மைக்ரோவேவ் பால்கோவா

தேதி: June 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

கன்டண்ஸ்டு மில்க் - ஒரு டின்
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு கண்ணாடி பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு நெய் தடவி கன்டண்ஸ்டு மில்க் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
அதை மைக்ரோவேவ் ஹையில் வைத்து 2 நிமிடங்கள் சூடாக்கவும்.
பிறகு வெளியே எடுத்து கரண்டியால் கலந்துவிட்டு, மேலும் 2 நிமிடங்கள் அவனில் வைக்கவும்.
நன்கு கொதித்து கலவை கெட்டியாகத் தொடங்கும் நிலையில் எடுத்து மீண்டும் ஒரு முறை கலந்துவிட்டு 2 நிமிடங்கள் அவனில் வைக்கவும்.
கலவை நன்கு கெட்டியாகி கையில் ஒட்டாத பதம் வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரிமாறவும்.
எளிதில் செய்யக்கூடிய சுவையான பால்கோவா நிமிடங்களில் தயார்.

கன்டண்ஸ்டு மில்க்கின் வாசனையை விரும்பாதவர்கள் அதற்குப் பதிலாக சர்க்கரை கலந்த கெட்டிப் பால் சேர்த்துச் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எவ்ளோ ஈஸியான செய்முறை... கடைசி படம் அழகு.... ஒரு பீஸ் மட்டும் இருக்குறதால யாரும் வரதுக்கு முன்னாடி நானே எடுத்துக்குறேன்...

கலை

பால்கோவா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு சாப்பிட இன்னும் அழகா டேஸ்டா இருக்கும்னு நினைக்கிறேன் வாழ்த்துக்கள்

பால்கோவா ஐய்யோ இப்பவே சாப்பிடனும் போல இருக்கு நான் செய்யறது நாகு ஊறுது, சூப்பர் செம டேஸ்டி, வொன்டர் புல்.

வாவ் பாக்கவே அழகாயிருக்கு,டேஸ்ட் செமயா இருக்கும்போல சூப்பர்.

சூப்பர்

வழக்கம் போல‌ உங்க‌ டிப்ஸ் ஈஸி , டேஸ்டி டிப்ஸ் அக்கா,
எனக்கு பால்கோவானா அவ்ளோ பிடிக்கும் தெரியுமா .............எனக்கு ஒரு பார்சல் அக்கா.......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

வனி உங்க பால் கோவா சூப்பர். உடனே செய்து பார்க்க ஆசை பட்டு செய்தேன். டேஸ்ட் நல்லா இருக்கு. ஆனா சாக்லேட் கலர்ல இருந்தது. நேரம் போக போக இருக்கமா போய்விட்டது.என்ன தவறு செய்தேனு தெரியல. நான் பீங்கான் பவுல்ல செய்தேன் அதனால இருக்கமா.

பால்கோவா அருமை வாணி. பார்க்க மில்க் டாஃபி போல இருக்கு. நீங்க எத்தனை கிராம் டின் யூஸ் பண்ணிருக்கீங்க?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பால் சேர்த்து செய்தேன் நன்றாக வந்துல்லது வனி.நேரம் சற்று அதிகமாக எடுத்து கொன்டது.

என்னக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட், ஈஸியா எப்படி செய்யறதுன்னு சொல்லியிருக்கீங்க, பார்க்கும்போதே சாப்பிடனும்போல இருக்குங்க.
இதே முறையில அடுப்பிலயும் செய்யலாமா?

நித்யா, தயிரின் அளவு கூடியிருந்தால் பால்கோவா கடினமாயிருக்கும்
பாலில் செய்து நன்றாக வந்ததில் மகிழ்ச்சி
உமா நான் 170 கிராம் கன்டன்ஸ்ட் மில்க் பயன் படுத்தினேன்,தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

http://www.arusuvai.com/tamil/node/28287
அனு நீங்க கேட்டதோட லிங்க் மேலே கொடுத்துள்ளேன்

பின்னூட்டம் கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி

பால்கோவா குறிப்பு சுலபமாக உள்ளது.மைக்ரோவேவ் அவன் இல்லை.சாதாரண அவனில் செய்தால் எவ்வளவு நேரம் வைக்க வேண்டும்?pls reply me

சாதாரண அவனில் இது செய்ய முடியாது ஃபாத்திமா, அடுப்பில் எப்படி செய்யல்லம் என கீழே உள்ள லின்க்-ல் இருக்கு,பாருங்கள், நன்றி

http://www.arusuvai.com/tamil/node/28287