help me frnds

என்னுடைய friendக்கு முதல் குழந்தை சிசேரியன்.இப்போது இரன்டாவது கர்ப்பமாக இருக்கிறாள்.இரன்டாவது குழந்தை நார்மல் ஆக வாய்ப்பு உள்ளதா கூறுங்கள் தோழிகளே!!

first baby piranthu evlo years achu. normal delivery aga chance iruku

4 yrs aaguthu

//நார்மல் ஆக வாய்ப்பு உள்ளதா கூறுங்கள் தோழிகளே!!//

என்ன காரணத்தால் முதல் தடவை சிசேரியன் செய்ய நேர்ந்தது என்று உங்களுக்குத் தெரிந்த மாதிரி இல்லை. சொல்றேன் என்று கோவிக்காதீங்க. நீங்க இங்க கேட்டு அந்த பதில்களை அவரிடம் கொண்டு போய்க் குழப்ப வேண்டாம். அவங்களை விடுங்க. அவங்களும் அவங்களைப் பார்க்கும் டாக்டரும் முடிவு செய்யட்டும்.

'நார்மல்' என்கிறது வேறு, தாயும் சேயும் பிரசவத்துக்குப் பின்னால ஆரோக்கியமா இருக்கிறது ஒன்று இருக்கு. அதைவிட உயிரோட இருக்கிறது என்கிறதும் ஒன்று இருக்கு. பலரும் நினைக்கிற 'நார்மல்' அப்நார்மலா ஆகிட்டா என்ன ஆகும் என்கிறது அனுபவிச்ச பின்னாலதான் புரியும். அப்போ ரிவர்ஸ்ல போய் சிசேரியன் பண்ணி சரி செய்ய முடியாது.

முன்னால பிரச்சினைகளோட இருக்கிறவங்களுக்கு கடைசி நேரம் எல்லாம் சரியாக அமைஞ்சுருறதும் உண்டு. முதல்ல நல்லா இருக்கிறவங்களுக்கு கடைசி நிமிஷம் பிரச்சினை ஆகுறதும் உண்டு.

நீங்க நல்ல ஃப்ரெண்டா, எதுவானாலும் நல்லதுதான் என்கிறதை அவங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க. யோசிக்க வேணாம் என்று சொல்லுங்க. எதுவானாலும் டாக்டரிடமே கேட்டு தெளிஞ்சுக்கச் சொல்லுங்க. ஆதரவா இருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்