வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்!!

எனக்கு பொதுவா வெளியே சாப்பிட விருப்பம் உண்டு. ரொம்ப யோசிக்கவே வேண்டாம், அம்மா வீட்டில் அடுப்படி பக்கமே போகாம வளர்ந்துட்டேன் அதுவும் ஒரு காரணம்னு சொல்லலாம். நானே சமைச்சா அந்த அடுப்படியில் வரும் வாசம் அதன் பின் எவ்வளவு பசி இருந்தாலும் சாப்பிடும் ஆவலை விரட்டியடிக்குது. அதுவும் முக்கியமா அசைவம், சமைக்கிற அன்று சாப்பிடவே முடியாது என்னால். பார்ட்டி அன்றெல்லாம் காலை 9 முதல் இரவு 10 வரை என்னால் சாப்பிடாம இருந்து வேலை பார்க்க முடியுறதுக்கு அதுவே முக்கிய காரணம், பசி உணர்வே போயிடும். இந்த வெளியே சாப்பிடும் பழக்கம் ஒரு வகையில் அறுசுவைக்கு வந்த பின் எனக்கு நிறையவே உதவி இருக்கு. வெளிநாடுகளில் நம்ம ஊர் ரெஸ்டாரண்ட் எல்லாம் போனால் கேட்டதும் ரெசிபி கொடுத்துடுவாங்க. சிலர் கையால் செய்த பொடி அது இதுன்னு சுத்துவாங்க, சிலர் மசாலாக்கு ரேஷியோ சொல்ல மட்டாங்க, நமக்கு எடுத்ததும் அவங்க சுவை அப்படியே வந்துடாது (தொழில் ரகசியமோ?). ஆனா அந்த உணவை சாப்பிட்ட நமக்கு செய்ய செய்ய என்ன மாற்றம் வேணும்னு பிடிபட்டுடும். இதுவே வெளிநாட்டு ஆட்களின் ரெஸ்டாரண்ட் என்றால் என்ன மாயமோ தெரியாதுங்க... ப்ரிண்ட் பண்ணி ரெசிபி கொடுத்தவங்க எல்லாம் உண்டு!! அவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லியே ஆகனும். சரி இப்போ என்ன சாப்பாட்டு கதை? சொல்றேன் சொல்றேன். அதுக்கு முன்னாடி வனி வீட்டு ஃபில்டர் காபி சாப்பிடுறீங்களா? இந்த ஃபில்டர் என்னோட ஃபேவரட் ;) அம்மா வாங்கித்தந்தது. இதில் எனக்கு மட்டும் தான் காபி போடுவேன். ஆமாங்க... இதன் அளவு 9 செண்டிமீட்டர் உயரமும் 3 செண்டிமீட்டர் அகலமும். மினியேசர் வெரைட்டி (எங்க நம்ம பூனைக்குட்டி ரேணு). நம்ம சுவாவின் கும்பகோணம் டிகிரி காபி எப்போதும் எனக்கு பிடிச்ச ஒன்று. வீட்டில் யாரும் காபி சாப்பிடும் பழக்கமில்லை, ஆனா வனி ஃபில்டர் காபி பிரியை. :)

கும்பகோணம் டிகிரி காபி என்றதும் நினைவுக்கு வருவது சென்னை டூ வேலூர் சாலை தான். எத்தனை டிகிரி காபி கடைகள்! காஞ்சிபுரம் நெருங்கும் போது ஒரு டிகிர் காபி கடை உண்டு, அது எனக்கு வெகு நாட்களா ஃபேவரட்டா இருந்தது. அதை பற்றி அறுசுவையில் கூட சொல்ல நினைப்பேன். ஆனா சமீபத்தில் போன போது காபி தரம் குறைந்து, சுற்றுச்சூழலும் சுத்தம் குறைந்து... இனி இந்த கடை வேண்டாம் என எண்ண வைத்துவிட்டது.

பெங்களூர் வந்தும் வெளியே சாப்பிடும் பழக்கம் என்னை விட்டுப்போகல. உண்மையில் அதிகமாயிட்டு. வெளிநாட்டில் குறிப்பிட்ட சில உணவகங்கள் தான் பிடிக்கும், அங்கே ஒரே வகை உணவு தான் இருக்கும். ஆனா இங்க நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கே. அப்படி சாப்பிட்டதில் பிடிச்ச சிலது இங்கே. முதல்ல மல்லேஷ்வரம் ஏரியாவில் உள்ள ”ஹல்லி மனே” (கிராமத்து வீடு என்று அர்த்தம்). அங்க நான் முதல் நாள் போனபோது ஃபுல் மீல்ஸ் வாங்கினார் என்னவர். ஆரம்பமே அசத்தலா ராகி ரொட்டியோட துவங்கினாங்க பாருங்க... சூப்பர். 2 பொரியல், 1 கூட்டு, வெரைட்டி ரைஸ், ரொட்டி, குருமா, சாதம், ரசம், தயிர், ஐஸ்க்ரீம், பழம் என்று சிம்பிளான மெனு தான், ஆனா நிரைவா இருக்கும். நானே போதும் என்றாலும் “இதை ட்ரை பண்ணுங்க”னு கேட்டு கேட்டு செர்வ் பண்ணுவாங்க. அங்கே என் ஃபேவரட் ராகி ரொட்டி & அக்கி ரொட்டி தான். கர்நாடகாவின் பாரம்பரிய உணவு வகைகளை இங்கே சுவைக்கலாம். :)

சைவம் என்றால் என்னோட சாய்ஸ் ஹல்லி மனே போலவே “வாசுதேவ அடிகாஸ்”. இங்கே ரவா இட்லி, போண்டா சுப், பூரி சாகு எல்லாம் என் ஃபேவரட். அடுத்த ஃபேவரட் “ஷிவ் சாகர்”. இங்கே கிடைக்கும் “வெஜ் பக்கோரா”, அதோடு வரும் க்ரீன் சட்னி!! சூப்பர். சாட் மசாலா தூவி அதன் வாசமே நம்மை இழுத்து கொண்டு போய் ரெஸ்டாரண்ட் உள்ளே உட்கார வெச்சுடும். இங்கே சுவைத்ததில் சமீபத்தில் எனக்கு ரொம்ப பிடிச்சது “வெஜ் தவா மசாலா”. இன்னும் அந்த குறிப்பு என் அடுப்படியில் ஆராய்ச்சியில் தான் இருக்கு ;)

இன்னும் நிறைய ரெஸ்டாரண்ட் இருக்கு சொல்ல... ஆனா எல்லாத்துக்கும் முன்னாடி இப்போ முக்கியமான இடம் “ஃப்ரேசர் டவுன் - மாஸ்க் ரோட்”. ஆமாங்க ரமதான் ஸ்பெஷல் அங்க தான் உண்மையில் ஸ்பெஷல். மாலை துவங்கும் ஓப்பன் ஸ்டால்ஸ் இரவு முழுக்க இயங்குதுங்க, ரமதான் காலம் முழுவதும். தெரு முழுக்க கூட்டம். என்னவர் பேப்பரில் பார்த்துவிட்டு வந்து சொன்னார், ரொம்ப நல்லா இருக்கும் என்றார்கள் போய் பார்ப்போமா என்று ;) உடனே கிளம்பிட்டோம்ல. பார்க் பண்ண இடம் கிடைப்பதே கஷ்டம், அவ்வளவு ஸ்டால்ஸ் சாலை ஓரம். பெங்களூரில் மிகப்பிரபலமான பல உணவகங்கள் (பீசா ஹவுஸ், எம்பைர், ஷாதி கி பிரியாணி இன்னும் பல) இங்கே ஸ்டால் போடுறாங்க. ஃப்ரேசர் டவுன் ஏரியாவில் ஏற்கனவே உணவகம் வெச்சிருக்கவங்க கூட அவங்க ரெஸ்டாரண்ட் வெளியவே ஓப்பன் ஸ்டால் போடுறாங்க. உள்ளே போய் உட்கார்ந்து காத்திருக்காம எற்கனவே சமைச்சதை போகும் வழியில் உடனே வாங்க வசதியா இருக்கும் என்று. எல்லா இடங்களிலும் கிடைக்கும் உணவு என்னவோ ஒன்றே தான். சிக்கன், மட்டன், மீன் என எல்லாம் மசாலா பூசி எண்ணெயில் குளித்துத் தொங்கும். கீமா சமோசா, கபாப், பிரியாணி, இடியாப்பம் என எல்லாம் உண்டு. சைவப்பிரியர்கள் அங்க வேடிக்கை கூட பார்க்காதீங்க, உங்களுக்கு அங்க ஒன்னும் கிடைக்காது. அசைவப்பிரியையான எனக்கே அங்க போயிட்டு வந்து 10 நாள் அசைவம் பிடிக்காம போச்சுது ;( அந்த எண்ணெயில் வறுத்த அசைவத்தின் வாசம் பண்ண வேலை. சுவையில் குறை இல்லை, விலையும் உணவகத்தில் கிடைப்பதை விட குறைவே. க்ரில், தந்தூரி எல்லாம் வைத்திருக்கும் ஸ்டால்களும் உண்டு. நிச்சயம் ஒரு முறை போய் ருசிக்கலாம். எனக்கு அந்த இடத்தில் ஒரே பிரெச்சனை தான்... பிச்சை. கையில் பிள்ளையோடு நம்மோடு சேர்ந்து நடந்து கையை பிடிச்சு இழுத்து பிச்சை எடுக்கும் ஆட்கள் அங்கே அதிகம். அதைத்தவிற உணவு மட்டும் என்றால் நிச்சயம் போகலாம்.

ஒன்னு உண்மைங்க... உணவு என்பது இப்போதெல்லாம் வயிற்றுக்கு மட்டுமில்லங்க... கண்ணுக்கு மூக்குக்குன்னு மற்ற உணர்வுகளுக்குமே விருந்தா அமையனும். இல்லன்னா “வீட்டில் வைக்கும் ரசம் போதும்” என சீக்கிரம் சொல்ல வெச்சுடும். வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் இந்த இடங்களில் சுவைத்துப்பாருங்க :) உங்க ஏரியாவில் உங்களுக்கு பிடிச்ச உணவகங்களையும் சொல்லுங்க வனி போல ஆட்கள் ஊரை சுற்ற (சாரி புதிதா சாப்பிட) ஆசைப்படுவோம்ல.

5
Average: 5 (5 votes)

Comments

சாப்பாட்டு மேட்டரில் வந்து பூச்சி மேட்டர்!! அந்த பூச்சியை வேற நான் பார்த்துட்டேன் கூகிலில். உவாக்... யாரு அட்மின்னு பதிவு போட்டது ;) என் மண்டையில் நானே குட்டிக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹஹஹா... டெம்பரரி ஃபிலட்ரா?? ;) அது என்னவோ தெரியல வாணி, இவர் எங்க எதை விரும்பி சாப்பிட்டாலும் எனக்கு அதை தெரிஞ்சுக்கனும், வீட்டில் செய்து கொடுக்கனும். அப்படி செய்துட்டேன் என்பதற்காக வெளிய போய் சாப்பிடவே மாட்டேன்னு இல்ல, அப்பவும் போவேன் ;) நிறைய ஆர்டர் பண்ணுவேன், பாதி அப்படியே மிச்சம் வைப்பேன், இவர் திட்டுவார்... சாப்பிடுறது எலி மாதிரி... கேட்குறது பாரு யானை மாதிரின்னு.

ரகசியமா ரெசிபி வைக்கிறவங்க எல்லாம் KFC மாதிரி பெரியாள் ஆயிடுவாய்ங்களா?? பார்ப்போம் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இங்க உள்ள அஞ்சப்பர் 2, 3 முறை தான் போயிருக்கேங்க, அந்த நேரம் உணவு நல்லா தான் இருந்தது. சில இடங்களில் அப்படி நடப்பது உண்டு... ஷாதி கி பிரியாணி (கமர்ஷியல் ஸ்ட்ரீட்) இதில் ஞாயிறு அன்று மட்டும் தான் எனக்கு பிரியாணி பிடிக்கும் ;) மற்ற நாள் எல்லாம் நானும் ரெஸ்டாரண்ட் வெச்சிருக்கேன்னு கடனுக்கு நடத்துறானோன்னு தோனும். வேகாத அரிசி, ஆய்லி பிரியாணி, வெரைட்டி இல்லன்னு எதாவது ஒரு குறை மற்ற நாட்களில். சண்டே ஷாப்பிங் ஏரியா கூட்டம் பிச்சுக்கும்... உணவும் அருமையா இருக்கும்.

எம்பைர், இம்பீரியல், நந்தினி எல்லாமே இங்க அப்படித்தான். இடத்துக்கு இடம் நாளுக்கு நாள் தரத்தில் சுவையில் வித்தியாசம் வரும். இந்திரா நகரில் ஒரு இம்பீரியல் இருக்கு, முதன் முதலில் அந்த இம்பீரியல்ல சாப்பிட்டா அப்பறம் இம்பீரியல் பக்கம் போக மாட்டாங்க. இது போல என்னைக்காவது சொதப்பின அன்னைக்கு நான் சிக்கிட்டா ’எப்படிடா இப்படி?? உன் செஃப் இன்னைக்கு தூங்கிட்டானா?’ன்னு மனசுக்குள்ள திட்டிகிட்டே வந்துடுவேன் ;) இட்ஸ் ஓக்கே... வீட்டில் ஒரு நாள் உப்பு கூடிப்போறதில்லையான்னு சமாதானம் பண்ணிக்கலாம். ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா! நான் இங்க miss பன்றது KC Das பாதாம் ஹல்வாவையும், பேங்களூர்ல கிடைக்கிற சாட் ஐட்டம்ஸ் தான், நான் ஒரு தஹி சாட் பிரியை 2 நாளைக்கு முன்னாடிகூட இங்க UK வில் Eastham போயிருந்தப்ப, இங்கு இருக்கும் சரவணபவன்ல தஹிசாட் கிடைக்குமான்னு கேட்டேன்,இதெல்லாம் இங்க கிடையாதுன்னுட்டாங்க,பிறகு தஹில சாட் இல்லன்னாலும் பரவாயில்ல வடையாவது குடுங்கன்னு தஹிவடை சாப்பிட்டேன்.பேங்களூர் வந்ததும் நேராவந்து உங்கவீட்டு கதவதான் தட்டி வாங்க வனி ஆனந்த்ல தஹிசாட் சாப்பிடலாம்னு கூப்பிடப்போறேன்...............எனக்கு இன்னைக்கு கனவெல்லாம் ஒரே சாப்பாட்டு ஐட்டமா வரப்போறது.........ஹிஹிஹி...........

வாவ்... என்ன ஒற்றுமை என்ன ஒற்றுமை!!! எனக்கு சாட் ஐட்டம்ஸ் ரொம்ப விருப்பம். போன வாரம் வெள்ளிக்கிழமை கமர்ஷியல் ஸ்ட்ரீட் ஆனந்தில் தான் மசாலா பூரி முழுங்கிக்ட்டு இருந்தேன் ;) ஒரே ஒரு வித்தியாசம்... எனக்கு தயிர் உள்ள எதுவும் வெளியே சாப்பிட பிடிக்காது. ஹஹஹா. வாங்க இருவரும் போய் ஆளுக்கொறு சாட் ஐட்டம் வாங்கி முழுங்கிட்டே கதையடிப்போம். இனி உங்க வெக்கேஷனை நீங்க எதிர் பார்க்கறீங்களோ இல்லையோ, எனக்கு சாப்பிட கம்பெனி கொடுக்க போகும் ஆளின் வெக்கேஷனுக்காக நான் ஆவலோட வெயிட்டிங் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கமர்ஷியல் ஸ்ட்ரீட் ஷாதி கி பிரியாணி பல தடவை பாத்திருக்கேன். ஆனா எப்படி இருக்குமோனு போனதில்ல. ஏன்னா இங்க பெரும்பாலும் பிரியாணி தக்காளி சாதம் மாதிரி தான் இருக்கு பல ரெஸ்டாரண்ட் ல. சோ ரிஸ்க் எடுக்காரதில்ல. இப்ப நீங்களே சொல்லிட்டீங்க, அப்பறம் என்ன, நல்ல நாளா
ஞாயிற்று கிழமையா போயி அந்த கடையிலயும் அக்கவுண்ட் ஆரம்பிச்சிரவேண்டியதுதான் :-)

நீங்க சாப்பிட்ட ஒவ்வொன்றையும் சொன்னவிதமே படிக்கும் போது நாங்க சாப்பிட்ட மாதிரி ஆகிடுச்சுங்க.. :-)
கடைசி வரிகள் உண்மைங்க .. பதிவும் அருமைங்..

நட்புடன்
குணா

ஹஹஹ.... ஆனா அங்க பிரியாணிக்கும் நான் கேரண்டியில்லைங்கோ ;) அவன் மனசு போன போக்குக்கு சமைக்கிற ஆளு. கூட கொடுக்கும் கீருக்கு மட்டும் வேணும்னா கேரண்ட் கொடுக்கலாம். :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சொன்னதுக்கே வயிறு ஃபுல்லா??!!! தப்பாச்சே இது ;) ஒழுங்கா சாப்பிட்டுட்டு சொல்லனும். //கடைசி வரிகள் உண்மைங்க// - அனுபவம் அனுபவம்!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா