சோள மசாலா பணியாரம்

தேதி: July 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

சோள இட்லி மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
அரைக்க:
தக்காளி - ஒன்று
வரமிளகாய் - ஒன்று - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - பாதி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, சோள இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்.
அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்றவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான மசாலா சேர்த்த சோள பணியாரம் தயார். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

விரும்பினால் பொடியாக நறுக்கி வதக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளும் சேர்த்துக் கொள்ளலாம்.

<a href="/tamil/node/28735"> சோள இட்லி </a> குறிப்பிலுள்ளவாறு சோள இட்லி மாவைத் தயார் செய்து கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பட்டியலில் சேர்த்தாச்சு... வித்யாசமா இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கிறேன். தேங்க்ஸ் இந்த‌ ரெஷிபிக்கு:)

கண்டிப்பா ட்ரை பண்ணனும், அந்த இட்லியும், இந்த பணியாரமும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் தான் விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன், இந்த‌ மசாலா பணியாரத்தை பார்க்கும் போது உடனே சாப்பிடனும் போல‌ உள்ளது, கடைசி படத்தில் இருக்கும் பணியாரம் முழுவதும் நான் அப்பிடியே சாப்பிட‌ போறேன். சூப்பர்.

ரொம்ப‌ நல்லா இருக்குங்க‌ இந்த‌ பணியாரம்... அருமை... நல்லா புதுசு புதுசா யோசிக்கிறீங்க‌... குட்டி பாப்பா நலமா?

முயற்சி செய்ய தூண்டும் குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

thanks nallarukku but sola idly mavu eppadi seiyanumnu terilaye enaku

அவசியம் செய்து பாருங்க ரேணுகா. நன்றி

டிரை பண்ணிவிட்டு சொல்லுங்க வனி நன்றி

நன்றி பாலபாரதி . அப்படியே சாப்பிட்டுக்கோங்க.

மிக்க நன்றி, பிரியா, பாப்ப நல்ல சுகம். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி கவிதா.

இந்த குறிப்பின் கீழே உள்ள இந்த வரியில் சிவப்பு எழுத்தில் கொடுக்கப் பட்ட சோள இட்லி யை சொடுக்கவும். நான் ஏற்கனவே கொடுத்துள்ள குறிப்பு கிடைக்கும்.
நன்றி

"சோள இட்லி" குறிப்பிலுள்ளவாறு சோள இட்லி மாவைத் தயார் செய்து கொள்ளவும்