ஃபிஷ் ப்ரை

தேதி: June 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

மீன் - 6 துண்டுகள்
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - ஒரு மூடி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

பாத்திரத்தில் கார்ன் ஃப்ளாருடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து, எலுமிச்சைச் சாறு பிழிந்துவிடவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையில் மீன் துண்டுகளை பிரட்டி எடுக்கவும்.
பிரட்டி எடுத்த மீன் துண்டுகளை ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்த மீன் துண்டுகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
டேஸ்டி ஃபிஷ் ஃப்ரை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஃபிஷ் ஃபிரை நல்லா அட்ராக்டிவா இருக்கு நித்யா

மீன் ஃபிரை சூப்பர்.

அடுத்த‌ வாரம்தான் ஃபிஷ் எடுக்கப்போறோம்.அப்ப‌ செய்துட்டு சொல்றேன்.படம் சூப்பரா இருக்கு.

சூப்பர் ஃபிஷ் ஃபிரை நித்யா. எனக்கு ஒரு துண்டு மட்டும் ப்ளீஸ். ;-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உங்க‌ மீன் பாக்க‌ ரொம்ப‌ நல்லா இருக்கு. டேஸ்டும் அப்டி தானு நினைக்கற‌. என்ன‌ மீன்ல‌ செஞ்சீங்க‌? எனக்கும் குடுங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

இந்த குறிப்பை எப்படி நான் பார்க்காம விட்டேன்!! சூப்பரா இருக்குங்க, ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

கருத்து தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் எனது நன்றி..

ரேனு,வனி கன்டிப்பா செஞ்ஜி பாருங்கள்.

உமா எடுத்துகோங்க.

பாலனாயகி இந்த ஊரில் இதை கோடோயோன் மீன் சொல்லுவாங்க.