சோள இட்லி

தேதி: June 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

சோளம் - 3 1/2 கப்
உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சாதம் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். சோளத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்துடன் வெந்தயத்தைச் சேர்த்து 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் உளுந்தையும், சோளத்தையும் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். உளுந்து அரைக்கும் போது அத்துடன் சாதத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (சாதம் சேர்த்து அரைப்பதால் குளிர் காலங்களிலும் எளிதில் புளித்துவிடும்).
அரைத்த கலவையுடன் உப்புச் சேர்த்து கைகளால் நன்கு கலந்துவிட்டு, 8 மணி நேரம் புளிக்கவிடவும். (8 மணி நேரத்திற்கு பிறகு மாவு நன்கு புளித்து பொங்கியிருக்கும்).
பொங்கிய மாவை ஒரு கரண்டியால் கலந்துவிட்டு, இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.
சத்தான, சுவையான சோள இட்லி தயார். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

சோளத்தில் அரிசியைவிட அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.

ஊறிய சோளத்தை அரைப்பதற்கு, அரிசி அரைக்கும் நேரத்தைவிட சற்று கூடுதலான நேரம் ஆகும்.

சாதம் சேர்த்து அரைக்கத் தேவையில்லை. நான் எப்பொழுதும் இட்லிக்கு சிறிது சாதம் சேர்த்து அரைப்பதுண்டு, இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு எளிதில் புளித்துவிடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹெல்தியான மல்லிப்பூ மாதிரி சூப்பர் இட்லி

Be simple be sample

ஹெல்தியான இட்லி,சாததிற்கு ப்தில் அரிசி எவ்வளவு சேர்க்கலாம் தோழி.

சோளா இட்லி சூப்பர், அருமையாக இருக்கு ஆரோக்கியமான குறிப்பு.

நான் சோளத்தில தோசை செய்திருக்கேன்( ஊர்ல இருக்கும்போது) சோளத்தில் இட்லி அருமை.
இங்க UK வந்தப்பின்பு இந்த ஊர்ல (Harlow) இப்பதாங்க நல்ல அரிசியையே தேடிகண்டுபிடிச்சிரிக்கேன்.உங்களுக்கு சோளமெல்லாம் கிடைக்குதா பரவாயில்லையே! நீங்க என்ன Eastham ல இருக்கீங்களா?

சோள‌ இட்லி மிக மிக‌ அருமை.
படங்கள் அத்தனையும் களைகட்டுது... சூப்பருங்க‌!

சத்தான இட்லி. சூப்பர் வாணி. :-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

super

சூப்பர். நேற்று தான் இட்லி மாவு போட்டேன், அடுத்த முறை போடும் போது இதை போட்டுடுறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகளே அனைவரின் வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி.

இனியா சாதம் சேர்க்காமலும் அரிசி இதே அளவு தான்.

அனு செந்தில் நாங்கள் இருப்பது Swindon அருகே Country side.இங்குள்ள வட இந்திய கடையில் சோளம் கிடைத்தது. Wembley-ல் டிரை பண்ணிப் பாருங்க, கிடைக்கும்.

கண்டிப்பாக தேடி பார்க்கிறேன் வாணி, ஏன்னா எனக்கு இந்த கம்பு, சோளம் எல்லாம் ரொம்ப இஷ்டமான தானியங்கள்.