WEDDING ANNIVERSARY GIFTS

Hai friends, enaku coming 10, 3rd anniversary ithuku munadi vantha anniversaryku ellam ennoda husband enkooda irun thanka but ippo avanka abroad la irukkanka so na avanka friend moolama gifts send panalanu plan panni irukken. enna gift kudukalam? then anniverasrya eppadi celebrate pannalanu idea kudunka friends.....

plese guide me frinds............

//na avanka friend moolama gifts send panalanu plan panni irukken. enna gift kudukalam?// கிஃப்ட் வாங்க முன்னால அந்த ஃப்ரெண்ட்டிடம் பேசுங்க. எந்த நாட்டுக்கு போறாங்க? எத்தனை கிலோ அவங்களுக்கு அலவ்ட்! அதுல அவங்க தேவைகளுக்குன்னு கொண்டு போறதுல்லாம் இருக்கும்.
பெருசா கொடுத்தா அவங்களுக்கு இன்னொரு பை தேவைப்படலாம். பாரமா கொடுத்தால் அவங்க லக்கேஜ்ல கட். இல்லாட்டா அவங்க பே பண்ணணும். பாவம் அவங்க.

சின்னதா, பாரமில்லாமல், உடையாத பொருளாக, கஸ்டம்ஸ் பிரச்சினை வராமலிருக்கிற பொருளாக, பயனுள்ள பொருளாக செலக்ட் பண்ணி அனுப்புங்க. கொண்டு போற ஆள் எப்படியும், "அதுக்கென்ன கொடுங்க"ம்பாங்க. அப்படித்தான் அவங்க சொல்லணும். அதுக்காக பெருசா கொடுத்துராதீங்க. எனக்கு அனுபவம் இருக்கு. உதவ நினைச்சு, "கொடுங்க"ன்னு சொன்னேன். சின்னதா ஒரு சாக்லேட்னாங்க. வந்தது எத்தனை கிலோன்னு கேட்டா மயங்கிருவீங்க. ஹாண்ட் லக்கேஜ் 7 கிலோ அலவ்ட். வந்த சாக்லேட் 6 கிலோ. அதுவும் அதிகாலை கிளம்பறோம். முதல் நாள் இரவு கொடுத்தாங்க. நாங்க பாக்ட். பைல இடம் இல்லை. பாதியை வீட்ல வைச்சுட்டு கிளம்பியும் ஏர்போட்ல பிரச்சினையாகிச்சு. எங்க பொருள்னா வீசிட்டு போகலாம். அவங்களதை வீசவும் முடியாது. இதுக்காக எங்க பொருளை வீசிட்டு போறதா! ஏர்போர்ட்ல உட்கார்ந்து எல்லா பையும் பிரிச்சு ஒவ்வொண்ணுல ஒண்ணா வைச்சு.. அதை இங்க இதை அங்கன்னு பிரிச்சு.. மன உளைச்சலோடதான் ட்ரிப் ஆரம்பிச்சுது.

இன்னொருத்தர் இருக்காங்க. எப்பவும் நகை அனுப்பணும் அவங்களுக்கு எங்க மூலம். கொடுத்துட்டு என்னை, "கவனமா கைல கழுத்துல மாட்டிட்டுப் போ"ம்பாங்க. நான் நகை போடாத ஜாதி. வளையல்லாம் என் கைல மாட்டவே முடியாது. குட்டி கை என்னுது. ;) நான் பிடிவாதமா மாட்டேன்னு சொல்லி அவங்க அடம் பிடிச்சு.. இதுல்லாம் நான் இன்னொருத்தர் வீட்ல விருந்தாளியா இருக்கிறப்ப நடக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும் எனக்கு.

இது உங்க அனிவர்சரி... கொண்டு போறவங்க மனசுக்குள்ள வருத்தப்படப்படாம இருக்கிறது முக்கியம். ரீசனபிளா பார்த்து பண்ணுங்க. சின்னதா அனுப்புங்க. அல்லது குரியர்ல அனுப்பலாம். இல்லாட்டா.. அங்க இருக்கிற கம்பெனி ஏதாச்சும் கொண்டு போய் கொடுக்கிற மாதிரி ஆன்லைன்ல பண்ண முடியுமான்னு பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

நிறைய websites இருக்கு . இதுல நீங்க search பண்ணி
உங்களுக்கு பிடித்த unique ஆனா gift அ உங்க husband கு கொடுத்து
அசத்துங்க. திருமண நாள் வாழ்த்துக்கள்......

அறுசுவையில் வேறு தளங்களின் லிங்க் கொடுக்க வேண்டாமே! ப்ளீஸ்.

நீங்கள் புதிய உறுப்பினர் என்று தெரிகிறது. ஒரு தடவை மன்றவிதிகள், நிபந்தனைகள் எல்லாம் படிச்சுப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

Thank you akka na oru watch present panalanu plan panni irukken .

Thank u sister...

மேலும் சில பதிவுகள்