பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?

அடடா... எவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் பட்டிமன்றம்!!! மக்களே... யாரும் ரெஸ்ட் எடுக்காம கிடைக்கும் நேரம் எல்லாம் இங்க ஓடி வந்து பதிவை போட்டு அசத்துங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். ;)

இன்னைக்கு நம்ம தலைப்பு அன்பு தோழி கவிசிவா தந்தது... நன்றி கவிசிவா :)

தலைப்பு:

“கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

சின்ன மாற்றத்தோடு தான் அந்த தலைப்பை கொடுத்திருக்கேன். எல்லாரும் ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டிப்பார்த்து உண்மையை சொல்லுங்கன்னு வேண்டிக்கறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும். அம்புட்டு தான் என் பேச்சு முடிஞ்சுது... இனி உங்க பேச்சை கேட்பது மட்டும் தான் என் வேலை ;) நிறைய வேலை வெச்சு, நிறைய படிக்க வெச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லன்னா தீர்ப்பை எழுத நான் ரொம்ப வேலை செய்ய வேண்டி வந்துடும். அப்படி என்னை விட்டுடமாட்டீங்கன்னு நம்பி துவங்கி இருக்கேன். இப்பவே நன்றி நன்றி நன்றி :) புது முகங்களும், வழக்கமான பட்டிமன்ற ரசிகர் மக்களும் ஆர்வமா இருக்கீங்க... வருக வருக.

அணி தேர்வு பண்ணியாச்சு... வாதத்தோடு வாங்க :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//"தன் பெண்டு தன் பிள்ளை சோரு வீடு" ன்று இருந்தவளை எல்லோரைப்பற்றியும் சிந்திக்கும் படி மாற்றியதும் விடுதி வாழ்க்கை தான்.// - எல்லாரும் ஆமோதிகும் ஒரு பாயிண்ட்.

தொடருங்க கௌரி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பவுர்ணமி அன்னைக்கு நைட் டின்னர் ஹாஸ்டல் மொட்டைமாடியில நிலாசோறுன்னு அப்பவே ஃபபே டைப் சாப்பாடு போடுவாங்க,// - ஆகா!! நீங்க நல்ல ஹாஸ்டலில் இருந்தீங்க போலவே!

தொடருங்க அனு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே நீங்க‌ சொல்றது கரெக்ட் தான்,

//அதே அம்மா செய்து கொடுத்துவிட்ட புளிக்காச்சல் இப்போ அருமையா இருக்கும் தெரியுமா?// ஆமாம் அது ஹாஸ்டலுக்கு போனா தான் நல்லா தெரியும்ங்கிறேன்...
நம்ம‌ அம்மா, வீட்ல‌ உள்ளவங்க‌ பத்திலாம் நல்லா புரிஞ்சிக்க‌ ஹாஸ்டல் உதவியா இருக்கும்னு சொல்றேன்,

//யார் கவனிச்சாலும் அந்த நேரம் வீட்டை தேடும் தானே சுபி??// கண்டிப்பா தேடும், வீட்ல‌ இருந்தா அவங்க‌ மட்டும் தான் பார்ப்பாங்க‌, ஹாஸ்டல்ல‌ இருந்தா 2 பக்கமும் பாசம் கிடைக்கும்ல‌,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நடுவர் அவர்களே,
விடுதியில் படித்ததால் நாம் கற்றுக்கொண்டது எல்லாவேலையையும் பகிர்ந்து கொள்வது,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது,தேவையான நேரத்தில் தேவையான‌ உத்வி செய்வது,ஒருவருக்கொருவர் லிமிட் அறிந்து பழகுவது,கவலையுடன் உள்ள‌ தோழியை கலாய்து சிரிக்க‌ செய்வது.பொதுவாக‌ விடுதியில் படித்தவர்கள் தனிதிறமையுடன் ஆளுமை வளர்ச்சியுடன் எந்த‌ சூழ்னிலையுலும் தைரியமாக‌ செயல்படும் ஒரு மனப்பக்குவத்துடன்வாழ்வதை பார்க்கலாம் என்பதே எனது கருத்துங்க‌.
ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

//யார் கவனிச்சாலும் அந்த நேரம் வீட்டை தேடும் தானே சுபி??// கண்டிப்பா தேடும், வீட்ல‌ இருந்தா அவங்க‌ மட்டும் தான் பார்ப்பாங்க‌, ஹாஸ்டல்ல‌ இருந்தா 2 பக்கமும் பாசம் கிடைக்கும்ல‌,// வீட்ல இருந்தா 2பக்கமும் கிடைக்கும் பாசம்,அக்கறை எல்லாம் ஒரே இடத்துல கிடைக்கும்ல?இதை யாராலும் மறுக்க முடியுமா? என்ன இருந்தாலும் அம்மா அப்பாவுக்கு யாரும் ஈடாக முடியுமா?

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

//
விடுதியில் படித்ததால் நாம் கற்றுக்கொண்டது எல்லாவேலையையும் பகிர்ந்து கொள்வது,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது,தேவையான நேரத்தில் தேவையான‌ உத்வி செய்வது,ஒருவருக்கொருவர் லிமிட் அறிந்து பழகுவது,கவலையுடன் உள்ள‌ தோழியை கலாய்து சிரிக்க‌ செய்வது.பொதுவாக‌ விடுதியில் படித்தவர்கள் தனிதிறமையுடன் ஆளுமை வளர்ச்சியுடன் எந்த‌ சூழ்னிலையுலும் தைரியமாக‌ செயல்படும் ஒரு மனப்பக்குவத்துடன்வாழ்வதை பார்க்கலாம்//பகிா்ந்து கொள்வது,விட்டுக்கொடுப்பது,உதவி செய்வது எல்லாமே அவங்கள வளா்க்கும்போது அவங்க அப்பா அம்மா சொல்லிக்கொடுத்ததாகத்தானே இருக்க வேண்டும்,அப்படி இருக்கையில் விடுதியில் தங்கிப்படிப்பதால்தான் இந்த குணநலன்கள் எல்லாம் வருகின்றன என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது,வீட்டிலிருந்து போய் படிப்பவா்களிடமும் அப்படி குணநலன்கள் இருக்குமே,வீட்டிலிருந்து படித்தவா்களெல்லாம் தனித்திறமையுடன் ஆளுமை வளா்ச்சியடன் எந்த சூழ்நிலையிலும் தைாியமாக மனப்பக்குவத்துடன் வாழவில்லையா?

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

அனைவருக்கும் காலை வண‌க்கமுங்க‌.....

என் முதல் கேள்விக்கு பதில் சொல்லுங்க‌ நடுவரே....

எதிரணித்தோழிகள் சொல்றாங்க‌ ஹாஸ்டலில் யாருன்னே தெரியாது அவர்களை புரிந்து ,பழகி,விட்டுக்கொடுத்து எக்ஸ்ட்ரா........

இப்படி யாருன்னு தெரியாதவங்ககிட்ட‌ விட்டுகொடுப்பாங்களாம்.நம்ம‌ உடன் பிறந்தவ‌,பெத்தவங்களுக்கு செய்தால் இவங்க‌ என்னமோ தியாகம் செய்வதுபோல‌ சொல்றாங்களே....! இது எப்படி நடுவரே.......?
நம் தங்கை எடுக்கும் கிளிப்பை பிடுங்கி பாக்ஸ்ஸில் போடும்நாம்,ஹாஸ்டல் தோழிகேட்டு அவள்தலையில் அலங்கரிக்கும்போது நம் தங்கைபார்த்தால் என்ன‌ நினைப்பாள்? நம்மைவிட‌ அக்காவிற்கு இவங்கதான் உசத்திபோலன்னு எண்ணமாட்டாளா?

வீட்டில் சாப்பிட்ட‌ தட்டை எடுக்க‌ நேரமில்லாமல் ஓடிடும் பெண்,ஹாஸ்டலில் தன் தோழியின் தட்டையும் சேர்த்து கழுவி வைப்பதைக்காணும் தாய் என்ன‌ நினைப்பாள்? நாம் கஷ்டப்படும்போது நம் பெண்ணிற்கு தெரியலையேன்னு ஒருபுறம் தோணாதா நடுவரே......?
வீட்டில் கொஞ்சம் லேட் ஆணாலும் பதறுவாங்கலாம்.உண்மைதானே...நியாயம்தானே...... ஹாஸ்டலில் லேட்டானா யாரு உள்மனதுடன் கவலைப்படுவார்? இவள் எங்கு யாருடன் டைம் ஸ்பென் பண்றாளோன்னு கசமுசா பேசுவார்கள்....:‍( பார்த்ததும் என்னப்பா பஸ் வரலையான்னு உதட்டள‌வில் கேட்பாங்க‌.ஏங்க‌ நடுவரே ஹாஸ்ட்டல்ல‌ டைமெல்லாம் இல்லையா? மாலை 6 அல்லது 8 ந்னுனா அத்தோட‌ கதவு சாத்தப்பட்டுடும். ஆனால் வீட்டுல‌ உன்னைக்காணமேன்னு அண்ணன் ஒருபுறம் பைக்கெடுத்துட்டு காலேஜ் வருவாண்,அப்பா ஒருபுறம் தேடுவார். பிள்லைக்கு என்ன‌ பிரச்சனையோன்னுதான் முதலில் எண்ணத்தோன்றும். தவறாக‌ எண்ணத் தோன்றாது.

நடுவரே, இவங்க‌ மாலைநேரம் பிரண்ஸோட‌ பேசி ஒருத்தங்ககிட்ட‌ இருந்து ஒருத்தங்க‌ நிறைய‌ கத்துப்பாங்களாம். இல்ல‌ நான் கேட்கிறேன் இதுக்கெல்லாம் எங்க‌ நடுவரே நேரம்? மாலை 5 மணி காலேஜ் விட்டாக்க, கம்பியூட்ட‌,ஸ்பெஷல் கிளாஸ்,டியூஷன்னு சொல்லிட்டு கரெக்ட்டா டின்னர் சாப்பிடும்போது வருவாங்க‌. உண்ட‌ களைப்பு தொண்டனுக்கும் உண்டுன்றதுபோல‌ சாப்பிட்டதும் கும்பகரணி ஆயிடுவாங்க‌. இல்லைன்னா அசைன்மென்ட்,லொட்டு லொசுக்குன்னு இருக்கும்.... இதுல‌ மத்தது பேசி கத்துக்க‌ எங்க‌ நேரம்?

இன்னொன்னு முக்கியமா சொல்றேன் நடுவரே கேட்டுக்கோங்க‌. உங்களுக்கு தெரியாதது இல்லைங்க‌....ஹாஸ்டல் கேண்டின்ல‌ கரெக்ட்டா பெல் அடுச்சதும் ஓடிப்போயிடனும்.இல்லைன்னா அயிட்டம்ஸ் கடைசி ஆக‌ ஆக‌ கடைசி பந்தி நிலைதான் வரும். அடுத்து உடம்பு சரியில்லைன்னு கஞ்சி கேட்டா யாரு மெனக்கெட்டு வச்சுதருவா?

வீட்டில‌ அம்மான்னா பார்த்து காய்ச்சல் மயக்கத்துல‌ இருந்தாக்ககூட‌ வந்து எழுப்பி கஞ்சி சூடா ஊட்டிவிட்டு தலைவாரி ரெஸ்ட் எடுக்க‌ சொல்லுவாங்க‌. பசிக்கும் நேரமரிந்து பழமோ,ஓட்சோ கொடுப்பாங்க‌.
ஆனால் ஹாஸ்டலில்?????

நண்பிகூட‌ இருநாள் செய்வாள் மூன்றாமநாள் கெட் வெல் சூன்னு எழுதிவச்சுட்டு நீங்க‌ முழிக்கும் முன்னே ஓடிடுவா...!!!(வந்து ஆயிரம் சமாதானம் சொல்லிக்கலாம் நமக்கு)

நடுவரே,பெண்களை சொல்வது அடுத்தபட்சம் ஆண்களின் ஹாஸ்ட்டலைப்பற்றியும் கொஞ்சம் சொல்லிடறேன்.என் அண்ணன் ஹாஸ்ட்டலில் சேர்ந்து ஒருவாரத்தில் கதவ‌ திறந்துட்டு ஓடிவந்துட்டான் வீட்டுக்கு.... எந்த‌ கொடுமையும் இல்ல‌ நடுவரே அங்க‌.ஆனால் வீட்டு சூழ்நிலையை இழக்க‌ அவன் தயாராயில்லை.

மீண்டும் வரேன் நடுவரே.......அதுவரை யோசிங்க‌......நல்லதா யோசிங்க‌........

என் அணியினரின் வாதம் 100க்கு 100 உண்மை.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

ஓஹோஓஒ.........ஒ ஓ ஹோஓஓஒ........அட‌ நடூவர் எங்கபோயிட்டார்? ஒருவேளை பழைய‌ ஹாஸ்ட்டல் நினைவில் மூழ்கிட்டாரோ......!? பார்த்தீங்களா நடுவரே.......பழசை நினைத்தால் இன்றையதை மறக்கடுச்சுடும்போல‌.....ஆனால் நம்ம‌ வீட்டு நினைவு அப்படி இல்லைங்க‌ நடுவரே......தேனில் நனைத்த‌ பலாச்சுளைபோல‌ என்று நினைத்தாலும் இனிக்கும்.
வீட்டிலுள்ளோர் கண்டிப்பிலும் நன்மையே உண்டென்பதையும் மறக்கக்கூடாது.
நடுவரே, வீட்டிலிருந்து சென்றுவருவதால் பல‌ தேவையில்லாத‌ சங்கடங்கள் தவிர்க்கப்படுகின்றன‌.
தேவையில்லாத‌ நண்பர்களும் தவிர்க்கப்படுகின்றனர்,இது ஆண்,பெண் இருவருக்குமேதான்.பிரச்சனைக்குறிய‌ சூழ்நிலைகள் குறைகின்றன‌.ஹாஸ்ட்டல் ஹாஸ்ட்டல்னு சொல்றவங்க‌ அனைவருக்கும் ஒரு கேள்வி,உங்களோட‌ ரூம்மெட்ஸ் ஒழுக்கமுடைய‌ நல்லவர்களாக‌ இருக்கும் பட்சத்தில் நீங்கள் தப்பித்தீர்.அதுவே முரணாக‌ இருந்தால் என்ன‌ செய்வீர்(ரூம்மாத்திப்பேன்னு சொல்லலாம்)அப்பொழுதும் நீங்க‌ நாடுவது நல்லவர்களையே(அதாவது ஆரம்பத்திலிருந்து நல்லவர்களையே) கெட்டவர்களை நல்லவர்களாக்க‌ நீங்க‌ ரிஸ்க் எடுப்பதில்லை.அப்படியே ரிஸ்க் எடுத்தாலும் பக்கவிளைவுகள் பலது இருக்கும். உங்களுக்கே தெரியாத‌ பல‌ மாய‌ வலைகளில் நீங்கள் சிக்கவேன்டியிருக்கும்.
வீட்டிலிருந்து செல்வதால் இவைகள் நம்மை நெருங்குவது சுலபமல்ல‌,அதையும் மீறி நெருங்கும்பட்சத்தில் பெற்றோர் ,பெரியோரின்(அண்ணன் அக்காள்) பாதுகாப்பும்,அனுபவமும் உங்களை காப்பாற்றூம்.

நடுவரே, கடந்த‌ சில‌ நாட்களாக‌ நான் செய்திகளில் கவனிக்கும் ஒரு விஷயம். சிறுவர்களை பாதிப்பது பற்றி அதுவும் உறைவிடப்பள்ளி,அல்லது ஹாஸ்ட்டல்வாழ் மாணவர்களை பற்றியது. இவர்களில் சிலரில்லை பலர் பாதிக்கப்படுவது நடத்தை சரியில்லாத‌ ஆசிரியர்கள் மற்றும் நடத்தை ஒழுங்கில்லாத‌ மாணவர்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற‌ சமுதாய‌ சீர்கேடுகள் வீட்டிலிருந்து சென்றுவருவதால் குறையும் அல்லது அவர்களுக்கு இல்லாமலே போகுமே நடுவரே.....மீண்டும் வருவேன்....

மேலும் சில பதிவுகள்