கோதுமை புலாவ்

தேதி: December 28, 2006

பரிமாறும் அளவு: 4நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உடைத்த கோதுமை ரவை - ஒரு கோப்பை
சிறு பருப்பு - ஒரு கோப்பை
பச்சைமிளகாய் - ஐந்து
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கேரட் - அரைக்கோப்பை
பீன்ஸ் - அரைக்கோப்பை
பச்சைபட்டாணி - அரைக்கோப்பை
பட்டை, இலவங்கம், ஏலம் - தலா இரண்டு
சீரகம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை


 

குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் ஐந்து கோப்பை நீரை ஊற்றி உப்பைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்பு ரவையையும் பருப்பையும் கழுவி அதில் போட்டு உதிரி உதிரியாக வேகவைத்துக் கொள்ளவும்.
காய்கறிகளை அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து வாசனைப் பொருட்களைப் போட்டு சீரகத்தையும் போட்டு தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி, மஞ்சள்தூள், கறிவேப்பிலையைப் போட்டு நன்கு வதக்கி வேகவைத்த காய்களைப் போட்டு உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
தொடர்ந்து வேகவைத்த ரவை, பருப்பு கலவையைக் கொட்டி நன்கு கலக்கி விடவும்.
பிறகு அடுப்பின் அனலை மிகவும் குறைவாக வைத்து மூடியைப் போட்டு வைக்கவும். அரைமணி நேரம் கழித்து இலேசாக கிளறிவிட்டு கொத்தமல்லியை தூவி சூடாக பரிமாறவும்.


சோற்றை குறைக்க நினைப்பவற்களுக்கு இந்த கோதுமை புலாவ் நல்ல சத்தான முழூ உணவாகும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் மனோஹரி,
கோதுமை ரவை கொண்டு உப்புமா தான் செய்துள்ளேன்... இந்த குறிப்பை செய்து பார்தேன். மிகவும் சுவையாக இருந்தது..... நன்றி.

நன்றி...

மிக்க சந்தோஷம்.Thank you dear.bye.