தெவையம்

தேதி: June 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - இரண்டு கப்
பெரிய வெங்காயம் - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
சமையல் எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
உப்பு - தேவையான அளவு


 

பச்சரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

நன்கு ஊறியதும் லேசாக தண்ணீர் தெளித்து நன்கு அரைக்கவும். (தோசை மாவு பதத்தில் இருக்கலாம்).

பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாட்டில் கீறி வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை எடுத்து ஊற்றி, உப்பு போட்டு நன்கு கிளறவும்.

கைவிடாமல் கிளறிக் கொண்டே இருந்தால் சிறிது நேரத்தில் உதிரி உதிரியாக வரும்.

அதனுடன் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, மேலும் சிறிது நேரம் கிளறினால் ஜவ்வரிசி போல சிறு உருண்டைகளாக பிரிந்து வரும்.

இப்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சூடான, சுவையான தெவையம் தயார்.


சீக்கிரம் அடிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறு தீயில் வைத்துக் கிளறவும். சிறு உருண்டைகளாகும் வரை கரண்டியால் நன்கு அழுத்திக் கிளறவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தெவையம் பெயரே வித்தியாசமா இருக்கே சூப்பர் பார்ப்பதற்கு உப்புமா போல உள்ளது அருமை.

முதல் சமையல் குறிப்பு ரொம்ப‌ சந்தோஷமா இருக்கு....வெளியிட்ட‌ அண்னா அன்டு அறுசுவை டீமிற்கு மிக்க‌ நன்றி.

வாவ் ரேணு வந்துவிட்டது, வாழ்த்துக்கள் தொடர்ந்து தாங்க!!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

குறிப்பு பக்கம் அடி எடுத்து வெச்சதுக்கு வாழ்த்துக்கள் ரேணுகா :) சூப்பர். தொடரனும்... இன்னும் பல 100 குறிப்புகள் வரனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி வாழ்த்துக்களுக்கு, உங்களை போன்ற‌ சமையலில் கைதேர்ந்தவர்கள் இருக்கும்போது நானும் பலது கத்துக்கிட்டு, உங்களுக்கும் செய்துபார்க்க‌ சொல்லி குறிப்பு கொடுத்து தொல்லை கொடுக்கப்போறேன்.... :‍)

மிக்க‌ நன்றி ரேணு வாழ்த்துக்களுக்கு....:‍)