பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?

அடடா... எவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் பட்டிமன்றம்!!! மக்களே... யாரும் ரெஸ்ட் எடுக்காம கிடைக்கும் நேரம் எல்லாம் இங்க ஓடி வந்து பதிவை போட்டு அசத்துங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். ;)

இன்னைக்கு நம்ம தலைப்பு அன்பு தோழி கவிசிவா தந்தது... நன்றி கவிசிவா :)

தலைப்பு:

“கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

சின்ன மாற்றத்தோடு தான் அந்த தலைப்பை கொடுத்திருக்கேன். எல்லாரும் ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டிப்பார்த்து உண்மையை சொல்லுங்கன்னு வேண்டிக்கறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும். அம்புட்டு தான் என் பேச்சு முடிஞ்சுது... இனி உங்க பேச்சை கேட்பது மட்டும் தான் என் வேலை ;) நிறைய வேலை வெச்சு, நிறைய படிக்க வெச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லன்னா தீர்ப்பை எழுத நான் ரொம்ப வேலை செய்ய வேண்டி வந்துடும். அப்படி என்னை விட்டுடமாட்டீங்கன்னு நம்பி துவங்கி இருக்கேன். இப்பவே நன்றி நன்றி நன்றி :) புது முகங்களும், வழக்கமான பட்டிமன்ற ரசிகர் மக்களும் ஆர்வமா இருக்கீங்க... வருக வருக.

நானும் கலை அவர்கள் சொன்னதது தான் சொல்ல போகிறேன், கல்லூரி முடிந்த பிறகு வீட்டில் தான் எப்பொழுதும் இருக்க போகிறோம்.

அதனால் அந்த படிக்கும் சில நாள்கள் வரை தன் தோழிகளுடன் முழு நேரமும் ஹாஸ்டலில் இருந்து படிப்பதே சிறந்தது, படிப்பில் சந்தேகங்களை தீர்த்து கொள்வது, ரெக்கார்ட் நோட் எழுதுவதற்கு உதவி செய்வது, படம் வரைய தெரியவில்லை என்றால் படம் வரைவது போன்ற எல்லா உதவிகளுக்கும் ஹாஸ்டலில் இருப்பது தான் சிறந்தது.

அது மட்டும் மா தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அம்மா, அப்பாவை விட தோழிகள் தான் அதிகமாக கவனித்துக் கொள்வர்.

நம் பிரிந்து இருக்கும் போது அம்மா, அப்பாவுக்கும் நம் மீது இன்னும் பாசம் அதிகரிக்கும், நமக்கு தேவையானதை நமக்கு என்ன பிடிக்கும் என்று வீட்டில் தனக்கும் மட்டும் செய்யாமல் தன் தோழிக்கும் சேர்த்து செய்யும் பாசம் இது எல்லாம் ஹாஸ்டலில் இருந்தால் தான் நடக்கும் தன் தோழியிடம் நீதான் உண் தோழியை நன்றாக பார்த்துக் கொள்ளனும். என்று சொல்வது எல்லாம் ஹாஸ்டலில் தான் நடக்கும்.

எனது வாதமும் விடுதியில் தங்கி படிப்பது தான் சிறந்தது.

நான் ஹாஸ்டலில் தான் தங்கி படிச்சேன் :-( அப்போ ஒரு முறை எனக்கு உடம்பு சரியில்லாம போயிட்டு. எழுந்து உட்காரக்கூட முடியலை. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சாப்பிட்டு டேப்லெட் போட்டுக்கொன்னு சொல்லிட்டு காலேஜ்க்கு கிளம்பி போய்ட்டாங்க. என்னை பக்கதிலிருந்து பார்த்துக்க யாருமே இல்லை. உடம்பு சரியில்லாதப்போ கூட யாரும் இல்லாம இருக்குறது எவ்ளோ கொடுமையானதுன்னு அப்போ தான் தெரிஞ்சுகிட்டேன். வீட்டுக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லி அன்னைக்கே வீட்டுக்கு போயிட்டேன்.

என்ன தான் ஃப்ரெண்ட்ஸ் ஆக இருந்தாலும் அவங்களுக்கு அவங்க வேலை தான் முக்கியம்.. இதே நம்ம வீட்ல இருந்தோம்னா வீட்ல இருக்கவங்க நம்மள கண்ணும் கருத்துமா பார்த்துப்பாங்கல்ல.

சாந்தோசமா இருக்குறப்ப எல்லாரும் ஒன்னா சேர்ந்து கும்மியடிப்பாங்க.. நமக்கு எதாவது பிரச்சனைன்னா (உடம்பு சரியில்லாத போது, கையில் பணம் இல்லாமல் இருக்கும் போது) உனக்கு தான் அவ இருக்காளே பார்த்துப்பான்னு ஒவ்வொருத்தரா எஸ்கேப் ஆகிடுவாங்க. கடைசியா யாருமே இருக்க மாட்டாங்க.

// ஹாஸ்ட்டல் வாழ்க்கை முடிஞ்சி அப்புறம் வாழ் நாழ் முழுக்க வீட்டு சாப்பாடுதான்.. மட்டுமா நமக்குத்தான் எதையும் தாங்கும் இதயத்தோட கூடவே எதையும் தாங்கும் வயிறும் இருக்கே, அதனால ஹாஸ்டல் சாப்பாடெல்லாம் ஒரு மேட்டரே இல்லீங்க// இப்படிச் சொல்லிச் சொல்லி கண்டதையும் தின்னு உடம்பக் கெடுத்துக்கிட்டு அப்புறம் வீட்டுக்கு வந்து பெத்தவங்கள கஷ்டப்படுத்த வேண்டியது.

வெளியில் இருந்து பார்க்கிறவங்களுக்கு ஹாஸ்டல் லைஃப் ல இருக்குற சந்தோசம் மட்டும் தான் தெரியும்.. உள்ள வந்து பார்த்தாதான் அங்க இருக்கும் சிரமங்கள் தெரியும்.

ஹாஸ்டல்ல ஜாலியா அரட்டையடிக்கலாம்... லீவுன்னா எவ்ளோ நேரம் வரைக்கும் தூங்கலாம்.. ஆனால், அதுக்காகவா கல்லுரிக்கு போறோம். வீட்ல இருந்தா லீவில் வீட்ல உள்ளவங்களோட சேர்ந்து கோவிலுக்கோ, சினிமாவுக்கோ என நாம ஆசைப்பட்ட இடங்களுக்கு போகலாம். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு.. அதையெல்லாம் விட்டுட்டு ஹாஸ்டல்ல போய் அடைஞ்சுகிட்டு, அரட்டை அடிச்சுக்கிட்டு அங்க இருக்குற விஷயங்களையே பெரிய சந்தோசங்களா நினைச்சுக்கிட்டு சோம்பேறித்தனமா இருக்கனுமா?

//கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?” // பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்கும் தானே?

ஹாஸ்டல் சுறுசுறுப்பான பெண்களையே சோம்பேறியாக்கும் போது ஆண்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

கல்லூரி காலத்தில் வீட்டிலிருந்து போய் வருவதே சிறந்தது..சுவாரஸ்யமானது.. மறக்க முடியாதது.

கொஞ்சம்.. இல்ல இல்ல நிறையவே யோசிங்க நடுவரே. நேரம் இருக்கும் போது வரேன்..

-> ரம்யா

ஹாஸ்டல் போகாமலே இவ்வள்வு சொல்ரேனா.ஹாஸ்டல் போகி என்சாய் பன்னி திரும்பி வரும்போது அலுதுகிட்டே வந்தவங்க‌ எத்தனை பேர் பார்த்து இருப்பிங்க‌. என்னொட‌ சிஸ்டர் டீச்சர் டிரெயினிங் ஹாஸ்டல் தங்கி படிச்சா.அங்க‌ உள்ள‌ பசங்கள் எல்லோருமே என்கூட‌ பேசுவாங்கா.என் கணவர் யாருனே அவங்களுக்கு தெரியாது.இருந்ததாலும் மாமா எப்படி இருக்காங்கா நு கேட்பாங்கா.என்னோட‌ சிஸ்டர் பேசி கிட்டு இருக்கும்போது பின்னாடி கோரஸ் கத்துவாங்கா.இந்த‌ அனுபவம் காலேஜ் ல கிளஸ் ரும் ல இருக்கும் போது செய்ய‌ முடியுமா. வேனும்னா நம்மள‌ பற்றி அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். அவ்வளவு தான்.என்னோட‌ சிஸ்டர் பிரண்ட் கூட‌ ஒரு சில‌ பேர் என்ன‌ பாத்து இருக்காங்கா என்னோட‌ சித்தி பொன்னு இப்ப‌ காலேஜ் லா ஹாஸ்டல் தங்கி படிக்க‌ அவ‌ பிரண்ட் கிட்ட‌ என்ன‌ பற்றி என் கணவர் பற்றி சொல்லி இருக்க‌ (அக்காங்கிறதுல‌ ஏகப்பட்ட‌ நம்மள பற்றி என் அக்க‌ அப்படி இப்படி நு சொல்லி இருக்கா நமக்குதான் தெரியும் நம்மள பற்றி பாவம் சின்னபிள்ளைக்கு என்ன‌ தெரியும் அப்படியே மெயின்டென் பன்னிக்குவோம்) உடனே உன் அக்க‌ உங்க‌ மாமா உங்க‌ வீடு எல்லாத்தையும் பார்க்கனும்னு அந்த‌ பிள்ளைங்க‌ எல்லாம் எங்க சித்தி வீடு பொங்கலுக்கு வருவோம் உங்க‌ அக்கா எல்லாத்தையும் வரச் சொல்லு நு எல்லாரும் எங்க சித்தி வீடு லா என்சாய் பன்னி வந்தோம்..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

தன் தோழிகளோடு பர்த்டே பார்டி ஹாஸ்டலில் அதுவும் நேரம் 12 மணிக்கு பெர்பெக்டா சப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டும் போது கிடைக்கும் சந்தோஷ்ம் ஹாஸ்டலில் தான் கிடைக்கும்,
தீபாவளி, பொங்கல் இதெல்லாம் வீட்டில் போய் அம்மா, அப்பா கூட தான் கொண்டாடுவோம் ஆனால் அவ்வளவா அதுல ஒரு பெரிய வித்தியாசம் இருக்காது
தோழிகளுடன் ஜனவரி 1, வருடபிறப்பு கொண்டாடுவோம் அதுல ஏகப்பட்ட சந்தோஷ்மாக இருப்போம் இதெல்லாம் ஹாஸ்டலில் தான் நடக்கும்.

ஒருவர் வீட்டில் பெற்றோர் பாதுகாப்பில் இருந்து கொண்டு பார்க்கிற உலகம் வேறு, ஹாஸ்டல் நட்புகளுடன் இருந்து பார்க்கிற உலகம் வேறு, ஹாஸ்டலில் தங்கி படிப்பதால் பல புதுமுக நட்புகள் கிடைக்கும்.. அவர்களின் அனுபவங்கள் எதிர்காலத்திற்கு பாடமாக கிட்டும்.. பெற்றோரின் கரங்களைப்பிடித்து கல்வி கற்கும்போது ஒரு சிறுவர்சிறுமியராகவே நம்மை உணர்வோம்.. ஆனால் ஹாஸ்டலில் கிடைக்கும் தனிமையிலும், நட்புகளுடன் இருக்கும் போதே நம்மை புதுமனிதனாக பெரிய மனிதராக உணர்வோம்.. அங்கே கிடைக்கும் பிரிவு அன்பின் அருமையை உணர்த்தும்.. வீட்டிலிருந்து பார்த்தால் உலகம் சிறியதாக தோன்றும். வீட்டிலிருந்து வெளியேறி ஹாஸ்டலில் தங்கி படிக்கும் போதுதான் உலகம் பெரியது என்பதை நன்கு உணர்வோம் .. எனவே "ஹாஸ்டலில் தங்கிப்படிப்பதே சிறந்தது"
மேலும் வாதங்களுடன் வருகிறேன்ங்க :-)

நட்புடன்
குணா

நடுவர் அவர்களே, காலை/மாலை வணக்கம்

எதிர்தரப்பு வாதத்துக்கு எதிர் வாதம்.

\\ இப்படி யாருன்னு தெரியாதவங்ககிட்ட‌ விட்டுகொடுப்பாங்களாம்.நம்ம‌ உடன் பிறந்தவ‌,பெத்தவங்களுக்கு செய்தால் இவங்க‌ என்னமோ தியாகம் செய்வதுபோல‌ சொல்றாங்களே \\ விட்டுக்கொடுக்கிறத கூட, வீட்ல இருக்கிற வரை தியாகமாத்தான் பாத்தோம். ஹாஸ்டல்ல போய் தான் விட்டு கொடுக்கிறத கத்துக்கிட்டோம்.

\\வீட்டில் சாப்பிட்ட‌ தட்டை எடுக்க‌ நேரமில்லாமல் ஓடிடும் பெண்,ஹாஸ்டலில் தன் தோழியின் தட்டையும் சேர்த்து கழுவி வைப்பதைக்காணும் தாய்\\ பரவாயில்லையே ., ஹாஸ்டல் போய் பொண்ணுக்கு பொறுப்பு வந்திடுச்சின்னு, பாப்பாங்க.

\\ இவங்க‌ மாலைநேரம் பிரண்ஸோட‌ பேசி ஒருத்தங்ககிட்ட‌ இருந்து ஒருத்தங்க‌ நிறைய‌ கத்துப்பாங்களாம். .. இதுல‌ மத்தது பேசி கத்துக்க‌ எங்க‌ நேரம்\\ அதுக்கு தாங்க மின்வெட்டோட, வீக் என்டு.

\\அடுத்து உடம்பு சரியில்லைன்னு கஞ்சி கேட்டா யாரு மெனக்கெட்டு வச்சுதருவா? அம்மான்னா காய்ச்சல்ல‌ இருந்தாக்ககூட‌ எழுப்பி கஞ்சி சூடா ஊட்டிவிட்டு ஹாஸ்டலில்?????நண்பிகூட‌ இருநாள் செய்வாள் மூன்றாமநாள் நீங்க‌ முழிக்கும் முன்னே ஓடிடுவா, உடம்பு சரியில்லாதப்போ கூட யாரும் இல்லாம இருக்குறது எவ்ளோ கொடுமையானது\\ \\ இதத்தாங்க எங்க அணியினர் சொல்றாங்க, "அம்மா மடியிலேயே வாழ்ந்துட்டு தலைவாரக்கூட‌ தெரியாமல் அழுது". ஹாஸ்டலில போய், தன்னோட உடம்பு சுகவீனத்த, தானே சமாளிச்சி, தன்னோட பாதுகாப்ப தானே பாத்துக்கிட்டு, 16,17 வயசு வர அம்மாகூடவே இருந்த சின்ன பொண்ணு, 2 வருசத்தில எவ்வளவு பெரிய மனுசியாயிடுறோம். யாருன்னே தெரியாத ப்ரண்ட், நம்ம 2 நாள் கூட இருந்து கவனிக்கிறது பெரிய விஷயம். இந்த தருணம் தாங்க, வாழ்நாள் முழுமைக்கான பெஸ்ட் ப்ரண்ட்ட தருது நமக்கு.

\\ லீவு, வீட்ல இருந்தா, வீட்ல உள்ளவங்களோட சேர்ந்து கோவிலுக்கோ, சினிமாவுக்கோ என நாம ஆசைப்பட்ட இடங்களுக்கு போகலாம். ஹாஸ்டல்ல அடைஞ்சுகிட்டு, அரட்டை அடிச்சுக்கிட்டு, சோம்பேறித்தனமா இருக்கனுமா.\\ ஒத்த சோப்பும், ஹேர் பேண்டும் வாங்க 12, 13 பேர் 2, 3 மணி நேரம் கடை, கடையாய் சுத்துறத, பார்த்ததில்ல நடுவர் அவர்களே, இவிங்கள பார்த்த பின்னாடி தான, கார்பரேட் மொதலாளிகளுக்கே (மால் கல்ச்சர்) கடைய தொறக்க ஐடியா வந்திச்சி.

அம்புட்டு தான் நடுவர் அவர்களே,

உன்னை போல் பிறரை நேசி.

//அப்போ ஒரு முறை எனக்கு உடம்பு சரியில்லாம போயிட்டு. எழுந்து உட்காரக்கூட முடியலை. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சாப்பிட்டு டேப்லெட் போட்டுக்கொன்னு சொல்லிட்டு காலேஜ்க்கு கிளம்பி போய்ட்டாங்க. என்னை பக்கதிலிருந்து பார்த்துக்க யாருமே இல்லை. உடம்பு சரியில்லாதப்போ கூட யாரும் இல்லாம இருக்குறது எவ்ளோ கொடுமையானதுன்னு அப்போ தான் தெரிஞ்சுகிட்டேன்.//

இது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவமா நினைக்கனும்,வாழ்க்கை முழுவதும் எப்பவுமே எல்லாராலயும், (பெற்றோர்,கணவர் மற்றும் குழந்தைகள் உட்பட) எல்லா சமயமும் நம்ம கூட இருக்கமுடியாத சூழ் நிலை வரலாம்.அப்ப இந்த மாதிரி வருத்தப்படத் தேவை இல்லை அல்லவா?

//ஹாஸ்டல் சுறுசுறுப்பான பெண்களையே சோம்பேறியாக்கும் போது ஆண்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?//

எனக்குத் தெரிந்தவரையில் வீட்டில் இருந்து போகிரவர்கள்தான் சோம்பேரிகளாக வளர்கிறார்கள். ஹாஸ்டலில் இருப்பவர்கள் விடுமுறை சமயத்தில் மட்டுதான் அப்படி இருக்க வாய்ப்புண்டு,ஆனால் டேஸ்காலர்ஸ்க்கு அனைத்து வேளைகளும் பெற்றோர்தான் செய்யவேண்டி இருக்கு, இந்தகால பசங்கள் அதற்கு மிகப்பெரிய உதாரணம்.தினமும் காலையில் அனைத்து வீட்டிலும் நடக்கும் காலைக்காட்சியை மனதில் ஓடவிட்டுப் பாருங்கள்.என் வீட்டில் என்கணவரே இதற்கு உதரணம், அவருக்கு அனைத்து வேலைகளும் தெரியும், எல்லா வீட்டு வேலையிலயும் உதவியும் செய்வார்,ஏன்னா அவர் நிரய வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்தவர், அதே எங்க வீட்டில வளர்ந்த பசங்களுக்கு சுடுதண்ணீர் கூட வெக்க வராது, ஏன்னா அவங்க ஹாஸ்டல் பக்கமே போனது கிடையாது.

Moral of the story என்னன்னு கேட்டீங்கன்னா, 7 வருடம் ஹாஸ்டல்ல இருந்துட்டு இனிமேல் ஹாஸ்டல் பக்கமே போகமாட்டேன்னு டேஸ்காலர் ஆனவ நான். நானே ஹாஸ்டல்வாழ்க்கைதான் சிறந்ததுன்னு சொல்ரேன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்குமோ, இல்லையோ? எனவே நேயர்களே ஹாஸ்டல் வாழ்க்கையே சிறந்தது.

சந்தோசம்,அரட்டை,விட்டுக்கொடுத்தல்,பகிர்தல்,ஊறவு மட்டுமில்லாமல் விடுதி வாழ்கை படிப்பதற்கும் சிறந்த இடம் தான். நான் விடுதியில் படித்தவரை பரீட்சைக்கு படிப்பது கடினமே இல்லை.ஏன் என்றால் எல்லோரும் ஒன்றாகவே படிப்போம்.முதலில் யார் எதைப் படிப்பது என்று பிரித்துக்கொள்வொம்.பிறகு ஆளுகொன்றாக படித்துவிட்டு வந்து எல்லொருக்கும் புரியும் படி சொல்லுவோம்.

2மணி நேரத்தில் அனைவரும் பரீட்சைக்கு தயார் ஆகிவிடுவோம்.எனவே ஒருநாளும் படிக்கவில்லை என்று பயந்ததே இல்லை.வகுப்பில் கவனிக்கவில்லை என்றாலும் இப்படி படிக்கையில் நன்கு புரியும்.

எல்லோரும் அப்படி எழுதிய பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறோம்.தனிமையில் படிப்பதைவிட இப்படி எல்லோருடனும் படிப்பது மேலும் மனதில் பதியும்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

//"ஒருவர் வீட்டில் பெற்றோர் பாதுகாப்பில் இருந்து கொண்டு பார்க்கிற உலகம் வேறு, ஹாஸ்டல் நட்புகளுடன் இருந்து பார்க்கிற உலகம் வேறு"

"வீட்டிலிருந்து வெளியேறி ஹாஸ்டலில் தங்கி படிக்கும் போதுதான் உலகம் பெரியது என்பதை நன்கு உணர்வோம்" //

இந்த வார்த்தைகள் முற்றிலும் உண்மையானவை.

என் அனுபவமும் எனக்கும் இதைதான் சொல்லித்தந்தது.

எங்கள் அறையில் இருந்த பூஜைக்கான இடத்தில் எல்லாவிதமான கடவுளர்க்கும் இடமுண்டு.

வெள்ளிக்கிழமை,கார்த்திகை போன்ற நாட்களில் எல்லோருக்கும் விளக்கு,பிரசாதம் உண்டு.கிரிஸ்துமஸ் நாட்களில் எல்லோருக்கும் மெழுகு,கேக் உண்டு.இரமலான் நாளில் எல்லோருக்கும் பிரியாணி உண்டு.இப்படி வீட்டில் நடக்கவே நடக்காது தானே!!!!!

No pains,No gains

ANANTHAGOWRI.G

வீட்டில் அண்ணன் ,அக்காதான் படம்வரைவ்திலிருந்து எல்லாமே நமக்குசெய்வார்களே,நாம் கேட்காமலேயே.விடுதியில்நாம் கேட்டாகூட எப்பொழுதும் செய்வார்களா?
ஊரில் திருவிழா,கல்யாணம் போன்றவற்றை மிஸ்பண்ணதேவையில்லை.

நாங்கலெல்லாம் காலேஜ்மிடிந்தவுடனும் சரி போகும்போதும்,வரும்போதும் எல்லாம் பேசிக்குவோமே.அடுத்ததா பாத்தா எதிரணி சொல்ராங்க உலகமே புரியுது,வாழ்க்கையை வாழ க்ற்றுகொடுத்ததுன்னு,ஊரிலிருந்து பஸேரி டவுனில்
உள்ள காலேஜிக்கு டெய்லி போய்வரும்போது,நாம் எப்படி பாதுகாப்பாகயிருக்கவேண்டும்,எப்படி பொதுவிடத்தி பேச்வேண்டும் நாங்கசீட்டிலிருந்தால் பெரியவர்கள்,கர்ப்பினிகளுக்கு நாங்கஎழுந்து சீட்கொடுப்போம். போன்றஎல்லாவற்றையும் கத்துகிடுவோம்..உங்களைவிட ஆயிரம்மடங்கு நாங்க க்த்துகிட்டு உதவவும்முடியும்.சும்மா ஹாஸ்டலுக்குள்ளேகிடந்து கூவிட்டே இருக்காதீங்க.

மேலும் சில பதிவுகள்