pls help me frnds

my daughter ku 8month aichu vilayatutanam athigam aichu en doctor solid food mattum koduga din product yethum vendam solluraga nama sapudura food idly,parupusatham,soup,juice,apple koduka solluraga but ipa overa adam pidikura sapuda matugura eppothum veliya roadla nikanum kura veetukula vandha azhuvura pidivatham overa aichu enna panurathu therilla overa azhuvura veliya ponna silenta aiyura eppothum veliya nika mudiyathu so enna pannalam sollunga friends

இது குழந்தைக்கு விபரங்கள் புரிய ஆரம்பிக்கும் பருவம். வெளி உலகைப் பார்க்கும் ஆவல் வந்திருக்கிறது. அடம் பிடிக்கிறார்கள் என்றால் பொழுது போகவில்லை அல்லது அவர்கள் தேவைக்குத் தீனி போடுவது போல வீட்டின் உட் சூழலில் விடயங்கள் இல்லை.

புதுசா விளையாட்டுப் பொருள் ஏதாச்சும் வாங்குங்க. வெறும் பொம்மையாக இராமல் அசையக் கூடியதாக அல்லது பாப்பா ஏறி இருந்து தள்ளுவது போல வாங்குங்க. 'கன்ஸ்ட்ரக்டிவ் டாய்ஸ்' வாங்கினால் நல்லது. உங்களுக்குத் தெரியும் உங்கள் குழந்தையின் ரசனை. பார்த்துத் தெரிவு செய்யுங்க. கலரும் பளிச்சென்று இருக்கட்டும். கடைக்குப் போகும் போது பாப்பாவையும் கூட்டிப் போங்க. அவங்களுக்கு என்ன பிடிக்கிறது என்பது புரியும். குட்டிக் குட்டி பார்ட்ஸ் உள்ளவை வேண்டாம். பாதுகாப்பு இல்லை.

புதிதாகக் கிடைக்கும் பொருள் அவங்க கவனத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளும். சின்னவர்களுக்கு எதுவும் கொஞ்ச நாள்தான். பிறகு போர் அடிச்சுரும். வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி வேற பொம்மை வாங்க வேண்டும்.

முடிஞ்சா குட்டி ட்ரைசிக்கிள்... அதற்கென்று உள்ள தடியோடு வாங்குங்க. சின்னதா வாக் :-) போகலாம். வாக் உங்களுக்கு; ரைட் பாப்பாவுக்கு.

‍- இமா க்றிஸ்

என் குழந்தையாம் அப்படி தான். நான் அவளை வாயில் விரல் கூட‌ சப்பா விட மாட்டேன். அழுவா அப்போது வெளி தான் கூட்டி செல்லுவேன். பிறகு தான் walker siting position home full round adi pan. இபோது toys daily clean பண்ணி தருகிறேன்.

நான் காலை மற்றும் மாலை cerelac than tharan. afternoon rice with vegetable. rice sapata mata nanu play,walker, balcony,tv try pani kutupan sapata mata. 1st oru 2 month apadi than panuva. apuram sari agum. neega ava munadi rice saputuka atha ava taste panu neepa apo neega ava food kuduka. i m trying daily any one or two method only.

doubt frinds,

என் மகள் கீழ் உதடை வாயில் உள்ள‌.. எப்போதவது இருந்துக்கிட்டே இருக்கு. என் அப்பா மேல் பல் வருவதற்க‌ இருக்காலம் என்றும் மற்றும் என் கணவர் அண்ணா அப்பாடிதான் சிறு வாயதில் பண்ணி இப்போதும் அந்த‌ பழக்கம் போக‌ வில்லை அதானால் பயமாக‌ இருக்கு. pls help me

//என் மகள் கீழ் உதடை வாயில் உள்ள‌.. எப்போதவது இருந்துக்கிட்டே இருக்கு.// காரணம் அப்பா சொன்னது போல் பல்லு வருவதன் காரணமாக இருக்கலாம்.

//நான் அவளை வாயில் விரல் கூட‌ சப்பா விட மாட்டேன்.// என்கிறீங்க. நீங்களே கூட இந்தப் பழக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
"அம்மா விரலைத்தான் வாய்ல வைக்க விட மாட்டேங்கறாங்க. வாயையே வாய்ல வைக்கிறதை எப்பிடித் தடுப்பாங்க பார்க்கலாம்." என்று நினைக்கிறாங்க போல இருக்கு. :-)

விரலுக்கு எதிர்ப்புக் காட்டாம அடிக்கடி சுத்தம் பண்ணி விட்டிருக்கலாம் நீங்க. விரல் பழக்கம் கொஞ்ச காலத்துல போய்ரும். இதுவும் பரவாயில்லைதான். இருந்தாலும் பழக்கம் அதிக காலம் தொடராமல் பார்த்துக்கங்க. பாப்பா உதட்டை வைச்சு என்ன பண்ணுறாங்க என்கிறதைப் பொறுத்து உதடு வடிவம் மாறலாம். பற்கள் அமைப்பும் பாதிக்கப்படலாம். பாதிக்கப்படும் என்று சொல்லல நான். பாதிக்கப் படலாம். வேற பராக்கு இருந்தால் நிச்சயம் இப்படிப் பண்ண மாட்டாங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா

மேலும் சில பதிவுகள்