க்ரிஸ்பி சிக்கன்

தேதி: June 20, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
மைதா மாவு - 2 தேக்கரண்டி
முட்டை - ஒன்று
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வினிகர் (அ) எலுமிச்சை சாறு - அரை மேசைக்கரண்டி
ப்ரெட் தூள் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

சிக்கனை நடுத்தரமான அளவில் சதுரத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, அதனுடன் மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது, சோயா சாஸ், உப்பு மற்றும் வினிகர் (அ) எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி லேசாக அடித்து, மைதா மாவு, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
ஊறிய சிக்கன் துண்டுகளை முட்டை, மைதா மாவுக் கலவையில் தோய்த்து எடுத்து, ப்ரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.
பிரட்டி வைத்த சிக்கன் துண்டுகளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
டேஸ்டியான, க்ரிஸ்பியான சிக்கன் ரெடி. தக்காளி சாஸுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

க்ரிஸ்பி சிக்கன் சூப்பர், பிரட்டிய சிக்கன் துண்டுகளை கண்டிப்பாக ஃப்ரிஜில் வைக்கனுமா அக்கா.

கடைசி பிளேட் எனக்கு. சீக்கிரம் செய்துபார்த்திடறேன்

Be simple be sample

பிரிஜ்ஜில் தான் வைக்கணும் என்றில்லை. வெளியிலேயே ஒரு அரை மணி நேரம் வைத்திருந்தும் பொரிக்கலாம். நன்றி பாலபாரதி.

அன்புடன்,
செல்வி.

எடுத்துக்கலாமே! செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌.

அன்புடன்,
செல்வி.

மொறு மொறு சிக்கன் சூப்பர் அக்கா. எனக்கு கொஞ்சமா அனுப்பி வைங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வித்தியாசமா அருமையான குறிப்பா தந்திருக்கீங்க செல்விமா

ஏன் கொஞ்சமா? நிறையவே அனுப்பி வைக்கிறேன்:)
நன்றி உமா!

அன்புடன்,
செல்வி.

எல்லாம் kfc மாதிரி செய்யணும்னு ஒரு முயற்சி தான்:) நன்றிம்மா.

அன்புடன்,
செல்வி.

பார்ட்டி நேரங்களில் செய்வதுண்டு. ப்ரெட் க்ரம்ப்ஸ் / கார்ன் ஃப்ளேக்ஸ் கொண்டு செய்திருக்கேன். நல்லா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் வனி, பார்ட்டிக்கு நல்லா இருக்கும். பிரவுன் பிரட் தூளில் செய்ததால் கலரிப்படி இருக்கு. சாதா பிரட்டில் செய்தால் இன்னும் பொன்னிறமாக‌ இருக்கும். நன்றி வனி.

அன்புடன்,
செல்வி.