பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?

அடடா... எவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் பட்டிமன்றம்!!! மக்களே... யாரும் ரெஸ்ட் எடுக்காம கிடைக்கும் நேரம் எல்லாம் இங்க ஓடி வந்து பதிவை போட்டு அசத்துங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். ;)

இன்னைக்கு நம்ம தலைப்பு அன்பு தோழி கவிசிவா தந்தது... நன்றி கவிசிவா :)

தலைப்பு:

“கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

சின்ன மாற்றத்தோடு தான் அந்த தலைப்பை கொடுத்திருக்கேன். எல்லாரும் ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டிப்பார்த்து உண்மையை சொல்லுங்கன்னு வேண்டிக்கறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும். அம்புட்டு தான் என் பேச்சு முடிஞ்சுது... இனி உங்க பேச்சை கேட்பது மட்டும் தான் என் வேலை ;) நிறைய வேலை வெச்சு, நிறைய படிக்க வெச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லன்னா தீர்ப்பை எழுத நான் ரொம்ப வேலை செய்ய வேண்டி வந்துடும். அப்படி என்னை விட்டுடமாட்டீங்கன்னு நம்பி துவங்கி இருக்கேன். இப்பவே நன்றி நன்றி நன்றி :) புது முகங்களும், வழக்கமான பட்டிமன்ற ரசிகர் மக்களும் ஆர்வமா இருக்கீங்க... வருக வருக.

//இருந்தாலும் நேரடியா பாத்துபேசர மாதிரி வருமா.வீட்டிலிருந்து சென்றால் இரண்டு சைடும் நேரபாத்து பேசிக்கலாம்// - எதிர் அணி தான் லீவுக்கு போகும் போது பேசிக்கலாம்னு சொல்றாங்களே.

//வீட்டு வேலைக்கு பயந்துபோய் ஹாஸ்டலில் இருந்து சோம்பேரியாகிவிடுகிரீர்கள்.// - ஆகா!! வீட்டில் தான் வேலை அதிகமா? எதிர் அணி ஹாஸ்டலில் வேலைன்னு என்னை நம்ப வெச்சுட்டாங்களே!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க :) வணக்கம்.

//விடுமுறை நாட்களில் ஆனந்தமா எத்தனை மணிக்குனா எழுந்து நம்ம‌ அறைதோழி லைன்லெ நின்னு வாங்கி வைத்த‌ டிபனை சாப்பிட்டு மறுபடியும் தூங்கி அன்று முழுவதும் தோழிக்ள் விருப்பம் போல் ஆடுவதும் பாடுவதும்,கடிஜோக்ஸ்ம்,அரட்டையும் இடைஇடையே நொறுக்கு தீனியும்// - ஹஹஹா. அதுவும் ரூமில் இருக்கவளுக்கு உடம்பு சரி இல்லைன்னு பொய் சொல்லி சாப்பாடு மேல கொண்டு வந்திருப்பாங்க ;)

//தப்பு செய்து மாட்டிக்கொள்ளும்போதுரக்சியமாய் சிரித்துகலாய்பது அதெல்லாம் மறக்கமுடியாத‌ ஆன்ந்தம் ஆனந்தமே.// - கலக்குங்க. தொடருங்க ரஜினி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வருக வருக... :) //படிக்கும் வரை தான் ஹாஸ்டல்... அதுக்கு பிறகு வீட்ல தானே இருக்கப் போறோம்... அந்த கொஞ்ச காலமாவது நம்ம ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா இருக்கலாமே...// - ரொம்ப சரி... வெறும் 3 - 5 வருடம் அதிகபட்சம்.

//ஒவ்வொரு நாளும் நாம பத்திரமா போயிட்டு வரணுமேன்னு பெத்தவங்க கவலைப்பட்டுக்கிட்டு இருப்பாங்க.. ஹாஸ்டல்னா அவங்க கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க...// - நியாயமா தான் தெரியுது. எதிர் அணி என்ன சொல்லறாங்க பார்ப்போம். தொடருங்க கலை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//என்னதான் ஹாஸ்டலில் தோழீஸ் தெரியாமல் அரேஞ் பண்ணினாலும் கம்மியாதான் நடுவரே இருக்கும்.....// - ம்... இவங்களுக்கு ரூம்ல கேக் வெட்டுறதை விட ஒடுற பஸ்ல வெட்டினா தான் பிடிக்கும் போல ;)

//சமையல் காரரின் கைகளில் கொசகொச‌ முடியுடன்நகங்கள் வெட்டாமல், உரிய‌ காற்றிற்கு சன்னல்கள் இல்லாமல் சேச்சே....// - ப்ளீஸ்... பல வருஷம் முன்னாடி சாப்பிட்டது எல்லாம் வெளிய எட்டிபார்க்குது. ;(

//இளமைகாலத்தை குடும்பத்துடன் இருந்து கழித்தால் வீட்டின் சூழ்நிலையும் புரியுமல்லவா? அப்பா என்ன‌ பண்ணி ஃபீஸ் கட்றார்? அதில் நாம‌ எப்படி மிச்சம் பண்ணலாம்? இந்த‌ யோசனைகள் வரும் உங்களின் மனதில் அலசி நல்ல‌ முடிவெடுக்க‌ உதவும். // - ஹாஸ்டலில் இருந்தா இதெல்லாம் வராதுன்னா சொல்றீங்க? தெரியல... எதிர் அணி தான் பதில் சொல்லனும்.

தொடருங்க ரேணுகா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//யாருனே தெரியாம‌ பிரண்ட் ஆன‌ பிறகு நம்மக்காக‌ எவ்வளவு அட்ஜஸ்ட் பன்னி போறாங்க‌.நம்ம் அவங்க‌ளுக்காக‌ எவ்வளவு அட்ஜஸ்ட் பன்னி போறோம்.// - கரக்ட்டு. விட்டுக்கொடுக்கும் பழக்கம் அங்க ஆரம்பம் ஆகுது.

//இவ்வளவு விபரம் காலேஜ் ல‌ பேசனா படிக்க முடியாது.ஹாஸ்டல் வந்து மாலை நேரத்துல‌ இவ்வளவும் பகிர்ந்துக்கலாம். இப்படி ஹாஸ்டல் தங்கி பிரண்ட் ஆகும் போது நம்ம‌ பேமிலியும் அவங்களோட‌ பேமிலியும் கூட‌ பிரண்ட் ஆகுறது உண்டு// - உண்மை. கல்லூரியில் ரூம் மெட்டை கண்டா கூட சிரிப்போடு போயிடும்.

//அவங்க‌ வீட்டுல‌ இருந்து அவள‌ பார்க்க வரும்போது நம்மக்கும் சேர்த்து அவங்க‌ அட்வய்ஸ் செய்யவாங்கா நம்ம‌ வீட்டுல‌ இருந்து நம்ம்ள‌ பார்க்க வரும்போது அவளையும் சேர்த்து பார்த்துடு போவங்கா.// - நமக்குலாமும் சேர்த்து சமைச்சு கொண்டு வருவாங்க.

நல்லா மலரும் நினைவுகள் கொண்டு வந்திருக்கீங்க கனகா... ஐ லைக் இட் :) தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//கல்யாணம் முடிந்து கனவன் வீட்டுக்கு போனபிறகு இப்படி நம்ம வீட்ல உள்ளவங்க கிட்ட் நேரம் செலவளிக்க முடியுமா பா.// - உண்ம தான்... எதிர் அணி ஃப்ரெண்ட்ஸ் கூட நேரம் ஒதுக்க முடியாதுன்னு ஃபீல் பண்றாங்களே!!

//அப்படி அடிக்கடி பேசும்போது நம்ம வீட்டுக்கும் வருவாங்களே அப்பறம் நாமளும் அவங்க வீட்டுக்கும் போவோம் இது உண்மை.// - இதுவரை நான் கேட்டடில்லை வீட்டில் இருந்து வரும் தோழிகள் வீட்டுக்கு ஹாஸ்டலில் இருப்பவர் யாரும் போவதில்லை... அவரை போல யாரும் வீட்டில் இருந்து(அதுவும் ஒரே ஊரா இருந்தா, பக்கம் பக்கமா இருந்தா) போவாங்க.

தொடருங்க ஹாசனி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க :) //ஆடியன்ஸ் கூட்டத்தில இருந்து ஒருத்தி நுழைந்துவிட்டேன் மன்னிக்கவும்.// - மன்னிப்பெல்லாம் கிடைக்காது இங்க... ஒன்லி பனிஷ்மண்ட்... பட்டி முடியும் வரை தொடர்ந்து பங்கெடுத்து பதிவிடனும்னு தீர்ப்பு சொல்றேன் ;)

//இந்த 2 அனுபவமும் எனக்கு இருக்குங்கிறதால எதுல பேசறதுனு யோசிச்சுக்கிட்டு இருன்தேன் யோசிச்சிக்கிட்டே இருந்தா பட்டிமன்றமே முடிந்துபோய்விடும்னு ,டபால்னு குதிச்சுட்டேன்// - குதிச்சத நான் அப்ரிஷியேட் பண்றேன்.

//ஹாஸ்டலில் மட்டும்தான் பல அனுபவங்கள் நமக்கு கிடைக்கும் ,வீட்டில இருக்கிறவங்களுக்கு நாம இப்படிதான்னு தெரியும்,ஆனா ஹாஸ்டலில் அப்படி கிடையாது, நமக்கும் அவர்களை தெரியாது அவர்களுக்கும் நம்மை தெரியாது,இந்த மாதிரி சமயத்திலேதான் நமக்கு நிறய மனித குணங்களை புரிந்துகொள்வதற்க்கான வாய்ப்புகள் அமையும்,பின்னாடி வேளைக்கு செல்லும்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அது மட்டும் அல்ல வாழ்க்கையில் அட்ஜஸ்மென்ட் என்கிற ஒரு வார்த்தையின் அர்த்தமே நமக்கு மிக தெளிவாக புரியும்.// - ரொம்ப சரியா சொன்னீங்க. வீட்டில் இருப்பவர்கள் நாம் அறியாமலே நமக்காக பலதும் செய்து, அட்ஜஸ் பண்ணிக்குவாங்க.

சூப்பர் துவக்கம் அனு... தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ... நீங்க அதுக்கு முன்னாடியே வந்தாச்சா ;)

//நாம என்னங்க காலம் முழுசுமா ஹாஸ்ட்டலில் இருந்திடப் போறோம், சாப்பாடப் பற்றி கவலைப் படுவதற்க்கு?? ஹாஸ்ட்டல் வாழ்க்கை முடிஞ்சி அப்புறம் வாழ் நாழ் முழுக்க வீட்டு சாப்பாடுதான்.. மட்டுமா நமக்குத்தான் எதையும் தாங்கும் இதயத்தோட கூடவே எதையும் தாங்கும் வயிறும் இருக்கே, அதனால ஹாஸ்ட்டல் சாப்பாடெல்லாம் ஒரு மேட்டரே இல்லீங்க.// - கரக்ட்டு தான். ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கலன்னாலும் இருக்கவே இருக்கு கேண்டீன் சாப்பாடு. :P கூடவே எப்பவாது வீட்டுக்கு போய் சாப்பிடும் போது அம்மா சமையல் கூட வழக்கத்தை விட அசத்தலா தோனும்.

//விடுதியில் பல திறைமைசாலி தோழிகளிடமிருந்து எத்தனை விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கிறது.நீங்களே சொல்லுங்க நடுவரே, விடுதியில் தோழிகளிடமிருந்து மெஹந்தி போடுவது, புத்தகத்தில் கோலம் வரைந்து பழகுவது, நடனம் கற்றுக் கொள்ளவ்து என்று எத்தனையோ திறைமைகளை புதிதாக படிப்பதுடன் அவற்றை வளர்த்துக் கொள்வதற்க்கும், பின்னாளில் (இந்நாள் வரை) அதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவதுடன் விடுதியில் என் தோழி கற்றுக் கொடுத்தாள் என்று வாய் நிறைய சொல்லி மகிழ்வதும் மெய்தானே.// - கரக்ட்டு தான். பேப்பரில் அழகழகா பண்ற வேலையெல்லாம் விடுதியில் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்.

தொடருங்க வாணி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஏன் நம்ம‌ அம்மா சாப்பாடை நம்ம‌ குறை சொல்லாம‌ இருந்த்துருப்போப்பாமா என்ன‌? இதுலாம் சாப்பாடு விசயத்துல‌ சகஜம்.......// - அதே அம்மா செய்து கொடுத்துவிட்ட புளிக்காச்சல் இப்போ அருமையா இருக்கும் தெரியுமா?

//அவ‌ கூட‌ ஃப்ரெண்ட்ஸ் சீனியர், ஜுனியர் எல்லாரும் ஒரே இடத்துல‌ அவளை பாசமா கவனிச்சசுகிட்ட‌து, அப்பா, அம்மாவ‌ மிஞ்சிட்டாங்க‌ போங்க‌,// - யார் கவனிச்சாலும் அந்த நேரம் வீட்டை தேடும் தானே சுபி??

தொடருங்க சுபி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஹாஸ்டல் வாழ்க்கைல சுவாரஸ்யமான விஷயம் ஒண்ணு சொல்லவா, சண்டே ஈவினிங்க்ல, ஒரே டிவில, 50,60 பேர் "அரங்கேற்ற வேலை" பாத்தோம்னா, பிரபு, ரேவதி, வி. கே. ராமசாமி மற்றும் படத்த மட்டும் இல்ல, விளம்பரத்தையும் சேர்த்து கலாச்சி, அப்ப..ப்..பா இந்த நாளில் நெனைச்சாலும் மறக்க முடியாதது” கெடக்குமா இது வீட்ல// - நோ வே... கிடைக்கவே கிடக்காதுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்