பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?

அடடா... எவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் பட்டிமன்றம்!!! மக்களே... யாரும் ரெஸ்ட் எடுக்காம கிடைக்கும் நேரம் எல்லாம் இங்க ஓடி வந்து பதிவை போட்டு அசத்துங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். ;)

இன்னைக்கு நம்ம தலைப்பு அன்பு தோழி கவிசிவா தந்தது... நன்றி கவிசிவா :)

தலைப்பு:

“கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

சின்ன மாற்றத்தோடு தான் அந்த தலைப்பை கொடுத்திருக்கேன். எல்லாரும் ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டிப்பார்த்து உண்மையை சொல்லுங்கன்னு வேண்டிக்கறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும். அம்புட்டு தான் என் பேச்சு முடிஞ்சுது... இனி உங்க பேச்சை கேட்பது மட்டும் தான் என் வேலை ;) நிறைய வேலை வெச்சு, நிறைய படிக்க வெச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லன்னா தீர்ப்பை எழுத நான் ரொம்ப வேலை செய்ய வேண்டி வந்துடும். அப்படி என்னை விட்டுடமாட்டீங்கன்னு நம்பி துவங்கி இருக்கேன். இப்பவே நன்றி நன்றி நன்றி :) புது முகங்களும், வழக்கமான பட்டிமன்ற ரசிகர் மக்களும் ஆர்வமா இருக்கீங்க... வருக வருக.

//விடுதியில் தோழிகளுடன் சேர்ந்து அமர்ந்து இன்று வகுப்பறையில் நடந்த சம்பவங்கள், கேலிகள்,கூத்துகள் போன்றவற்றை அசை போட்டு ஜாலியாக அரட்டை அடிப்பதெல்லாம் வீட்டிற்க்கு சென்றால் வருமா?// ஏன் வராது,நாங்கலெல்லாம் சாப்பிடும்போதும்,அடுப்படியில் வேலைபாக்கும் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டே கிளாசிலநடந்தத பேசும்போது அவங்களூம் அவங்க வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமானதையெல்லாம் சொல்லுவாங்க. அப்புரம் எதிரணிக்கு முக்கியமா ஒன்னு சொல்கிரேன்.வீட்டு வேலைக்கு பயந்துபோய் ஹாஸ்டலில் இருந்து சோம்பேரியாகிவிடுகிரீர்கள்.

டுவர் அவர்களே,
வணக்கம்.எனது சாய்ஸ் விடுதிதாங்க‌.விடுமுறை நாட்களில் ஆனந்தமா எத்தனை மணிக்குனா எழுந்து நம்ம‌ அறைதோழி லைன்லெ நின்னு வாங்கி வைத்த‌ டிபனை சாப்பிட்டு மறுபடியும் தூங்கி அன்று முழுவதும் தோழிக்ள் விருப்பம் போல் ஆடுவதும் பாடுவதும்,கடிஜோக்ஸ்ம்,அரட்டையும் இடைஇடையே நொறுக்கு தீனியும் ஹாஹா ஆனந்தம் ஆனந்தமே/அதை அனுப்பவித்தவர்களுக்குதாங்க‌ தெரியும் விடுதி வாழ்க்கை இன்பம்.நானும் விடுதியில் தங்கி படித்தவள்.அம்மா மடியிலேயே வாழ்ந்துட்டு தலைவாரக்கூட‌ தெரியாமல் அழுது நின்னப்போ தாயாய்,சகோதிரியாய்,மதனியாய்,அண்னியாய்,கொழுந்தியாய்,புதிய‌ உறவுகளாய் தோழிகள் அரவனைத்தது இன்றுவரை மறக்கமுடியாத்துங்க.விடுதி வாழ்க்கைக்கு வலுவூட்ட‌ பதிவிட‌ மறுபடியும் வருவேங்க‌
.
ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

நடுவர் அவர்களே,

எனது சாய்ஸ் விடுதி வாழ்க்கை தாங்க‌.நானும் விடுதியில் தங்கி படித்தவள்.நான் விடுதியில் கற்றுக்கொன்ட‌ வாழ்க்கைபாடம் மறக்கமுடியாததுங்க‌.தோழிகள் மதனி,மாமி,அக்கா,தங்கை,அம்மா,கொழுந்தி என்று உறவுகளாய் பழகியது.இளமை குறும்புகள் செய்து ரகசியமாய் கலாய்துகொள்வது.களவும் கற்றும் மறந்தது.தப்பு செய்து மாட்டிக்கொள்ளும்போதுரக்சியமாய் சிரித்துகலாய்பது அதெல்லாம் மறக்கமுடியாத‌ ஆன்ந்தம் ஆனந்தமே.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பதே சிறந்தது? என்ற அணியில் பேச உள்ளேன்...

படிக்கும் வரை தான் ஹாஸ்டல்... அதுக்கு பிறகு வீட்ல தானே இருக்கப் போறோம்... அந்த கொஞ்ச காலமாவது நம்ம ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா இருக்கலாமே...

வீட்ல இருந்து படிக்கறாதால தினமும் அலைச்சல் தான் அதிகமா இருக்கும்... ஒவ்வொரு நாளும் நாம பத்திரமா போயிட்டு வரணுமேன்னு பெத்தவங்க கவலைப்பட்டுக்கிட்டு இருப்பாங்க.. ஹாஸ்டல்னா அவங்க கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க...

நமக்கு எதுவும் பிரச்சனைனாலும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஹெல்ப் பண்ணுவாங்க...
வாதங்களுடன் பிறகு வருகிறேன் நடுவரே...

கலை

அன்பு நடுவரே......பண்புள்ள‌ எதிரணித்தோழர் தோழிகளே.... பாசக்கார‌ டேஸ்காலர் அணித்தோழர் தோழிகளே.....(சாலமன் பாப்பையா ஸ்டைலில் படிக்கவும்) அனைவருக்கும் காலை வணக்கமுங்க‌..

என்னதான் ஹாஸ்ட்டல்ல‌ இருந்து படிச்சாலும் வீட்டிலிருந்து போய்வருவதில் இருக்கும் ஸ்வாரஸ்ம் தனிதான்னுன் சொல்லவே இந்தபதிவு.....

காலை: என்னடி சீதா ரேணுவ‌ இன்னும் காணோம்? ஆமாம் கிருத்தி நாந்தா அவ‌ வீட்டுல‌ பார்த்துட்டு வந்தேனா? போயிருந்தா இழுத்துட்டு வந்திருப்பேன்ல‌.....ஏந்தா இப்படி பண்றாலோ? மணி 8.15 இன்னும் ஐந்து நிமிடத்தில் பஸ் வந்திடும்....
அதோ பஸ் வருதே.....:‍(
அப்பொழுது, அப்பாவுடன் டூவீலரில் வந்து புத்தம்புது ஃபிராக் சுடியுடன் இறங்குகிறாள் ரேணு....
ஏன்டி இவ்வளவு லேட் அப்பா பேச‌ நேரமில்லை நாங்க‌ கிளம்புறொம்னு ரேணுவ‌ இழுத்து பஸ் உள்ளார‌ தள்ளி அப்பாக்கு டாட்டாவை ஜன்னலில் சொல்லிட்டு... என்னடா புது டிரஸ் யாரும் ஹாப்பி பர்த்டே சொல்லலைன்னு நினைக்கும்போது.நடு பஸ்ல‌ இருந்து சத்தம்வரும்.......போன‌ ஸ்டாப்பிலெல்லாம் ஏறிய‌ பிரண்ஸ் கேக் சகிதம் என் பிறந்தநாள் பாடல்பாடும்போது வரும் ஸ்வாரஸ்யம்....:))
என்னதான் ஹாஸ்டலில் தோழீஸ் தெரியாமல் அரேஞ் பண்ணினாலும் கம்மியாதான் நடுவரே இருக்கும்........

பஸ்ஸில் இடி மன்னர்களாம் இடிக்க‌ விடுவாங்களா? நம்முடைய‌ வகுப்பு மற்றூம் கல்லூரி தோழர்கள்....? எதுக்கு முன்னமே பஸ்ல‌ ஏறி சீட் போடறதாம்.இதிலிருந்து நம்மை காக்கத்தான்...

நடுவரே, என் மாமா சுகாதார‌ ஆய்வாளர்....அவர் பெண் ஹாஸ்டலில் இருக்கும்போது காண‌ சென்றிருந்தோம்.சர்ப்ரைசாக‌ கிச்சன்ல‌ பரிசோதனை செய்தோம்......சமையல் காரரின் கைகளில் கொசகொச‌ முடியுடன்நகங்கள் வெட்டாமல், உரிய‌ காற்றிற்கு சன்னல்கள் இல்லாமல் சேச்சே....மாமா அன்றீலிருந்து அவளை டேஸ்காலர்ல‌ விட்டுட்டார்.....

அடுத்து கமெண்ட்ஸ் ஃபார் ப்ரொஃபசர்ஸ்.ஏன் அம்மா,அப்பா,தங்கை,தம்பிகளுடன் சகஜமாக‌ பழக‌ இது ஒரு சந்தர்ப்பம் நடுவரே....சின்ன‌ சின்ன‌ விஷயங்களை அவர்களிடம் ஷேர் பண்ணினா அவங்க‌ ரியாக்சனையும் நாம் தெரிஞ்சுக்கலாம். அதுபோக‌ நாம் என்ன‌ செய்கிறோம் நமக்கு கல்லூரில‌ எந்த‌ அளவு மதிப்பு இருக்குன்னு அவங்களும் தெரிந்து சந்தோஷப்படுவாங்களே.....நம்முடைய‌ தோழர் தோழிகளை அவங்களுக்கு இன்ட்ரடியூஸ் பண்ணினால் அவங்களும் இளமையா இருக்க‌ மறைமுகமா இது ஹெல்ப்பண்ணும் நடுவரே.....மீண்டும் வருகிறேன் நடுவரே.....

////படிக்கும் வரை தான் ஹாஸ்டல்... அதுக்கு பிறகு வீட்ல தானே இருக்கப் போறோம்... அந்த கொஞ்ச காலமாவது நம்ம ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா இருக்கலாமே...////

நல்லா கெளப்புறாங்கையா பீதிய‌ படிச்சு முடிச்சதும் வீட்டில‌ இருப்பாங்களாம். வீட்டு அட்மாஸ்பியர் பிடிக்கலைன்னு சொல்லிட்டு தகுந்த‌ வேலைய‌ பார்த்துட்டு திரும்ப‌ வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்ட்டல் போயிடுவாங்க‌....அப்படி இல்லையா நல்ல‌ வரன் வந்தா கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கு போயிடுவாங்க‌.உங்க‌ இளமைகாலத்தை குடும்பத்துடன் இருந்து கழித்தால் வீட்டின் சூழ்நிலையும் புரியுமல்லவா? அப்பா என்ன‌ பண்ணி ஃபீஸ் கட்றார்? அதில் நாம‌ எப்படி மிச்சம் பண்ணலாம்? இந்த‌ யோசனைகள் வரும் உங்களின் மனதில் அலசி நல்ல‌ முடிவெடுக்க‌ உதவும். நல்ல‌ வழியில் வாழ்வு செல்ல‌ அனுமதிக்கும்.

மீண்டும் வரேன் நடுவரே.....

காலேஜ் படிக்கும் போது ஹாஸ்டல் தங்கினாலும், வேலை பார்க்கும் போது ஹாஸ்டல் தங்கினாலும் அந்த‌ அனுபவமே தனிதான். ஹாஸ்டல் பெஸ்ட் நம்ம‌ வீட்டுலா உள்ளவங்களுக்காக‌ ந்ம்ம‌ அட்ஜஸ்ட் பன்னி போகாலாம்.நம்மளுக்காக‌ வீட்டுலா உள்ளவங்க அட்ஜஸ்ட் பன்னி போகாலாம்.ஆனால் யாருனே தெரியாம‌ பிரண்ட் ஆன‌ பிறகு நம்மக்காக‌ எவ்வளவு அட்ஜஸ்ட் பன்னி போறாங்க‌.நம்ம் அவங்க‌ளுக்காக‌ எவ்வளவு அட்ஜஸ்ட் பன்னி போறோம்.நம்ம‌ சகோதரிகள் நம்மளோட‌ ஒரு பொருள் பிடிச்ச‌ கேட்பாங்கா (ட்ரஸ்,கீளிப்) நம்ம‌ தரமாட்டோம். ஆனால் நம்ம‌ பிரண்ட் கிட்ட‌ மாத்திப்போம்.நம்ம‌ வீட்டை பற்றி நம்ம‌ சொல்லுவோம். அவங்க‌ வீட்டை பற்றி அவங்க‌ சொல்லுவங்கா.இது நீங்க கேட்கலாம் காலேஜ் ல‌ பேசலாம்னு. ஆனால் இவ்வளவு விபரம் காலேஜ் ல‌ பேசனா படிக்க முடியாது.ஹாஸ்டல் வந்து மாலை நேரத்துல‌ இவ்வளவும் பகிர்ந்துக்கலாம். இப்படி ஹாஸ்டல் தங்கி பிரண்ட் ஆகும் போது நம்ம‌ பேமிலியும் அவங்களோட‌ பேமிலியும் கூட‌ பிரண்ட் ஆகுறது உண்டு.அவங்க‌ வீட்டுல‌ இருந்து அவள‌ பார்க்க வரும்போது நம்மக்கும் சேர்த்து அவங்க‌ அட்வய்ஸ் செய்யவாங்கா நம்ம‌ வீட்டுல‌ இருந்து நம்ம்ள‌ பார்க்க வரும்போது அவளையும் சேர்த்து பார்த்துடு போவங்கா.இதை நம்ம‌ வீட்டு லா இருந்து காலேஜ் போகும்போது நம்ம‌ அம்மாவுக்கு நம்ம‌ ப்ரண்டுங்கள பற்றி அவ்வளவு தெரிய‌ சான்ஸ் இல்லை

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நடுவா் அவா்களே என் அணியினா் சொன்னது மிக மிக சரு,வீட்டிலிருந்து சென்றாலும் அன்ைறைய நாள்வகுப்பில் நடந்ததை வீட்டிலுள்ள்வா்களிடம் கேளி,கிண்டல்,நக்கல்,நையாண்டி கலந்து பேசும்போது யாா்தான் கேட்கமாட்டாங்க,அந்த அனுபவமே தனிதானே பா,கல்யாணம் முடிந்து கனவன் வீட்டுக்கு போனபிறகு இப்படி நம்ம வீட்ல உள்ளவங்க கிட்ட் நேரம் செலவளிக்க முடியுமா பா.
வகுப்பில் நடந்ததை விடுதி தோழிங்ககூட மட்டும் தான் கலாய்ச்சி பேசனும்னு இல்ல,நம்மகூட நம்மூா்ல படிக்கிற தோழிங்ககூட சைக்கிள்ல போகும்போதோ,பேருந்துல போகும்போதோ,நடந்து போகும்போதோ கெமன்ட் பண்ணி பேசிட்டே போகறப்ப கிடைக்கற மகிழ்ச்சி இருக்கே அது விடுதில தஙகிருந்தா கிடைக்குமா?
அதனால் வீட்டிலிருந்து போய் வருவதே சிறந்தது,சுவாரசியமானது,மறக்கமடியாதது

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

எதிா் அணியின் வாதத்தில் சிறிய மாற்றுக்கருத்தும் உள்ளது,வீட்ல இருந்து ேபோனால் ஏன் நம்ம அம்மா அப்பாவபத்தி அவங்களுக்கு தொியாது,நம்ம தோழிங்க நம்மகிட்ட பேச சந்தேகம் கேட்க அடிக்கடி போன் பண்ணுவாங்க அப்ப நம்ம அம்மாகிட்டேயும் பாசமா(நம்ம அம்மாவையும் அம்மான்னுதான் கூப்பிடுவாங்க)பேசுவாங்க ,அப்படி அடிக்கடி பேசும்போது நம்ம வீட்டுக்கும் வருவாங்களே அப்பறம் நாமளும் அவங்க வீட்டுக்கும் போவோம் இது உண்மை.
மீண்டும் வாதங்களுடன் வா்றேன் பா.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

என்னதான் வீட்டிலிருந்து போனாலும், ஹாஸ்டல் உள்ள‌ சந்தோஷம் கிடைக்கவே கிடைக்காது.நம்மள பற்றி நம்ம‌ அப்பா அம்மாவுக்கு நல்ல‌ தெரியும்.யாருனே தெரியாத‌ ஒருத்தங்க‌ கூட‌ நம்ம‌ தங்கி படிக்கும்போது அவங்கல பற்றி நல்ல‌ புரிஞ்து கொள்ள‌ ஒரு சான்ஸ், பாத்துரூம்க்கு வெளியே வெயிட் பன்னும்போது, ட்ரஸ் மாத்திக்கும் போது அது சான்ஸ்ஸே இல்லை. இது வீட்டு லா இருந்து போகும்போது கிடைக்குமா..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்