சலாமி சாண்ட்விச்

தேதி: July 7, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

ப்ரவுன் ப்ரெட் / சாண்ட்விச் ப்ரெட் - 10
சிக்கன் சலாமி - 6
லெட்டூஸ் - ஒன்று (சிறியது)
கோஸ் துருவல் - ஒரு கப்
சுக்கினி - 2
குடைமிளகாய் - ஒன்று
செலரி - ஒரு கைப்பிடி அளவு
லீக்ஸ் - ஒன்று
வெங்காயத் தாள் - 5
சாண்ட்விச் ஸ்ப்ரெட் (Sandwich Spread) - 3 மேசைக்கரண்டி
எக்லெஸ் மயோனைஸ் - ஒரு மேசைக்கரண்டி
பீநட் பட்டர் / சாலட் பட்டர் - 2 மேசைக்கரண்டி


 

லெட்டூஸ், லீக்ஸ், செலரி, குடைமிளகாய், சுக்கினி மற்றும் வெங்காயத் தாள் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். சலாமியை ஓவனில் மூன்று நிமிடங்கள் வேக வைத்தெடுத்து பொடியான, நீளத் துண்டுகளாக நறுக்கவும். (ஆவியிலும் வேகவைத்து எடுக்கலாம்).
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மயோனைஸ் மற்றும் சாண்ட்விச் ஸ்ப்ரெட் போட்டுக் கலக்கவும்.
ஒரு ப்ரெட் ஸ்லைஸை எடுத்து பீநட் / சாலட் பட்டர் தடவவும்.
அதன் மேல் சலாமி கலவையை பரவலாக வைத்து, பட்டர் தடவிய இன்னொரு ப்ரெட் ஸ்லைஸை வைத்து மூடவும்.
அனைத்து ப்ரெட்டையும் இதே போல தயார் செய்து, ஓவனில் 2 நிமிடங்கள் வைத்தெடுக்கவும். (ப்ரெட்டின் இருபுறமும் சூடாகும் வரை தோசைக்கல்லில் வைத்தும் எடுக்கலாம்).
ப்ரெட்டின் ஓரங்களை கத்தியால் நறுக்கிவிட்டு, முக்கோணமாக நறுக்கிப் பரிமாறவும். சத்தான காலை உணவு தயார்.

சலாமியை நறுக்காமல் முழுவதுமாக வைத்து, மேலே சிறிது ஸ்ப்ரெட் வைத்து சாண்ட்விச் செய்யலாம்.

சுக்கினிக்கு பதிலாக வெள்ளரிக்காயும் சேர்க்கலாம்.

தக்காளி சேர்த்தும் செய்யலாம். தக்காளி சேர்த்தால் உடனே சாப்பிட வேண்டும். இல்லையெனில் ப்ரெட் ஊறிப் போய்விடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சலாமி சாண்ட்விச் அருமை காலை மற்றும் மாலை நேர சிறந்த உணவாக சாப்பிட நல்லா இருக்கும்.

சலாமி சாண்ட்விச் அருமை அக்கா. பிறந்தநாள் விருந்தா? இனிய வாழ்த்துக்கள் அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா