மசாலா முட்டை வறுவல்

தேதி: June 23, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (5 votes)

அவித்த முட்டை - 4 (கீறி வைக்கவும்)
வெங்காயம் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மசாலா செய்வதற்கு:
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

மசாலா செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பவுலில் போட்டு சிறிது நீர் சேர்த்து கெட்டியாகக் கலந்து, அத்துடன் முட்டைகளைச் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, ஊறிய முட்டைகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், வறுத்த முட்டைகளைச் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
வெள்ளை சாதம் முதல் பிரியாணி வரை அனைத்திற்கும் ஏற்ற, எளிமையான, சுவையான மசாலா முட்டை வறுவல் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

மசாலா முட்டை வறுவல் அருமை,

ஈஸியானதொரு சைடிஷ்... சூப்பரா இருக்கு....

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ஃப்ரெண்ட்ஸ்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமாஈசியா இருக்கே செய்துடவேண்டியதான்

நன்றி இனியா. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எப்பவும் போல ஈசி ரெசிபி... அவசியம் செய்துட்டு வரேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

easy preperation thanks akka.