பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?

அடடா... எவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் பட்டிமன்றம்!!! மக்களே... யாரும் ரெஸ்ட் எடுக்காம கிடைக்கும் நேரம் எல்லாம் இங்க ஓடி வந்து பதிவை போட்டு அசத்துங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். ;)

இன்னைக்கு நம்ம தலைப்பு அன்பு தோழி கவிசிவா தந்தது... நன்றி கவிசிவா :)

தலைப்பு:

“கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

சின்ன மாற்றத்தோடு தான் அந்த தலைப்பை கொடுத்திருக்கேன். எல்லாரும் ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டிப்பார்த்து உண்மையை சொல்லுங்கன்னு வேண்டிக்கறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும். அம்புட்டு தான் என் பேச்சு முடிஞ்சுது... இனி உங்க பேச்சை கேட்பது மட்டும் தான் என் வேலை ;) நிறைய வேலை வெச்சு, நிறைய படிக்க வெச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லன்னா தீர்ப்பை எழுத நான் ரொம்ப வேலை செய்ய வேண்டி வந்துடும். அப்படி என்னை விட்டுடமாட்டீங்கன்னு நம்பி துவங்கி இருக்கேன். இப்பவே நன்றி நன்றி நன்றி :) புது முகங்களும், வழக்கமான பட்டிமன்ற ரசிகர் மக்களும் ஆர்வமா இருக்கீங்க... வருக வருக.

கவனமா இருங்க... மற்ற ரூம் கூட இவ்வளவு ஆபத்தானது இல்லை, சமையலறை எப்பவும் கவனமா இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எவ்வளவு பெரிய பிரச்சனையில இருந்திருக்கீங்க,எனக்கு வாழ்த்து சொல்வதா முக்கியம்?

ஆனாலும் உங்களுக்கு என்னுடைய மிகப்பெரிய நனறிகள், மற்றும் தாமதமான திருமண நாள் வாழ்த்துக்கள்.

குழந்தைகள்னாலே பெற்றவர்களுக்கு அப்பப்ப ஷாக் ட்ரீட்மென்ட் குடுத்துட்டே இருப்பாங்க,இனிமே மிக ஜாக்கிறதையாக இருங்க,அதுவும் சமயல்கட்டுன்னா இன்னும் ஜாக்கிறதையா இருக்கனும், வனிதா சொன்ன மாதிரி அந்த சமயத்தில பதறாம யோசிச்சம்னாலே பிரச்சனைய சமாளிச்சிடலாம்.

என் பையனும் இந்த மாதிரி நிறைய ஷாக் ட்ரீட்மென்ட் எனக்கு குடுத்திருக்கான், 2 வயசில பாத்ரூம்க்குள்ள போய் தாழ்ப்பாள் போட்டுட்டான், பொறுமையா அவனுக்கு புரியறமாதிரி விளையாட்டா சொல்லியே திறக்க வெச்சேன், இன்னொரு சமயம் மூக்கினுள் எதையோ போட்டுக்கிட்டான் இன்னும் நிறய இருக்குங்க ......பசங்க அவங்களா புரிஞ்சு நடந்துக்கற வரைக்கும் அவங்களோட ஒவ்வொரு பருவமும் நமக்கு ஒரு பிரசவம்மாதிரி தான்.

நீங்களும் மிக நன்றாக வாதிட்டீர்கள் ஹாசனி, வாழ்த்துக்கள்.

நன்றிகள் பல அக்கா.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

மேலும் சில பதிவுகள்