வெனிலா ஸ்பாஞ்ச் கேக்

தேதி: July 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

மைதா மாவு - 250 கிராம்
வெண்ணெய் - 250 கிராம்
பொடித்த சர்க்கரை - 250 கிராம்
முட்டை - 4 - 5
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி
கேக் சீட் (Caraway Seed) - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை


 

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 3 முறை நன்றாக சலித்து வைக்கவும். அவனை முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் சிறிது பட்டர் தடவி, அதன் மேல் மைதா மாவைத் தூவி வைக்கவும். (அல்லது ட்ரேயின் அளவிற்கு பட்டர் பேப்பரை நறுக்கி லைனராக உபயோகிக்கவும்). முட்டையை உடைத்து மஞ்சள் கருவைத் தனியாகப் பிரித்து வைக்கவும்.
முட்டையின் வெள்ளைக் கருவை மிக்ஸியில் அல்லது பீட்டரால் நுரை பொங்க நன்கு அடித்துக் கொள்ளவும்.
ஒரு பௌலில் பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் கலந்து பீட்டரால் நன்கு சாஃப்ட்டாக வரும் வரை ஒரே திசையில் அடிக்கவும். (இப்படி அடிப்பதால் கலவை காற்றை உள்ளிழுத்து கேக் நன்றாக உப்பி வரும்).
அத்துடன் முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்த்து, ஒன்றாகச் சேரும்படி அடிக்கவும்.
பிறகு நுரை பொங்க அடித்த முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து கலந்துவிடவும்.
அத்துடன் வெனிலா எசன்ஸ், உப்பு மற்றும் கேக் சீட் சேர்த்து ஒரு முறை கலந்துவிடவும்.
பிறகு சலித்த மைதா மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒரு மரக்கரண்டி அல்லது ஸ்பேட்சுலா (Spatula) கொண்டு, மெதுவாக ஒரே திசையில் கலவையும் மாவும் சேரும்படி மடித்துவிடவும். (கலக்கக் கூடாது). இதற்கு ஃபோல்டிங் (Folding) என்று பெயர்.
இவ்வாறு மடித்துவிடுவதால் (ஃபோல்டிங்) ஏற்கனவே உள்ளிழுக்கப்பட்ட காற்று, மாவைச் சேர்த்த பிறகு வெளியேறாமல் இருக்க உதவுகிறது.
இந்தக் கலவையை ஒரு பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, முற்சூடு செய்த அவனில் வைத்து 180 C - ல் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஒரு நீளமான குச்சி அல்லது டூத் பிக்கை கேக்கின் உள்ளே விட்டு, கலவை குச்சியில் ஒட்டாமல் வருகிறதா எனப் பார்த்து, வெந்ததை உறுதி செய்து கொண்டு வெளியே எடுத்து ஆற வைக்கவும்.
டேஸ்டி வெனிலா ஸ்பாஞ்ச் கேக் ரெடி ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும். இம்முறையில் செய்யப்படுவதால் கேக் பஞ்சு போல மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்.

மைதா மாவு கலந்த பிறகு பீட்டர் அல்லது விஸ்க் உபயோகிப்பதை தவிர்க்கவும்.

கேக் சீட் (Caraway Seed) என்பது சீரகத்தைப் போல இருக்கும். இது கேக்கிற்கு ஒரு மணத்தைக் கொடுக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கேக் சூப்பர், படங்கள் அனைத்தும் அருமை. பண்டிகை காலத்தில் இந்த மாதிரி கேக் தான் செய்யனும்.

வானி உங்கள் கேக் பார்க்க அழகா இருக்கு. நான் மைக்ரோவேவில் செய்துல்லேன் கேக் சீட் தவிர்த்து.
வானி என் மைக்ரோவேவ் சோல் ஸ்டார் மாடல். நான் இப்போ தான் அதில் கேக்,குக்கீஸ்லா ட்ரை பன்னிட்டு இருக்கேன் நல்லா வந்துது.நீங்க நெட்ல எனக்காக தேடி பார்க்கரேன் சொன்னதுக்கு மிக்க நன்றி. இப்போ ஓரலவு தெரிந்துக்கொன்டேன்.ஆனா அதுல Comb1,comb2,comb3 இருக்கு அது தான் எதுக்கு யூஸ் பன்றது தெரியல.இதுல இந்த பதிவு போட்டதுக்கு மன்னிக்கவும்

வாணி சிஸ்டர், உங்களோட வெனிலா ஸ்பாஞ்ச் கேக் பாக்கிறதுக்கே அழகா இருக்கு. செய்யவும் ரொம்ப ஈசியான மேனுவாவும் இருக்குது. சூப்பர்..சூப்பர்

உன்னை போல் பிறரை நேசி.

கேக் பார்க்கும்போதே தெரியுது எவ்வளவு சாஃப்ட்டா இருக்கும்ன்னு. டைம் கிடைச்சா செய்துட்டு சொல்றேன். :-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Sweet cake recipe... 50th recipe!!! Congrats. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super spongy cake.very nice

all is well