பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?

அடடா... எவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் பட்டிமன்றம்!!! மக்களே... யாரும் ரெஸ்ட் எடுக்காம கிடைக்கும் நேரம் எல்லாம் இங்க ஓடி வந்து பதிவை போட்டு அசத்துங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். ;)

இன்னைக்கு நம்ம தலைப்பு அன்பு தோழி கவிசிவா தந்தது... நன்றி கவிசிவா :)

தலைப்பு:

“கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

சின்ன மாற்றத்தோடு தான் அந்த தலைப்பை கொடுத்திருக்கேன். எல்லாரும் ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டிப்பார்த்து உண்மையை சொல்லுங்கன்னு வேண்டிக்கறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும். அம்புட்டு தான் என் பேச்சு முடிஞ்சுது... இனி உங்க பேச்சை கேட்பது மட்டும் தான் என் வேலை ;) நிறைய வேலை வெச்சு, நிறைய படிக்க வெச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லன்னா தீர்ப்பை எழுத நான் ரொம்ப வேலை செய்ய வேண்டி வந்துடும். அப்படி என்னை விட்டுடமாட்டீங்கன்னு நம்பி துவங்கி இருக்கேன். இப்பவே நன்றி நன்றி நன்றி :) புது முகங்களும், வழக்கமான பட்டிமன்ற ரசிகர் மக்களும் ஆர்வமா இருக்கீங்க... வருக வருக.

அனைவருக்கும் வணக்கம் , பட்டிமன்றம் நடுவுல ஆடியன்ஸ் கூட்டத்தில இருந்து ஒருத்தி நுழைந்துவிட்டேன் மன்னிக்கவும்.

இந்த 2 அனுபவமும் எனக்கு இருக்குங்கிறதால எதுல பேசறதுனு யோசிச்சுக்கிட்டு இருன்தேன் யோசிச்சிக்கிட்டே இருந்தா பட்டிமன்றமே முடிந்துபோய்விடும்னு ,டபால்னு குதிச்சுட்டேன்.

என்னோட ஓட்டு ஹாஸ்டல் வாழ்க்கைக்கு தான்,ஏன்னா ஹாஸ்டலில் மட்டும்தான் பல அனுபவங்கள் நமக்கு கிடைக்கும் ,வீட்டில இருக்கிறவங்களுக்கு நாம இப்படிதான்னு தெரியும்,ஆனா ஹாஸ்டலில் அப்படி கிடையாது, நமக்கும் அவர்களை தெரியாது அவர்களுக்கும் நம்மை தெரியாது,இந்த மாதிரி சமயத்திலேதான் நமக்கு நிறய மனித குணங்களை புரிந்துகொள்வதற்க்கான வாய்ப்புகள் அமையும்,பின்னாடி வேளைக்கு செல்லும்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அது மட்டும் அல்ல வாழ்க்கையில் அட்ஜஸ்மென்ட் என்கிற ஒரு வார்த்தையின் அர்த்தமே நமக்கு மிக தெளிவாக புரியும்.

ஒரு கஸ்டம்னு வந்தா எப்படி சமாளிக்கறது, கூட இருப்பவங்களோட எப்படி அனுசரித்துப்போவது,சகிப்புத்தன்மை,பகிர்தல்,புரிதல்னு பல விசயங்களை ஒரு டீச்சர் இல்லாமலேயே நாமே கத்துக்க முடியும்.

//வீட்டிலிருந்து போவதால் சாப்பாடு பற்றிய கவலையே இருக்காது.. ஹெல்தியான வீட்டுச் சாப்பாடு 3 வேளைக்கும்... ஆனால் ஹாஸ்டலில் அப்படியா? //
அட ! நாம என்னங்க காலம் முழுசுமா ஹாஸ்ட்டலில் இருந்திடப் போறோம், சாப்பாடப் பற்றி கவலைப் படுவதற்க்கு?? ஹாஸ்ட்டல் வாழ்க்கை முடிஞ்சி அப்புறம் வாழ் நாழ் முழுக்க வீட்டு சாப்பாடுதான்.. மட்டுமா நமக்குத்தான் எதையும் தாங்கும் இதயத்தோட கூடவே எதையும் தாங்கும் வயிறும் இருக்கே, அதனால ஹாஸ்ட்டல் சாப்பாடெல்லாம் ஒரு மேட்டரே இல்லீங்க. அந்த வயசுல, வீட்ல இருந்தாலும் ஸ்டைலு, ஃபேஷன்,வெயிட் போட்டுடும்ன்னு யாருமே சாப்பாட்டுக்கு முக்கியம் தருவது கிடையாது.இன்னும் சொல்லப் போனால் நாள் முழுக்க சாப்பாட்டைப் பற்றி குறை சொல்றவங்களுக்கு ஹாஸ்ட்டலில் இருந்தால் தான் வீட்டு சாப்ப்பாட்டோட அருமையே தெரியும்.

கூடவே விடுதியில் வேறு மாவட்ட, மாநில, வெவ்வேறு குடும்ப அமைப்புகள், சமுதாய பின்னணிகள்ன்னு பலதரப் பட்ட மாணவர்கள் இருப்பாங்க. அவர்களிடமிருந்து விதவிதமான பழக்க வழக்கங்களையும், கலாச்சார பின்னணிகளையும் நாம் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. அது மட்டுமா? விடுதியில் பல திறைமைசாலி தோழிகளிடமிருந்து எத்தனை விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கிறது.நீங்களே சொல்லுங்க நடுவரே, விடுதியில் தோழிகளிடமிருந்து மெஹந்தி போடுவது, புத்தகத்தில் கோலம் வரைந்து பழகுவது, நடனம் கற்றுக் கொள்ளவ்து என்று எத்தனையோ திறைமைகளை புதிதாக படிப்பதுடன் அவற்றை வளர்த்துக் கொள்வதற்க்கும், பின்னாளில் (இந்நாள் வரை) அதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவதுடன் விடுதியில் என் தோழி கற்றுக் கொடுத்தாள் என்று வாய் நிறைய சொல்லி மகிழ்வதும் மெய்தானே.
வரட்டுமா?? மீண்டும் சந்திப்போம்

சாப்பாடு பத்தி பெருசா சொல்றாங்க‌, சாப்பாடு நல்லாவே இல்லைனாலும் ப்ரெண்ட்ஸ் கூட‌ அரட்டை அடிச்சு சாப்பிட்டா டேஸ்ட் லாம் பெரிய‌ மேட்டரே இல்ல‌, ஏன் நம்ம‌ அம்மா சாப்பாடை நம்ம‌ குறை சொல்லாம‌ இருந்த்துருப்போப்பாமா என்ன‌? இதுலாம் சாப்பாடு விசயத்துல‌ சகஜம்.......

படிக்கும் போது ஹாஸ்டல் தோழி ஒருத்திக்கு உடம்பு சரி இல்ல‌, நாங்க‌ பர்மிஷன் வாங்கிட்டு அவளை போய் பார்த்தோம், அப்போ அவ‌ கூட‌ ஃப்ரெண்ட்ஸ் சீனியர், ஜுனியர் எல்லாரும் ஒரே இடத்துல‌ அவளை பாசமா கவனிச்சசுகிட்ட‌து, அப்பா, அம்மாவ‌ மிஞ்சிட்டாங்க‌ போங்க‌,

நான் ஹாஸ்ட்ல‌ தங்கி படிக்கலேனாலும், ஒரு நாள் ஹாஸ்டல் டே பங்சன் பார்க்கிற‌, கலந்துகிற சான்ஸ் எனக்கு கிடைச்சது, போட்டி, டான்ஸ்,ட்ராமா....etc

அன்னைக்கு ஃபுல் டே ப்ரெண்ட்ஸ் கூட‌ பண்ண‌ அலும்பு, அனுபவிச்ச‌ சந்தோசம் என் லைப்ல‌ எப்பவும் மறக்க‌ முடியாது,

என்ன தான் வீட்லேந்து போய் வரும் போது ப்ரெண்ட்ஸ் இருந்தாலும், ஹாஸ்டல் ப்ரெண்ட்ஸ் மாதிரி வரவே வராது, அந்த‌ அளவுக்கு நெருக்கம் இருக்குமுனு சொல்ல‌ முடியாது........

\\\அம்மா மடியிலேயே வாழ்ந்துட்டு தலைவாரக்கூட‌ தெரியாமல் அழுது நின்னப்போ தாயாய்,சகோதிரியாய்,மதனியாய்,அண்னியாய்,கொழுந்தியாய்,புதிய‌ உறவுகளாய் தோழிகள் அரவனைத்தது இன்றுவரை மறக்கமுடியாதுங்க\\\

ர‌.அம்மா சொல்வது முற்றிலும் உண்மை, உண்மை,உண்மை ..... வீட்ல‌ இருந்து வளர்வதால் எதையும் தன்னிச்சையாக‌ செய்யும் திறன் வளராமலே, ஏன் இல்லாமலே போய்டுதுங்க‌..........

ம்ம் விடுதி டீம் கலை கட்டுதே, இதுலேந்தே தெரியலையா எது சுவாரசியமானதுனு,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நடுவர் அவர்களே,

ஹாஸ்டல் வாழ்க்கைல சுவாரஸ்யமான விஷயம் ஒண்ணு சொல்லவா, சண்டே ஈவினிங்க்ல, ஒரே டிவில, 50,60 பேர் "அரங்கேற்ற வேலை" பாத்தோம்னா, பிரபு, ரேவதி, வி. கே. ராமசாமி மற்றும் படத்த மட்டும் இல்ல, விளம்பரத்தையும் சேர்த்து கலாச்சி, அப்ப..ப்..பா இந்த நாளில் நெனைச்சாலும் மறக்க முடியாதது” கெடக்குமா இது வீட்ல,நன்றி

உன்னை போல் பிறரை நேசி.

மாண்புமிகு நடுவர்'ங்க அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கங்கள். .
சிறந்ததும் சுவாரஸ்யமானதாகவும் பின்னாளில் மறக்க முடியாத இனிமையான
நினைவுகளை தரக்கூடியது "ஹாஸ்டலில் தங்கிப்படிப்பதே" என்பதே என் கருத்துங்க...
விரிவான வாதங்களுடன் வருகிறேன்ங்க :-)

நட்புடன்
குணா

நான் என் பள்ளி வாழ்க்கை முழுவதும்,கல்லூரி வாழ்க்கையில் பாதியை வீட்டிலிருந்தும்,மீதி பாதியை விடுதியிலும் படித்தவள்.வீட்டில் நான் என் தவறுகள் தெரியாமலே இருந்து வந்தேன்.வீடு சொல்லித்தராத பல விடயங்களை விடுதி சொல்லித்தந்தது.என்னை எனக்கே தெரியப்படுத்தியது விடுதிதான்.

"தன் பெண்டு தன் பிள்ளை சோரு வீடு" ன்று இருந்தவளை எல்லோரைப்பற்றியும் சிந்திக்கும் படி மாற்றியதும் விடுதி வாழ்க்கை தான்.

நான் வீட்டை விட்டு இன்றைக்கு வெளியில் வாழ கற்றுத்தந்தது விடுதிதான்.

வீட்டு ஆட்களுடன் விட்டுக்கொடுப்பது அவர்கள் நம் ஊறவுகள் என்பதால்.ஆனால்,மனிதர்கள் பலவிதமானவர்கள்;அவர்களுடன் விட்டுக்கொடுப்பது பெரிய விடயம் என்பதை சொன்னது விடுதி வாழ்க்கை தான்.

மீண்டும் வருகிறேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

எல்லோரும் சாப்பாடு பத்தி பேசும்போது எனக்கும் பல விசயங்கள் நியாபகத்துக்கு வருது, நான் ஸ்கூல் படிக்கும்போது பவுர்ணமி அன்னைக்கு நைட் டின்னர் ஹாஸ்டல் மொட்டைமாடியில நிலாசோறுன்னு அப்பவே ஃபபே டைப் சாப்பாடு போடுவாங்க,அத ப்ரெண்ட்ஸ் ஓட சேர்ந்து கொண்டாடி சாப்பிட்டது இன்னைக்கும் எனக்கு ஒவ்வொரு பவுர்ணமிக்கும் நினைவு வரும்,அது மட்டும் இல்ல என் கணவரிடமும்,பையனிடமும் எப்பவுமே அந்த சந்தோச தருணங்களை பத்தி சொல்லி நாமளும் அதுபோலவே மொட்டைமாடியில போய் சாப்பிடலாம்னு சொல்லுவேன்.

சாப்பாடுன்னா நாக்குக்கு சுவை மட்டும் இல்லைங்க,அதுல பல நல்ல விசயங்களும் ஞாபங்களும் கலந்திருக்கனும்.

//உங்களோட தேவைகள நிர்வகிக்கும் பழக்கத்த கத்துக்கிரிங்க. அம்மா சொல்படி செஞ்ச நாம, இப்பதாங்க பெரிய மனுசியா மாற்கிறோம், வாழ்க்கைய கத்துக்கிறோம்.// - எவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமா சொல்லிட்டீங்க. ட்ரூ க்றிஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சோ வீட்டில் இருந்தா உங்கள் வேலைகளை நீங்க செய்ய வேண்டி இருக்காதா? ஊட்டி விடவெல்லாம் ஆள் தேடப்புடாது ஹாசனி ;) சின்ன புள்ளையாட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க... :) //நம்மூரு "அல்வாவுக்கு" மட்டுமில்ல ""அருவாளுக்கும்"" ஃபேமஸ் // - இனி நீங்க என்ன சொன்னாலும் நான் தலையாட்டுவேங்க... :(

//அது மட்டுமா விடுதியில் தங்கி இருக்கிறதால நம்முடைய எல்லா வேலைகளையும் நாமளே செய்வதுடன் அவ்வாழ்க்கை நம்மை அதிக பொறுப்புள்ளவர்களாகவும் மாற்றி விடுது.// - இப்போ தான் எதிர் அணியில் வீட்டில் இருந்தா வேலை இல்லன்னு சொன்னாங்க. பேட் கெர்ல்ஸ்.

//எந்த ஆசிரியர் எப்படி பாடம் எடுத்தார், என்னென்ன சொதப்பினார்கள் என்பதும், எந்தெந்த டீச்சருக்கு என்னென்ன பட்ட பெயர்கள் என்பதெல்லாம் வீட்ல உட்கார்ந்து யாரிடம் சொல்லி சிரிப்பீர்கள். // - எனக்கு இது பொருந்தாது, நான் வீட்டில் தான அதிகமா கேலி பண்ணி சிரிச்சுட்டு இருப்பேன். ஆனால் பலரால் நட்புகளிடம் தான் சொல்ல இயலும்... உண்மையே.

//இது மட்டுமல்ல எல்லாவற்றையும் இன்றைக்கே பேசிட்டா பாவம் எதிர் அணி தாங்க மாட்டாங்க.
மீண்டும் அடுத்தக் கட்ட வாதத்துடன் நாளை இரவு சந்திப்போம்// - 3:) வெயிட்டிங் வனி வெயிட்டிங். அருவாள் இல்லாம வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்