12g எத்தனை கரண்டிகள்

pls உங்களுக்கு தெரிந்த அனைத்து வகை சமையல் அளவுகளையும் சொல்லி தந்தால் கோடி புன்னியம்

பொருளுக்குப் பொருள் வித்தியாசப்படும் ஜனதுல். சீனி... தலை தட்டி 3 தேக்கரண்டிகள் 12 கிராமுக்கு கொஞ்..சம் அதிகமா வருது.

கோப்பை, கரண்டி அளவுகள் பற்றி நிறைய இடத்தில் பேசி இருக்கிறாங்க. தேடிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

12கிராம் எத்தனை தேக்கரண்டி என சொல்ல நீங்கள் என்ன அளக்க போறீங்கன்னும் தெரியனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

"ஈஸ்ட்" அலக்க தான் தோவை

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ட்ரை ஈஸ்ட் என்றால் ஏறக்குறைய 1 1/2 மேஜைக்கரண்டி.

இன்ஸ்டண்ட் ஈஸ்ட் என்றால் 1 1/4 மேஜைக்கரண்டி அளவு.

ரொம்ப தெரிஞ்சு சொல்றதா நினைச்சுடாதீங்க... இது போல அறுசுவையில் வருவதை எல்லாம் செய்யன்னே கன்வர்டர் கூகில் அண்ணாத்தையிடம் கடன் வாங்கி ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கேன். அவர் தான் சொன்னார். ஏன்னா இங்க ஒவ்வொரு மக்கள் ஒவ்வொரு அளவு கொடுப்பாங்களே... மாற்ற வேணுமில்ல. ;) ஏன்னா நான் எப்பவும் கப், தேக்கரண்டி, மேஜைக்கரண்டி அளவு தான்... இங்க பலரும் கிராம், கிலோன்னு கொடுத்தா அந்த சார்ட் தான் எனக்கு உதவி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1 கப் மைதா - 125 கிராம்
1 கப் கோதுமை மாவு - 120 கிராம்
1 கப் சர்க்கரை - 200 கிராம்
1 கப் ஐசிங் சுகர் - 125 கிராம்
1 கப் ப்ரவுன் சுகர் - 200 கிராம்
1 கப் ரவை - 160 கிராம்
1 கப் தயிர் - 245 கிராம்
1 கப் சாதாரண பொன்னி அரிசி - 200 கிராம்
1 கப் பாசுமதி அரிசி - 195 கிராம் (200ன்னே வெச்சுக்கலாம் பொதுவா அரிசிக்கு)
1 கப் அரிசி மாவு - 160 கிராம்
1 கப் வெண்ணெய் என்பது ஏறக்குறை 225 கிராம்
1 ஸ்டிக் பட்டர் என்பது ஏறக்குறைய 113 கிராம்.
1 கப் கொக்கோ பவுடர் என்பது 120 கிராம்.

இம்புட்டு நான் அவசர தேவைக்கு ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கது. உதவும்னு நம்பறேன். :) இதை வெச்சு 1/2 கப், 1/4 கப் கணக்கை எல்லாம் சமைக்கும் போது போட்டுக்குவேன். இந்த சார்ட் ஒன்னு அடுப்படியில் இருந்தா அவசரமா தேட வேண்டி இருக்கிறதில்ல... ஏன்னா என்னால அரிசி, மாவு அளவை தவிற மற்றதை எல்லாம் நியாபகத்தில் வெச்சுக்க முடியுறதில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க தந்துள்ள அளவுகள் எனக்கு மட்டுமின்ரி அனைவருக்கும் உதவும் மிக்க நன்ரி

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ரொம்ப நன்றி அக்கா .இந்த தக்வலைத்தான் பல
நாள் தேடி கொண்டு இருந்தேன்.....

அழகாக விளக்கி உள்ளீர்கள்.

வனி அக்கா,கேக் மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்..என் கணவர் பிறந்த நாளுக்கு கேக் செய்தேன்...கேக் நன்றாக வந்து விட்டது..என் கணவர் என்னை ரொம்ப பாரட்டினார்...அதனால நான் வீட்டில் அடிக்கடி செய்து பாக்கலாம்னு நினைக்கறேன்...

மேலும் சில பதிவுகள்