கொள்ளு ஃப்ரைடு ரைஸ்

தேதி: June 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

அரிசி - ஒரு கப்
முளைக் கட்டிய கொள்ளு - அரை கப்
முட்டைக்கோஸ் துருவல் - அரை கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - கால் பாகம்
பெங்களூர் தக்காளி - 2
வெங்காயத் தாள் - 2
ப்ரோக்கோலி - கால் பாகம்
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - அரை மேசைக்கரண்டி
சாஜீரா (கருஞ்சீரகம்) - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

அரிசியைக் களைந்து உதிரியாக சாதத்தை வேக வைத்து எடுத்து, கால் தேக்கரண்டி எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.
கொள்ளைக் கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, ஓவனில் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (அல்லது அடுப்பில் வைத்து குழையாமல் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்). ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக நறுக்கி, 5 நிமிடங்கள் வெந்நீரில் போட்டு வடித்து வைக்கவும். குடைமிளகாய், வெங்காயம், வெங்காயத் தாள் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டு, மூன்றாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கருஞ்சீரகம் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அனைத்தும் வதங்கியதும் வேக வைத்த கொள்ளு சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கி, சாதத்தைச் சேர்த்துக் கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு மூடி வைத்து மிதமான தணலில் 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். அவ்வப்போது கிளறிவிடவும். காய்கள் மற்றும் தூள் வகைகளுடன் சாதம் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
சத்தான, சுவையான கொள்ளு ஃப்ரைடு ரைஸ் ரெடி.

நான் டயா ரைஸில் செய்துள்ளேன். இதையே ப்ரவுன் ரைஸ் மற்றும் சாதாரண ரைஸிலும் செய்யலாம். ப்ரவுன் ரைஸில் செய்தால் இன்னும் சத்தாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட கொள்ளு ல பிரைட்ரைஸ் சூப்பர்

Be simple be sample

இப்படியும் பண்ணலாமா,நல்லாருக்கு செல்விமா.

கொள்ளு ஃப்ரைடு ரைஸ் சூப்பர், செய்முறை எளிமையாக உள்ளது, கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

அதிகமா கொள்ளு சேர்த்துக்கனும்னு தோனும், ஆனா நிறைய வெரைட்டீஸ் செய்யத்தெரியாது எனக்கு, சூப்பரான அயிட்டம் இது,ரொம்ப நன்றிங்க.

சூப்பரா இருக்கு அக்கா கொள்ளு ஃப்ரைட் ரைஸ். யம்மி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மிக‌ ஈசியா இருக்கு செய்து பார்த்துடுறேன். மிக்க‌ நன்றி இந்த‌ டிஸ்க்கு

மிக்க‌ நன்றி ரேவதி.

அன்புடன்,
செல்வி.

இப்படியும் பண்ணலாமே! நன்றி இனியா.

அன்புடன்,
செல்வி.

எளிதாக‌ செய்து விடலாம் தான். செய்து பாருங்க‌. நன்றி!

அன்புடன்,
செல்வி.

கொள்ளு அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. மகனுக்கும், எனக்கும் டயட்டுக்கு செய்யும் போது இப்படி செய்யத் தோன்றியது. நன்றி.

அன்புடன்,
செல்வி.

டேஸ்டும் ரொம்ப‌ நல்லா இருக்கும். செய்து பாருங்க‌. நன்றி.

அன்புடன்,
செல்வி.

ஈசிதான், செய்து பாருங்க‌. நன்றி

அன்புடன்,
செல்வி.

கொள்ளுல ஃப்ரைட் ரைஸ்... சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா