டொமேட்டோ பேசில் சூப்

தேதி: July 21, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

தக்காளி - 300 கிராம்
பூண்டு - 5 பற்கள்
வெங்காயத் தாள் - 2
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
சத்து மாவு பொடி - 2 தேக்கரண்டி
பால் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம் - பாதி
எண்ணெய், நெய் - தாளிக்க
பேசில் இலை - 6
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். தக்காளி, பூண்டு, வெங்காயம், வெங்காயத் தாள், பேசில் இலை ஆகியவற்றைக் கழுவிவிட்டு நறுக்கிக் கொள்ளவும். சத்து மாவில் சூடான பால் விட்டு கரைத்து மூடி வைக்கவும்
கடாயில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், வெங்காயத் தாள், பூண்டு, தக்காளி மற்றும் பேசில் இலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெந்ததும் ப்ளெண்டரில் போட்டு அரைத்து வடிகட்டி, அத்துடன் சத்து மாவுக் கலவையைக் கலந்து வேகவிட்டு இறக்கவும்.
ஹெல்தி & டேஸ்டி டொமேட்டோ பேசில் சூப் ரெடி. சீஸ் / பேசில் இலை / ப்ரெட் துண்டுகள், மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்

ரசப்பொடிக்கு இங்கே சொடுக்கவும் : <a href="/tamil/node/23352"> ரசப்பொடி </a>

காரத்திற்கேற்ப பேசில் இலையைச் சேர்க்கவும். வடிகட்டாமலும் பரிமாறலாம். சத்து மாவு இல்லையெனில் சோள மாவு சேர்த்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆகா... அங்க பார்த்தப்பவே கேட்க நினைச்சேன், இங்க வருமான்னு... :) சூப்பர்ங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப் நல்லா இருக்குங்க, எஙக வீட்ல அடிக்கடி சூப் பண்ணுவோம்,இந்த ரெசிப்பியையும் அடுத்து பண்ணிப் பார்க்கிறேன்

சூப் சூப்பரா இருக்கு ...

கலை

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினர்க்கு நன்றி

வனிதா,
வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி

வாணி,
செய்து பார்த்து சொல்லுங்க
வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி

கலை,
வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா