உருளைக்கிழங்கு வறுவல்

தேதி: June 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

உருளைக்கிழங்கு - 2
பூண்டு - 5
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கைத் தோல் சீவி, மெல்லிய சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
வாணலியில் பாதி எண்ணெய் விட்டு கடுகு மற்றும் சோம்பு தாளித்து, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பூண்டு லேசாக வதங்கியதும், உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், சோம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேகவைக்கவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும், மீதி எண்ணெயைச் சேர்த்து சற்று வறுவல் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
கலந்த சாதம், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உருளைக்கிழங்கு வறுவல் சூப்பர், யாருக்குமே பிடிக்காதுனு சொல்ல முடியாத ஒரு ரெசிபினா அது ஒரு உருளைக்கிழங்கு வறுவல் தான், என்ன பெரியவங்களுக்கு கொஞ்சம் வாயு பிரச்சனையால் சாப்பிட முடியாது அவ்வளவு தான்.
ஆனால் அவுங்களுக்கும் சாப்பிடனும் ஆசை தான். கலர்புல்லா இருக்கு.

இன்று தயிர் சாதம் போதும் என்று சமைக்க‌ வில்லை.. இப்போவே உருளைகிழங்கு வறுவல் செய்துட்டு வந்து பின்னூட்டம் தருகிறேன் அக்கா.. இவ்வளவு ஈசியாக‌ இருக்கும் போது செய்யாமல் இருப்பனா??

ரொம்ப ஈசியான குறிப்பு அக்கா. அருமை.:-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சில நாள் நமக்கு என்ன சமக்குறதுன்னே தெரியாம இருக்கும், அப்பல்லாம் நீங்கல்லாம் போடற இந்த மாதிரி ஈஸி ,டேஸ்டி குறிப்புகள் தாங்க எனக்கு ரொம்ப உதவியா இருக்கு.

செல்வி அக்கா,
உருளைக்கிழங்கு வறுவல் சூப்பர், இப்படி தான் செய்வாங்க‌........

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

இன்னைக்கு எங்க வீட்டுல உங்க ரெசிபி உருளைகிழங்கு வறுவல்தான் சூப்பர்

Be simple be sample

வாயு பிரச்னைக்காகத்தான் பூண்டு சேர்ப்பது. மணமும் நன்றாக‌ இருக்கும். நன்றிம்மா.

அன்புடன்,
செல்வி.

உருளைக்கிழங்கு வறுவல் செய்தாச்சா? தயிர் சாதத்திற்கு சரியான‌ காம்பினேஷன்.

அன்புடன்,
செல்வி.

மிக்க‌ நன்றி உமா.

அன்புடன்,
செல்வி.

மிக்க‌ நன்றி.
/இப்படி தான் செய்வாங்க‌/
பாதியில் நிற்கிற‌ மாதிரி இருக்கு:)

அன்புடன்,
செல்வி.

மிக்க‌ நன்றி. ஆபீஸ் போகும் நேரம் செய்யும் சமையல் அனேகமாக‌ இப்படி சிம்பிளாகத்தான் இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

செய்து பார்த்துட்டு பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க‌ நன்றி!

அன்புடன்,
செல்வி.