மைக்ரோ அவன் வாங்கனும் உதவி செய்ங்க

மைக்ரோ அவன் வாங்கனும். அதைப் பற்றிய அடிப்படை தகவல் எனக்குத் தெரியாது.என்ன மாதிரி வாங்கலாம். என்னென்ன வசதிகள் உள்ளவை வாங்கலாம். எப்படிப்பட்ட மாடல் என்ன கம்பெனி வாங்கலாம். எவ்வளவு ரேட்டுக்க்குள் வாங்கலாம்.

எனக்கு முக்கியமாக கேக் செய்ய எண்ணை இல்லாமல் வறுவல் செய்ய ஆறியவற்றை சூடு செய்ய தேவை.

ப்ளீஸ் தோழிகளே தெரிந்தவர்கள் விவரமாக பதில் சொல்லுங்க...

//முக்கியமாக கேக் செய்ய// இது... வீட்டு உபயோகத்துக்கு... உடனே சாப்பிடுவதற்கு ஓகே. குவாலிடி கேக் எதிர்பார்க்காதீங்க.
//ஆறியவற்றை சூடு செய்ய// அதற்கு எந்த பேசிக் மாடலானானும் பிரச்சினை இல்லை.
மீதி... ஏனைய சகோதரிகள் பதிலுக்கு விட்டுவிடுகிறேன்.

‍- இமா க்றிஸ்

மைக்ரோவேவ் அவனில் 3 உபயோகங்கள் உள்ளன.
1.Normal oven(Microwave mode) = For Defrost,Reheat and Cooking.
2.convection mode = For cakes
3.Grill mode = Browning and crisping your food (grilling)

பேஸிக் மாடலில் முதல் உபயோகம் மட்டுமே இருக்கும்.நீங்கள் மூன்றுமே கேட்டிருப்பதால் ,கடையில் கேட்கும்போதே இந்த 3ம் சேர்ந்தார்ப்போல் உள்ள மாடலை கேளுங்கள்.விலை ஒவ்வொரு கம்பெனிக்கும் தக்க மாறுபடும்.3 MODE களும் இருக்கும் அவன் விலை கொஞ்சம் கூட இருககும்.

ஒரு தையல் மசின் வாங்கலாம்னு இருக்கேன். டேபில்ல வச்சு யூச் பன்ரது. வாங்கும் போது என்ன கவனத்தில கொள்ளனும்னு சொல்ல முடியுமா?

//என்ன கவனத்தில கொள்ளனும்// ம்... :-) இது உங்கள் தேவையையும் பொறுத்தது. என்ன பண்ணப் போறீங்க?
என்ன ப்ராண்ட் நல்லது என்று கேட்டால் பெரிதாகத் தெரியாது. என்னிடம் இங்கு உள்ளது ப்ரதர். என் தேவைக்கு பிரச்சினை கொடுக்காமல் மாங்கு மாங்குன்னு உழைக்குது.

என்னென்ன தையல்கள் இருக்கு என்று பாருங்க. ஸிக்ஸாக் & பட்டன் ஹோல், எம்ப்ராய்டரி, ஸிப்பர் எல்லாம் கட்டாயம் இருக்கும். என் மெஷினில் இல்லாதது - நான் மிஸ் பண்ணுவது ஸ்காலப்ஸ். அது போல பொருத்துகள் சேர்த்துத் தைக்க ஸிக்ஸாக்குக்குப் பதிலாக கம்பளித் தையல் போல ஒன்றும் போடுவார்கள். அனேகமான ரெடிமேட் துணிகளில் இப்படி இருக்கும். அதுவும் கிடையாது. ;( இங்கு வந்த ஆரம்பத்தில் வாங்கியதால் அடிப்படை போதும் என்று சிம்பிளாக வாங்கிவிட்டேன். கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி செட்டிங் சேர்த்த மாதிரி வாங்கி இருக்கலாம் என்று இப்போது நினைத்து வருத்தப் படுவது உண்டு. இனி இருப்பதை விற்று விட்டு வாங்க வேண்டும். வாங்குவது ஒரு முறை. உங்கள் தேவைகள் என்ன என்று யோசித்து வைத்து அதற்கேற்ற மாதிரி ஒரேயடியாக நல்லதாக வாங்கிவிடுங்கள். கடைக்காரர் அது இது எல்லாம் சொல்லுவார். உங்கள் தேவை உங்களுக்குத்தான் தெரியும்.

முதலில் நெட்டில் கொஞ்சம் தேடிப் பாருங்கள். எது பிரயோசனமாக இருக்கும் என்று புரியும்.

‍- இமா க்றிஸ்

மிகவும் நன்றி இமாம்மா. பயனுள்ள‌ தகவல். நானும் வீட்டு தேவைக்கு தான் வாங்கலாம்னு இருக்கேன். முதல் பாவித்தது மேசை கொன்டது. அதை விற்றுவிட்டேன். அது தான் கேட்டேன். நன்றி.......

எப்படியும் பேசிக்ஸ் எல்லாம் இருக்கும்.

கேஸ் தேவையா? முன்னால நான் வைச்சிருந்தது சூப்பர் ப்ளாஸ்டிக் கேஸ் இருக்கும். மோட்டார் கண்ட்ரோலர் அதுக்கான ஒயர் எல்லாம் உள்ளேயே அடங்கிரும். மூடிய பின்னால மூடியின் மேலே இருக்கிற ஹாண்டலைப் பிடிச்சு அப்பிடியே தூக்கிப் போகலாம். சின்னவங்க யாராவது வந்தாலும் விளையாட முடியாது. செட்டிங் நான் வைச்ச மாதிரியே இருக்கும்.

இப்ப இருக்கிறது மெஷின்லயே ஒரு இடம் குழிவா இருக்கு. அதுல கையைக் கொடுத்து தூக்கணும். பாரமே இல்லை. மூடி கிடையாது. கேஸ் - ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்... டேபிள் க்ளாத் போல... இருக்கு. மடிச்சு வைக்கலாம். ஆனால் மூடி இருக்கும் போதே குட்டீஸ் விளையாடி வைக்கலாம். செட்டிங் மாறிரும். நான் இன்னமும் அதே பெட்டியோடதான் வைச்சு இருக்கேன். பெட்டி மேல் மடிப்பை உள்ள மடிச்சு ஸ்டேப்பிள் பண்ணிட்டு தலை கீழா போட்டு இருக்கு. தூக்குறதானா பெட்டியை எடுத்துட்டு மெஷினைத் தூக்கணும். ;)

ஸ்டாண்ட் இல்லாம இருக்கிறதால எங்க வேணுமானாலும் வைச்சுத் தைக்கலாம் என்றுதான் நினைப்போம். ஆனால் நாற்காலியும் மெஷின் உயரமும் சரியா பொருந்தி வராட்டா முதுகு வலிக்கும்.

‍- இமா க்றிஸ்

உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி இமா .

குவாலிடி கேக் எதிர்பார்க்காதிங்க என்றால் புரியல இமா. இங்கெ நிறைய கேக் வகைகள் இருக்கு அதெல்லாம் செய்ய முடியாதா?

மிக்க நன்றீ அனு நீங்க சொல்வது போல கடையில் கேட்டுப் பார்க்கிறேன்

http://www.arusuvai.com/tamil/node/17411?page=1

இந்த இழையில் அட்மின் அண்ணா பதிவை படிங்க. மைக்ரோவேவ் / OTG எது பெஸ்ட்டுன்னு ஒரு ஐடியா கிடைக்கும். நீங்க என்ன மாதிரி விஷயத்துக்காக அவன் கேட்கறீங்க? சமைக்க, சூடு பண்ணவா? இல்ல கேக், குகீஸ் பண்ணவா? கேக் குக்கீஸ் என்றால் மைக்ரோவேவில் கன்வன்ஷன் மோட் இருந்தா கூட அவனில் செய்வது போல வராதுங்க. அதுக்குன்னு உள்ள சில “மைக்ரோவேவ் கேக்” ரெசிபீஸ் தான் நல்லா வரும். அவை ரொம்ப குறைவு.

OTG - Oven Toaster Griller. இது 3000 ரூபாயில் இருந்து கிடைக்கும். இது தான் கேக், குக்கீஸ், பிஸ்கட்ஸ், பஃப்ஸ், சமோசா, ப்ரெட் டோஸ்ட் செய்ய, அசைவம் க்ரில் செய்ய என எல்லாம் செய்ய உதவும். அளவை பொறுத்து விலை மாறுபடும். உங்கள் குடும்பத்துக்கு என்ன தேவை? 1 கிலோ கேக் செய்யும் அளவுக்கு இருந்தால் போதும் என்றால் அந்த கெபாசிட்டி உள்ள அவன் என்ன என்ன மாடல், என்ன விலை, எத்தனை வருடம் கேரண்டி, சர்வீஸ் எந்த ப்ராண்டில் எப்படி என்றெல்லாம் கொஞ்சம் கடைக்கு போய் விசாரிங்க.

உங்கள் தேவை தெரியாமல் இங்கே யாரும் சரியானதை உங்களூக்கு பரிந்துறைக்க முடியாது இல்லையா சஹிதா?? :) ஒரு 4 கடைக்கு போய் விசாரிச்சா அங்க உள்ள டெக்னிஷன்ஸ் எந்த ப்ராண்ட் அவங்ககிட்ட நல்லா போகுது, எது அதிகமா கம்ப்ளைண்ட்ஸ் வரது இல்லைன்னு சொல்வாங்க. நான் 5 வருஷம் முன் வாங்கின ப்ராண்ட் இன்னைக்கு அதே தரத்தோடு உங்களுக்கு கிடைக்கும்னு எந்த உறுதியும் இல்லை. கூடவே எல்லா அவனிலும் சின்ன சின்ன பிரெச்சனைகள் இருக்கத்தான் செய்யுது. நான் முன்பு பயன்படுத்தின ஒரு அவன்ல ஒரே பக்கமா தீய ஆரம்பிச்சுடும். புதுசு தான், இடாலியன் ப்ராண்ட்... குறை சொல்ல ஒன்னுமில்ல, ஆனா நமக்கு அமைஞ்சது அப்படி ;)

உங்களுக்கு உணவை சூடு பண்ண, சமைக்க தான் முக்கியம், கேக்/குக்கீஸ் போல பேக்கிங் எல்லாம் எப்பவாது ஆப்ஷனல் என்றால் தாராளமா நீங்க மைக்ரோவேவ் வாங்கலாம். அதுக்குன்னு வரக்கூடிய குறிப்புகள் மட்டும் முயற்சிக்கலாம். ஏதும் சந்தேகம் இருந்தா கேளுங்க, நிச்சயம் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.

இந்த இழையும் உதவலாம்..

http://www.arusuvai.com/tamil/node/17255

மைக்ரோவேவில் செய்யக்கூடிய சிலதை அவனில செய்ய இயலாது, அவனில் செய்யக்கூடியது மைக்ரோவேவில் வராது. என்னை கேட்டால் இரண்டிலும் உங்கள் குடுமப்த்துக்கு தேவையான அளவு ஒன்னு வாங்கிடுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புத்தோழி வனி.... அருமையான பதிவு.உங்க பதிவை பார்த்த பின் அனைத்தும் செய்யக்கூடிய OTG வகை அவன் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். OTG வகை அவனில் எந்த பிரான்ட் ஃபேமஸ் என்று சொல்ல முடியுமா?
இங்குள்ள 3 கடைகளில் பலவித பிரான்ட் உள்ளது. எனக்கு மிகவும் குழப்பமா இருக்கு. சாம்ஸங்,எல்ஜி, மர்ஃபி,IFB எது நன்கு நீடித்து உழைக்கும் என்று கூறுங்கள் ப்ளீஸ்.... :)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்