பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?

அடடா... எவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் பட்டிமன்றம்!!! மக்களே... யாரும் ரெஸ்ட் எடுக்காம கிடைக்கும் நேரம் எல்லாம் இங்க ஓடி வந்து பதிவை போட்டு அசத்துங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். ;)

இன்னைக்கு நம்ம தலைப்பு அன்பு தோழி கவிசிவா தந்தது... நன்றி கவிசிவா :)

தலைப்பு:

“கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது, வீட்டிலிருந்து போய் வருவது - எது சிறந்தது? எது சுவாரஸ்யமானது? எது பின் நாளில் மறக்க முடியாதது?”

சின்ன மாற்றத்தோடு தான் அந்த தலைப்பை கொடுத்திருக்கேன். எல்லாரும் ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டிப்பார்த்து உண்மையை சொல்லுங்கன்னு வேண்டிக்கறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும். அம்புட்டு தான் என் பேச்சு முடிஞ்சுது... இனி உங்க பேச்சை கேட்பது மட்டும் தான் என் வேலை ;) நிறைய வேலை வெச்சு, நிறைய படிக்க வெச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லன்னா தீர்ப்பை எழுத நான் ரொம்ப வேலை செய்ய வேண்டி வந்துடும். அப்படி என்னை விட்டுடமாட்டீங்கன்னு நம்பி துவங்கி இருக்கேன். இப்பவே நன்றி நன்றி நன்றி :) புது முகங்களும், வழக்கமான பட்டிமன்ற ரசிகர் மக்களும் ஆர்வமா இருக்கீங்க... வருக வருக.

//ஊரிலிருந்து பஸேரி டவுனில்
உள்ள காலேஜிக்கு டெய்லி போய்வரும்போது,நாம் எப்படி பாதுகாப்பாகயிருக்கவேண்டும்,எப்படி பொதுவிடத்தி பேச்வேண்டும் நாங்கசீட்டிலிருந்தால் பெரியவர்கள்,கர்ப்பினிகளுக்கு நாங்கஎழுந்து சீட்கொடுப்போம். போன்றஎல்லாவற்றையும் கத்துகிடுவோம்..உங்களைவிட ஆயிரம்மடங்கு நாங்க க்த்துகிட்டு உதவவும்முடியும்.சும்மா ஹாஸ்டலுக்குள்ளேகிடந்து கூவிட்டே இருக்காதீங்க//

இவையெல்லாம் வெறும் புறத்தோற்றம்.ஒரு அரை மணி நேரம் பொறுமை காப்பார்கள்.அவ்வளவு தான்.3 அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்கள் வித விதமன குனமுடயவர்களுடன் இருக்கப்பழகினால் பெரிய பொறுமையே வந்துவிடும்.

//வீட்டில் அண்ணன் ,அக்காதான் படம்வரைவ்திலிருந்து எல்லாமே நமக்குசெய்வார்களே,நாம் கேட்காமலேயே.விடுதியில்நாம் கேட்டாகூட எப்பொழுதும் செய்வார்களா?//

என் தோழிகள் என்னுடைய முழு RECORD-யுமே எழுதி தந்திருக்கிறார்கள்.நானெல்லாம் என்ன செய்வது.எனக்கு தம்பி மற்றும் தங்கை மட்டுமே.

No pains,No gains

ANANTHAGOWRI.G

இரண்டு அணியின் வாதங்களையும் முழுசா படிச்சு முடிக்கவே எனக்கு இம்புட்டு நேரமாகிட்டுது. சாரி நடுவர் தமிழ் வாசிப்பதில் கொஞ்சம் (?) வீக்.

சம சூடா போகுது வாதம். நடக்கட்டும் நடக்கட்டும். நடுவரை காணோம்னு யாரும் தேடாதீங்க... நடுவர் படிக்கும் போது கூடவே பழைய ஹாஸ்டல் லைஃபையெல்லாம் ஃப்ளாஷ் பேக் ஓட்டி டல்லாயிட்டார். அதனால் நாளை காலையில் வந்து எல்லாருக்கும் பதிவிடுறேன். படிச்சு முடிச்சாச்சு இன்று... முழு திருப்தி எனக்கு. இரு அணியும் இப்ப தான் சூடு பிடிச்சிருக்கு... நேற்று வரை என் மனதளவில் முன்னாடி நின்ன ஹாஸ்டல் அணியை இன்னைக்கு வீட்டு அணி ஓவர்டேக் பண்ணிருக்கு. நாளைய நிலவரம் என்னன்னு நாளை பார்க்கிறேன். ;) ஹாஸ்டல் அணி... இன்னும் ஸ்ட்ராங் பாயிண்ட்ஸோட வாங்க. ஆல் தி பெஸ்ட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க‌ நடுவரே நீங்க‌ இப்படி நடு ராத்திரில‌ வந்து பதிவிட்டுட்டு ஓடிடுறீங்க‌?! நாள் முழுக்க‌ சிஸ்டம் ஆன்ல‌ வச்சு என்னவர்,குட்டீஸ்னு யாரையும் அனுகவிடாம‌ திட்டுவாங்கி பதிவிடுறேனாக்கும்.நீங்க‌ என்னன்னா பழய‌ நினைவுல‌ முழுகிட்டேன்றீங்களே......அப்பவே சொன்னேன்,பழசை நினைத்து நடப்பை மறக்க‌ வைக்கும் ஹாஸ்ட்டல் சிறந்ததா????இல்லை நடப்போடு ஒன்றிவரும் பழமை நினைவுகள் சிறந்ததா.....??? சீக்கிரம் நடப்புக்கு வாங்கோ நடுவரே.....மீண்டும் வருவேன்......

//வீட்ல‌ உள்ளவங்க‌ பத்திலாம் நல்லா புரிஞ்சிக்க‌ ஹாஸ்டல் உதவியா இருக்கும்னு சொல்றேன்,// - உண்மை தான் எப்பவும் சண்டை போ்டும் தங்கை தம்பிகிட்ட கூட சண்டை போட தோனாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//எந்த‌ சூழ்னிலையுலும் தைரியமாக‌ செயல்படும் ஒரு மனப்பக்குவத்துடன்வாழ்வதை பார்க்கலாம் என்பதே எனது கருத்துங்க‌.// - தனியா ஹாஸ்டலில் இருப்பதோடு அல்லாமல் தனியா வீடு வந்து போகவும் பழகிடுவாங்க. தைரியம் தானா வந்துடும். கரக்ட்டு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அம்மா அப்பாவுக்கு யாரும் ஈடாக முடியுமா?// - முடியவே முடியாதுங்க.

//அப்பா அம்மா சொல்லிக்கொடுத்ததாகத்தானே இருக்க வேண்டும்,அப்படி இருக்கையில் விடுதியில் தங்கிப்படிப்பதால்தான் இந்த குணநலன்கள் எல்லாம் வருகின்றன என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது// - கரக்ட்டு... அம்மா அப்பா சொல்லிக்கொடுத்து நல்ல பிள்ளையா வளர்ந்ததால தானே அங்க போய் அப்படிலாம் மாற முடியுது... இல்லன்னா அங்கையும் நிம்மதியா இருக்க முடியாதே.

//வீட்டிலிருந்து படித்தவா்களெல்லாம் தனித்திறமையுடன் ஆளுமை வளா்ச்சியடன் எந்த சூழ்நிலையிலும் தைாியமாக மனப்பக்குவத்துடன் வாழவில்லையா?// - அதானே?? கேட்டாங்கைய்யா கேள்வி... வாங்க எதிர் அணி... வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பார்த்ததும் என்னப்பா பஸ் வரலையான்னு உதட்டள‌வில் கேட்பாங்க‌.ஏங்க‌ நடுவரே ஹாஸ்ட்டல்ல‌ டைமெல்லாம் இல்லையா? மாலை 6 அல்லது 8 ந்னுனா அத்தோட‌ கதவு சாத்தப்பட்டுடும். ஆனால் வீட்டுல‌ உன்னைக்காணமேன்னு அண்ணன் ஒருபுறம் பைக்கெடுத்துட்டு காலேஜ் வருவாண்,அப்பா ஒருபுறம் தேடுவார். பிள்லைக்கு என்ன‌ பிரச்சனையோன்னுதான் முதலில் எண்ணத்தோன்றும். தவறாக‌ எண்ணத் தோன்றாது.// - ஹாஸ்டலில் இருந்தா எப்படிங்க சந்தேகம் வரும்??? அந்த நேரத்துக்கு போய் தானே ஆவாங்க... வீட்டில் இருந்து வந்தா வேணும்னா லேட்டா போகலாம்... புரியலயே உங்க லாஜிக் எனக்கு 3:) கூடவே ஹாஸ்டல் பிள்ளைகள் என்றால் கல்லூரி விட்டால் ஹாஸ்டல், ஹாஸ்டல் விட்டா கல்லூரி... அனுமதி இல்லாமல் எங்குமே செல்ல முடியாதே... யார் தப்பா பேச முடியும்? இந்த பாதுகாப்புகாகவே நிறைய பெற்றோர் சேர்க்கறாங்களே?

என்ன எதிர் அணி??? பாயிண்ட்டை நானே எடுத்து கொடுக்கனுமா? அவங்களா வாய்ப்பு கொடுத்தா கூட நீங்க பிடிக்க மாட்டங்கறீங்களே.... :( பேட்... வெரி பேட்.

//வீட்டில‌ அம்மான்னா பார்த்து காய்ச்சல் மயக்கத்துல‌ இருந்தாக்ககூட‌ வந்து எழுப்பி கஞ்சி சூடா ஊட்டிவிட்டு தலைவாரி ரெஸ்ட் எடுக்க‌ சொல்லுவாங்க‌. பசிக்கும் நேரமரிந்து பழமோ,ஓட்சோ கொடுப்பாங்க‌.
ஆனால் ஹாஸ்டலில்?????// - இது நியாயம். ஒத்துக்கறேன். எல்லா ஹாஸ்டலிலும் இது போல அவசர தேவைக்கு செய்து கொடுப்பது இல்ல... சிலதில் தான் செய்வார்கள்.

ஆண்கள் ஹாஸ்டல் வாழ்கையும் சேர்த்து தான் நடுவர் சொன்னது... டவுட்டே இல்ல.

//என் அண்ணன் ஹாஸ்ட்டலில் சேர்ந்து ஒருவாரத்தில் கதவ‌ திறந்துட்டு ஓடிவந்துட்டான் வீட்டுக்கு....// - உங்க வீட்டில் எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் சுத்தறீங்க போலவே ;)

//உங்களோட‌ ரூம்மெட்ஸ் ஒழுக்கமுடைய‌ நல்லவர்களாக‌ இருக்கும் பட்சத்தில் நீங்கள் தப்பித்தீர்.அதுவே முரணாக‌ இருந்தால் என்ன‌ செய்வீர்(ரூம்மாத்திப்பேன்னு சொல்லலாம்)அப்பொழுதும் நீங்க‌ நாடுவது நல்லவர்களையே(அதாவது ஆரம்பத்திலிருந்து நல்லவர்களையே) கெட்டவர்களை நல்லவர்களாக்க‌ நீங்க‌ ரிஸ்க் எடுப்பதில்லை.// - சரி தான். பல ஆண் பிள்ளைகள் கெட்ட பழக்கங்களை விடுதியில் தான் கற்று வருகிறார்கள். கட்டாயப்படுத்தியோ, தெரியாமலோ கூட குடிக்க வெச்சுடுவாங்கன்னு எல்லாம் கேட்டிருக்கேன். உண்மையோ இல்லையோ தெரியாது.

நியூஸ் மேட்டர்... வருத்தமான விஷயம்... அம்புட்டு சின்ன பிள்ளைகளை எல்லாம் ஹாஸ்டலில் விட்ட பெற்றோரையும் ஒன்னும் சொல்லிக்கிறதுக்கு இல்ல. :( ஆனா நாம கல்லூரி வாழ்க்கை பற்றி தானே பேசுறோம்... அதையே தொடர்வோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதன் முறை வாதிக்கறீங்க... அதனால் குறையா எடுக்க கூடாது... பட்டியின் விதிமுறைப்படி பேர் சொல்லி பேசக்கூடாது ;) நீங்க குறை ஏதும் சொல்லல, ஆனாலும் பேர் வேணாமே இனி ப்ளீஸ். :)

//முழு நேரமும் ஹாஸ்டலில் இருந்து படிப்பதே சிறந்தது, படிப்பில் சந்தேகங்களை தீர்த்து கொள்வது, ரெக்கார்ட் நோட் எழுதுவதற்கு உதவி செய்வது, படம் வரைய தெரியவில்லை என்றால் படம் வரைவது போன்ற எல்லா உதவிகளுக்கும் ஹாஸ்டலில் இருப்பது தான் சிறந்தது.// - சரி தான்.. நான் படிச்சப்போ தமிழ் மீடத்தில் இருந்து வந்த நிறைய பெண்கள், எங்களிடம் சொல்லித்தர சொல்வாங்க. நாங்களும் உதவுவோம்... வீட்டில் அவர்கள் தான் முதன் முதலில் கல்லூரிக்கு வந்தவர்கள் கூட உண்டு. அவங்களுக்கு வீட்டில் உதவி கிடைக்காதே.

//அது மட்டும் மா தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அம்மா, அப்பாவை விட தோழிகள் தான் அதிகமாக கவனித்துக் கொள்வர்.// - ம்... இதை நான் ஏற்பது சிரமம் தான் ;)

//பர்த்டே பார்டி ஹாஸ்டலில் அதுவும் நேரம் 12 மணிக்கு பெர்பெக்டா சப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டும் போது கிடைக்கும் சந்தோஷ்ம் ஹாஸ்டலில் தான் கிடைக்கும்,// - சரி தான்... ஆனா அனுபவம் இல்லை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//சாந்தோசமா இருக்குறப்ப எல்லாரும் ஒன்னா சேர்ந்து கும்மியடிப்பாங்க.. நமக்கு எதாவது பிரச்சனைன்னா (உடம்பு சரியில்லாத போது, கையில் பணம் இல்லாமல் இருக்கும் போது) உனக்கு தான் அவ இருக்காளே பார்த்துப்பான்னு ஒவ்வொருத்தரா எஸ்கேப் ஆகிடுவாங்க. கடைசியா யாருமே இருக்க மாட்டாங்க// - உண்மை... அனுபவம் உண்டு நடுவருக்கும் ;)

//அதையெல்லாம் விட்டுட்டு ஹாஸ்டல்ல போய் அடைஞ்சுகிட்டு, அரட்டை அடிச்சுக்கிட்டு அங்க இருக்குற விஷயங்களையே பெரிய சந்தோசங்களா நினைச்சுக்கிட்டு சோம்பேறித்தனமா இருக்கனுமா?// - என்னங்க ஹாஸ்டலில் தாங்க பிசியா இருப்பாங்க... துணி துவைக்கிறது, ரூம் க்ளீனிங்.. எவ்வளவோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஹாஸ்டல் போகி என்சாய் பன்னி திரும்பி வரும்போது அலுதுகிட்டே வந்தவங்க‌ எத்தனை பேர் பார்த்து இருப்பிங்க‌. // - ஹஹஹா. கடைசி நாள் நெருங்க நெருங்க.. ஒரே சோக கீதமாத்தான் இருக்கும்.. நானும் நினைப்பேன், எதுக்கு அழறாங்கன்னு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்