஹஹஹ. அனுபவம் அனுபவம் நடுவரின் அனுபவம்!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க... பார்த்து நாட்களாகுது :) நீங்களும் விடுதி பக்கமா? குட் குட் இரண்டு வாழ்கையும் அனுபவமுள்ள ஒருவரின் வாதத்துக்காக காத்திருக்கிறேன் :) தொடருங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே, ஹாஸ்டல் வாழ்க்கைல பெரிய பிளஸ், நீங்களே உங்கள, உங்களோட தேவைகள நிர்வகிக்கும் பழக்கத்த கத்துக்கிரிங்க. அம்மா சொல்படி செஞ்ச நாம, இப்பதாங்க பெரிய மனுசியா மாற்கிறோம், வாழ்க்கைய கத்துக்கிறோம்.
மீண்டும் வருகிறேன் நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

இனிய இரவு வணக்கம்.நீங்க சொன்னது சாி தான்,நான் அம்மா செல்லம் மட்டுமில்லை அப்பா செல்லமும்கூட.
சாி வாதத்துக்கு வா்ரேன் வீட்ல இருந்து போனால் துணி துவைப்பது,அம்மா கைப்பக்குவ உணவு, அவசர செலவுக்கு பணம் இப்படி ஏதும் பிரச்சினையே இல்ல பா. கொஞ்ச நேரம் லேட் ஆனா கூட அம்மாவே ஊட்டி விட்ருவாங்க பா, விடுதியில நமக்கு யாா் பா ஊட்டி விடுவாங்க, அப்படிய தோழிங்க ஊட்டி விட்டாலும் எத்தன நாள் ஊட்டி விடுவாங்க அதெல்லாம் சாத்தியமாகுமா?

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

இந்தாங்க முதல்ல 2 கிலோ சுடச் சுட திருநெல்வேலி அல்வாவ கையில புடிங்க.
தலைப்பை நல்லா படிச்சுக்கிட்டு எந்த அணியில் வாதாடலாம்ன்னு யோசிச்சப்ப விடுதியில் தான்னு முடிவு பண்ணியாச்சு. நானும் நம்ம நடுவர் போல விடுதி வாழ்க்கையை அனுபவிச்சவ தான். அதனால் மன சாட்சிய கொன்னுட்டு உங்களால தீர்ப்பு எழுதிட முடியாது. இருந்தாலும் நம்மூரு "அல்வாவுக்கு" மட்டுமில்ல ""அருவாளுக்கும்"" ஃபேமஸ் அப்படின்னு ஒருமுறை நினைவுப் படுத்திடரேனுங்க. பட்டியில வன்முறை கூடாதுன்னு நீங்க செப்புரது கேட்குதுங்கோ, அட வெற ஒண்ணுமில்லங்க நடுவருக்கே அல்வா கொடுத்தவன்னு என்னையோ, இல்ல அல்வாவ லஞ்சமா வாங்கின நடுவருன்னு உங்களையோ யாரும் சொல்லிடக் கூடாதுங்கோ, அதுக்குத்தேன் எப்புடி. இப்போ சொல்லுங்க நடுவரே தீர்ப்பு எழுதுரதுக்கு முன்னாடி அப்படியே ஒரு
''யூ டேர்ன்'' போட்டு நம்மளோட இந்த பதிவப் படிச்சீங்கன்னா, சிரமமே இல்லாமல் கை தன்னாலே தீர்ப்ப தட்டிடும், என்ன சொல்லுரீங்க.

தலைப்பை நல்லா உத்து பார்த்தால் எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”
விடுதி என்று ஒன்று இருக்கப் போய் தானே நாம் எல்லாம் இப்போ அதைப் பற்றி பேச முடியுது. அது மட்டுமா விடுதியில் தங்கி இருக்கிறதால நம்முடைய எல்லா வேலைகளையும் நாமளே செய்வதுடன் அவ்வாழ்க்கை நம்மை அதிக பொறுப்புள்ளவர்களாகவும் மாற்றி விடுது.
- இது சிறந்தது இல்லையா?

விடுதியில் தோழிகளுடன் சேர்ந்து அமர்ந்து இன்று வகுப்பறையில் நடந்த சம்பவங்கள், கேலிகள்,கூத்துகள் போன்றவற்றை அசை போட்டு ஜாலியாக அரட்டை அடிப்பதெல்லாம் வீட்டிற்க்கு சென்றால் வருமா? அது மட்டுமா? வகுப்பறையில் எந்த ஆசிரியர் எப்படி பாடம் எடுத்தார், என்னென்ன சொதப்பினார்கள் என்பதும், எந்தெந்த டீச்சருக்கு என்னென்ன பட்ட பெயர்கள் என்பதெல்லாம் வீட்ல உட்கார்ந்து யாரிடம் சொல்லி சிரிப்பீர்கள். அப்பா, அம்மா, உடன் பிறப்புகள்ன்னு எல்லோரும் அவங்க அவங்க வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, நாம் சொல்ல வாய திறந்தாலே ஆரம்ப்ச்சுட்டா இவ வேற இங்கிருக்கிற வேலையில..... வீட்டை கொஞ்சம் கூட்டுறியா, அல்லது அடுக்களையில கூடமாட உதவுறியானுதான் பதில் வரும்.
ஆன இதையே விடுதி அறையில் அமர்ந்து சொல்ல ஆரம்பிங்க,தோழிகள் கூட்டம் சேர்வதோடு அவங்க பங்கு வர்ணனைகளையும் எடுத்துவிடுவாங்க பாருங்க.
இவையெல்லாம் ஸ்வாரஸ்யமானவைதானே ?

இப்படி சிறப்புகளும் சுவாரஸ்யங்களும் நிறைந்த விடுதி வாழ்வை எப்படி பின்னாளில் மறக்க முடியும் ?
இதெல்லாம் எதிர் அணிக்கு எங்க தெரியுது நடுவரே.

இது மட்டுமல்ல எல்லாவற்றையும் இன்றைக்கே பேசிட்டா பாவம் எதிர் அணி தாங்க மாட்டாங்க.
மீண்டும் அடுத்தக் கட்ட வாதத்துடன் நாளை இரவு சந்திப்போம்

// அதற்கு தான் தொழில் நுட்பம் கைப்பேசி கண்டுபிடித்துள்ளது.// இருந்தாலும் நேரடியா பாத்துபேசர மாதிரி வருமா.வீட்டிலிருந்து சென்றால் இரண்டு சைடும் நேரபாத்து பேசிக்கலாம் .ஹாஸ்டலில் இருப்ப்து வெளிநாட்டு வாழ்க்கை போன்ற்து போன்,நெட்டில் வேனாபேசலாம்.ஆனா வீட்டிலிருந்து செல்வது உள்ளூர்வாழ்க்கை போன்றது எதுவென்ராலும் நேராபாத்துகலந்தாலோசிக்கலாம். // கல்லுரி பேருந்து செலவு, ஹாஸ்டல் ஃபீஸ் ஒண்ணு. அரசு பேருந்துகளில் சென்றால், செலவு குறையும்.// இப்பதான் பஸ்பாஸ்தான் வந்துவிட்டதே

மேலும் சில பதிவுகள்