பூச்சிக்கடி

என் குழந்தைக்கு 5 மாதம் ஆகிரது அவனுக்கு உடம்பு முழுவதும் பூச்சிக்கடி கடித்து உள்ளது. டாக்டரிடம் காட்டினொம் ஒரு க்ரிம் கொடுத்தார்கள் அதை பொட்டும் பூச்சி கடிகிரது. பூச்சி கடிக்காமல் இருக்க‌ என்ன‌ பொடுவது. இரவெல்லாம் நெலிந்து கொண்டே இருக்கிரான். என்ன‌ செய்வது. என்ன‌ face cream போடுவது. எனக்கு பிரவசத்திர்க்கு பிரகு மிகவும் முடி கொட்டுகிரது அதர்க்கு என்ன‌ செய்வது

கடித்த இடத்தில் டாக்டர் கொடுத்த மருந்தைத் தடவுங்க. லாக்டோ காலமைன் கூட நிறைய ஹெல்ப் பண்ணும். சொறிய விட வேண்டாம்.

ரெபெலண்ட் இல்லாவிட்டால்... புல் எண்ணெய் (Citronella oil) கிடைக்குமா? மருந்துக் கடைகளில் கேட்டுப் பாருங்க. நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கக் கூடும். பூசி விடலாம். கையை வாய்ல வைக்க விடாதீங்க. முகத்துல பூச வேணாம்.

இது குட்டிப் பாப்பாவுக்கு ரெகமண்ட் பண்ண மாட்டேன். ஆனால் தெள்ளு கடித்து குழந்தை கொடுமை அனுபவிக்கிறதுக்கு ட்ரை பண்ணலாம். பேகான் ஸ்ப்ரே... anti-allergen spray பார்த்து வாங்குங்க. பாப்பா படுக்கையில் அடித்துவிட்டு மேலே இன்னொரு விரிப்பைப் போட்டு தூங்க விட்டுப் பாருங்க. தினமும் வேணாம். எனக்கு என்னவோ நீங்க சொல்றதைப் பார்க்க இப்போ துணிகளில் எல்லாம் குடம்பி இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு முறை ஃபுல்லா வீடு, படுக்கை, தரை, துணி எல்லாம் சுத்தம் செய்தால் நல்லது.

உங்களுக்காக தேடிப் பார்த்தேன். எல்லா இடத்திலும் பிராணிகளுக்கான வீட்டு வைத்தியம்தான் கிடைத்தது.

புதினா, லாவண்டர், ரோஸ்மெரி, பூடு, எலுமிச்சை வகை பழங்களில் தோல், கராம்பு, கற்பூரம், யூகலிப்டஸ் வாசனைகள் எல்லாம் தெள்ளு விரட்டிகளாகப் பயன்படுத்துகிறார்கள். துளசி வாசம் கூடப் பிடிக்காது என்று நினைக்கிறேன்.

இதில் எதையாவது அறையில் மூலை முடுக்குகளில் போட்டுப் பாருங்க. தெள்ளு துள்ளிட்டே இருக்கிறதால இல்லாமல் செய்றது கொஞ்சம் கஷ்டம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்