தேங்காய்ப்பால் சாதம்

தேதி: December 27, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சீரகச் சம்பா அரிசி- ஒரு தம்ளர்
பெரிய வெங்காயம்- 2
தக்காளி-2
பாசிப்பருப்பு- ஒரு கை
கடலைப்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால்-அரை கப்
புதினா-ஒரு கை
கொத்தமல்லித்தழை-ஒரு கை
கறிவேப்பிலை- சில இலைகள்
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
தேவையான உப்பு
எண்ணெயும் நெய்யுமாகக் கலந்தது- 2 டேபிள்ஸ்பூன்

அரைக்க வேண்டியவை:

பச்சை மிளகாய்-2
துருவிய இஞ்சி-1 ஸ்பூன்
பூண்டு பற்கள்- 5

பொடிக்க வேண்டியவை:

பட்டை-2
கிராம்பு-2
ஏலம்-2


 

1. அரிசி, பருப்பு வகைகளைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயும் நெய்யும் ஊற்றி சூடாக்கவும்.
3. வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு குழையும்வரை வதக்கவும்.
4. பின் அரைத்த மசாலாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. பிறகு பொடியைச் சேர்த்து வதக்கவும்.
6. பிறகு அரிசி, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலகள், தேவையான உப்பு சேர்த்து தேங்காய்ப்பாலும் தண்ணீரும் சேர்ந்து 5 தம்ளர்கள் இருக்குமாறு அளந்து கொண்டு ஊற்றி நன்கு கலந்து மிதமான தீயில் சமைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

HI மனோ ஆண்டி,

எனக்கு இதில் சில சந்தேகங்கள்:
இந்த சாதம் குழையனுமா,இல்லை உதிராக வருமா?
ஒரு கப் அரிசிக்கு 5 கப் தண்ணீர் வேண்டுமா?
ப்ரெஷர் குக் செய்ய கூடாதா?
அப்படியே இதுக்கு மேட்சிங்கான சைட் டிஷும் சொல்லுங்க :).

Thanx

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

இந்த சாதம் பொங்கல் சாதம்போலக் குழைய வேண்டும். அரிசிக்கும் பாசிப்பருப்பிற்கும் சேர்த்து 5 தம்ளர் தண்ணீர் இருந்தால்தான் குழைந்து வரும். இப்படி செய்வதில் உள்ள சுவை ப்ரெஷர் குக்கர் சமையலில் வராது. இதற்கு பொதுவாக காரமான எந்த மசாலாவும் சுவையாக இருக்கும். உதாரணம்- சிக்கன் குழம்பு வகைகள், சிக்கன் கட்லட், போன்றவை

இன்று லஞ்சுக்கு தான் செய்தேன்.நன்றாக வந்தது.நீங்கள் கூறியது போல் பொங்கல் கன்ஸிஸ்டன்ஸியில் இருந்தது.நல்லவேளை, 5 கப்பிற்கும் சிறிது அதிகமாகவே சேர்த்திருந்தேன் . ப்ரெஷர் குக்கரில் இந்த டேஸ்ட் வராது.
thanx for ur grt recipe.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

தேங்காய்ப்பால் சாதம் நன்றாக வந்ததறிய மகிழ்ச்சி.
அன்பான பின்னூட்டத்திற்கு அன்பான நன்றிகளும்கூட!!

இன்னைக்கு மதியம், தேங்காய் பால் சாதம் - ஹைதிராபாத் கோழிக்கறி மற்றும் ரைத்தா வோட சாப்பிட்டோம். ரெண்டுமே ரொம்ப அருமை.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்புள்ள சந்தனா!

தேங்காய்ப்பால் சாதம், ஹைதராபாத் கோழிக்கறி, இரண்டுமே செய்து பார்த்து மிகவும் சுவையாக இருந்ததாக அன்புப் பின்னூட்டம் கொடுத்த உங்களுக்கு என் அன்பு நன்றி!!