ராகி குக்கீஸ்

தேதி: July 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

ராகி மாவு - ஒரு கப்
மைதா மாவு - அரை கப்
கோதுமை மாவு / மல்டி க்ரெய்ன் - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி
உப்பில்லாத வெண்ணெய் - 200 கிராம்
முட்டை - ஒன்று
ஏலக்காய்த் தூள் / பட்டை தூள் / வெனிலா எசன்ஸ் - சிறிது
உப்பு - ஒரு சிட்டிகை
பொடித்த சர்க்கரை - ஒரு கப்


 

ராகி மாவுடன் கோதுமை மாவு, மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடர் கலந்து சலித்து வைக்கவும்.
ரூம் டெம்பரேச்சரிலுள்ள வெண்ணெயுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து க்ரீம் பதத்தில் கலந்து கொள்ளவும்.
பிறகு அடித்த முட்டையுடன் ஏலக்காய்த் தூள் மற்றும் உப்புச் சேர்த்து கலந்து, வெண்ணெய் கலவையில் ஊற்றி நன்றாகக் கலந்து கொள்ளவும்.
அத்துடன் சலித்து வைத்துள்ள மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அவனை 160 - 170 c 'ல் முற்சூடு செய்யவும். மாவை சிறு உருண்டையாக உருட்டி, வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் வைத்து லேசாக அழுத்திவிடவும். (இதேபோல் மீதமுள்ள மாவையும் 2 இன்ச் அளவு இடைவெளிவிட்டு வைத்து அழுத்திவிடவும். விரும்பினால் ஃபோர்க் கொண்டு மேலே அழுத்திவிடலாம்).
பிறகு ட்ரேயை அவனில் வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து, வேறு தட்டில் மாற்றி ஆறவிடவும்.
டேஸ்டி & க்ரிஸ்பி ராகி குக்கீஸ் ரெடி.

இனிப்பு குறைவான பிஸ்கட் இது. சாதாரண சர்க்கரைக்கு பதிலாக ப்ரவுன் சுகரும் பயன்படுத்தலாம்.

முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் 2 - 3 மேசைக்கரண்டி அளவு பால் / தயிர் சேர்க்கலாம்.

பேக்கிங் ட்ரேயை அவனில் வைத்த 8 நிமிடங்களுக்கு பிறகு, அடிக்கடி பிஸ்கட்களை கவனிக்கவும். பிஸ்கட்டின் அடிப்பாகம் சிவந்திருந்தாலோ, ஓரங்களை தொடும் போது உடையாமல் இருந்தாலோ பிஸ்கட் பேக் ஆகிவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராகி பிஸ்கட் சூப்பர், ஆரோக்கியமான பிஸ்கட் சர்க்கரை வியாதி உள்ளவருகளும் இதை சாப்பிடலாமா.

வாவ்.சூப்பர் வனி. முதல் குக்கிஸ் குறிப்பு.இனி நிறைய வரும்.

Be simple be sample

குக்கீஸ் அருமை வனி. இவ்ளோநாள் கேக்! இனி குக்கீஸா? கலக்குங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இன்னும் ஒரு வாரத்தில் மகளுக்கு சம்மர் விடுப்பு, உன்களோட ராகி குக்கீஸ் அவசியம் செய்யணும், அவள் தான் எனக்கு பேக்கிங்க்கு லிட்டில் ஹெல்ப்பர்.

நன்றி அட்மின் மக்களே... என் முதல் குக்கி குறிப்பு ;)

பாலபாரதி... மிக்க நன்றி :) சர்க்கரை இருக்கே பாரதி, சாப்பிடக்கூடாது.

ரேவ்ஸ்... நன்றி ;) ஏற்கனவே இன்னும் இரண்டு அனுப்பி வெச்சிருக்கேன்.

உமா... ஹஹஹா. வனிக்கு எப்பவுமே எல்லாமே அப்படித்தான் ;) சீசன்.

வாணி... அவசியம் செய்துட்டு சொல்லுங்க :) மிக்க நன்றி

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராகி குக்கீஸ் இன்றைக்கு செய்துட்டேன், அப்பப்பா ராகி மணத்துடன் சூப்பர். டீயுடன் ருசித்து மகிழ்ந்தேன். நன்றி

செய்து சுவைத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :) மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா