மீன் வறுவல்

தேதி: July 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

வஞ்சிரம் மீன் - அரை கிலோ
பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை மேசைக்கரண்டி
மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

கோப்பையில் மீன் மற்றும் எண்ணெய் தவிர, மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
கலந்து வைத்துள்ள மசாலாவில், மீன் துண்டுகளைப் பிரட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலாவில் பிரட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான மீன் வறுவல் தயார். சோயா சாஸ் சேர்த்திருப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்... சோயா சாஸ் எல்லாம் சேர்த்து புதுசா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீன் வறுவல் இது வரைக்கும் சோயா சாஸ் சேர்த்து மீன் வறுத்தது இல்லை இனி மேல் இந்த மாதிரி வறுக்க போறேன் சூப்பர், மீன் நல்ல கலர்புல்லா இருக்கு.

சூப்ப்ப்பர் வாணி. நானும் மீன் வறுக்கும்போது சோயாசாஸ் சேர்ப்பேன். :-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா