ஜீனோ நாய்க்குட்டி

தேதி: July 24, 2014

5
Average: 4.1 (8 votes)

 

வெள்ளை ஃபெல்ட் - 20 செ.மீ x 12 செ.மீ
பஞ்சு - ஒரு கைப்பிடி அளவு
நூல் - வெள்ளை, கறுப்பு
ஊசி
கத்தரிக்கோல்
கடதாசி
பென்
செல்லோ டேப்

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
2 சென்டிமீட்டர் சதுரக் கோடிட்ட கடதாசியில் படத்தில் உள்ள வடிவங்களை வரைந்து கொள்ளவும்.
வரைந்த வடிவங்கள் ஒவ்வொன்றையும் வேறொரு கடதாசியில் இரண்டு முறை ட்ரேஸ் செய்து எடுக்கவும்.
பாட்டர்னைச் சுற்றிலும் சிறிது வெட்டி நீக்கிவிட்டு, ஃபெல்ட்டில் வைத்து செல்லோ டேப் போடவும்.
ஃபெல்டில் அந்த வடிவத்தை வெட்டி எடுக்கவும். அனைத்து வடிவங்களையும் இதே போல் ஃபெல்ட்டில் வைத்து செல்லோ டேப் போட்டு வெட்டிக் கொள்ளவும். (ஃபெல்ட்டில் வரைந்து வெட்டுவதைவிட டேப் ஒட்டி வெட்டினால் சரியான கோட்டில் வெட்டுவது சுலபம்).
நூலை இரட்டையாகக் கோர்த்துக் கொள்ளவும். வயிற்றுப் பகுதிக்கான துண்டுகள் இரண்டையும் சேர்த்து மேற்பக்கம் மட்டும் பொருத்தித் தைக்கவும்.
அதன் ஒரு பக்கத்துடன் ஒரு துண்டு உடற் பகுதியை பொருத்தித் தைக்கவும்.
இதே போல் மறுபக்கத்தில், உடற் பகுதிக்கான மற்றொரு துண்டைப் பொருத்தி தைத்துக் கொள்ளவும்.
முதுகுப் பக்கம் பஞ்சு நிரப்ப சிறிது இடைவெளி விட்டு, மீதியைப் பொருத்தி தைக்கவும். வாலையும் சேர்த்துத் தைக்கவும். பஞ்சு நிரப்பும் போது முதலில் நான்கு கால்களுள்ளும் நிரப்பவும். கால்கள் மிகவும் சிறிதாக இருப்பதால் சிறிது பஞ்சை மட்டும் திணித்து அதை பாதத்தின் அடி வரை கத்தரிக்கோல் முனையால் தள்ளி நிரப்பி விட்டு, மீதியையும் சிறிது சிறிதாக வைத்து நிரப்பவும். பிறகு தலையை நிரப்பவும். அதன் பிறகு உடற் பகுதியை நிரப்பலாம். இறுக்கமாக நிரப்ப வேண்டாம்.
பஞ்சு நிரப்பியதும் அதற்காக விட்டு வைத்த இடைவெளியை மூடித் தைக்கவும்.
செவிகளில், பாட்டர்னில் காட்டியுள்ள இடங்களில் வெள்ளை நூலால் கோடுகள் போல் தைக்கவும். முடிச்சு வெளியே தெரியாதவாறு தலையின் இரு பக்கங்களிலும் காதுகளைப் பொருத்தி விட்டு கண்கள், மூக்கு மற்றும் வாயையும் தைத்துவிடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹை... ரொம்ப நன்றி இமா... :-)

நாய்க்குட்டியை பார்த்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்ல... தொடர்ந்து பார்க்கச் சொல்லி இருந்தீங்க... எதுக்காகன்னு யோசிச்சேன்.. ஆனால், என்னால் கெஸ் பண்ண முடியலை. இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைக்கும்னு. நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை...

//கலையின் வேண்டுகோளுக்கிணங்க அறுசுவைக்காக பிரத்தியேகமாகத் தயாரித்த நாய்க்குட்டி பாட்டர்ன் இது.//

மறுபடியும் எனது நன்றி இமா.. கைக்குள்ள வைக்கும் அளவுக்கு குட்டியா, க்யூட்டா இருக்கு... கண்டிப்பா இந்த நாய்குட்டியைச் செய்து பார்க்கிறேன்..

கலை

Cho chweet and cute... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலை நாய்குட்டி செய்துகாட்ட‌ சொன்னமைக்கு நன்றிகள்.
இமா செய்து காட்டியமைக்கு மிக்க‌ நன்றிகள். நேரமிருக்கும்போது கண்டிப்பா முயற்சி செய்து பார்ப்பேன். 6 வது படம் கொஞ்சம் புரியலையே...

இருமுறை வயிற்றுபகுதியை வெட்டி சேர்க்கிறோம். உடற்பகுதி முழுதும்தானே இருக்கு அதனை அப்படியே சேர்த்து தைக்கனுமா?

kadadhasi na enna akka

money makes many things

Paper

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பேப்பர்

அவ்வ்! ;)) என்னே இமாவுக்கு வந்த சோதனை! ;))
காகிதம், கடதாசி = பேப்பர்

‍- இமா க்றிஸ்

;))) ஒரு சொல்லுல பதில் சொல்லப்படாது யாரும். ;))

சான்டி கேள்வி கேட்டா விழுந்தடிச்சு ஓடி வந்து பதில் சொல்றாங்க. நான் போஸ்ட்ல கேட்ட கேள்வி யார் கண்ணுலயும் பட்டதாவே தெரியல. ஹ்ம்! ;)) புரியுது... 'டு இமா' போடுறதுக்குப் பதில் 'ஃப்ரம் இமான்'னு போட்டுட்டாங்க. இமா டவுட்டை உடனே க்ளியர் பண்ணணும் என்கிற ஆர்வத்துல ஓடி வந்திருக்கீங்க! ம்.. தாங்க்ஸ் ரெண்டு பேருக்கும். :-)

‍- இமா க்றிஸ்

//இருமுறை வயிற்றுபகுதியை வெட்டி சேர்க்கிறோம்.// ஆமாம். //உடற்பகுதி முழுதும்தானே இருக்கு// ஆனால் அதுவும் 2 இருக்கு.

//கால்களோடஅதனை அப்படியே சேர்த்து தைக்கனுமா?// ஆமாம். வெள்ளைத் துணி என்பதால் படத்தில் பளிச்னு தெரியல. விபரமா சொல்றேன்.

படம் 6 - மேல மட்டும் சேர்த்துப் பொருத்தி இருக்கு. 4 பாதிக் கால்கள் இருக்கு. இவை நாய்க்குட்டியின் கால்களின் உட்பக்கம் வரும்.

பிறகு முகத்தோட இருக்கிற பெரிய துண்டு ஒன்றை வலப்பக்கம் செட் பண்ணி பிடிச்சு, வலப்பக்கத்து நெஞ்சுல ஆரம்பிச்சு வலது முன்னங்கால், வயிறு வழியே தைத்து அப்படியே பின்னங்கால் வழியே பின்பக்கம் வயிற்றுத் துண்டு எங்கே முடிகிறதோ அங்கே நிறுத்தவும்.

அடுத்த பெரிய துண்டை இடப் பக்கம் வைத்து... இதே போல... நெஞ்சுல ஆரம்பிச்சு இடது முன்னங்கால், வயிறு வழியே தைத்து அப்படியே பின்னங்கால் வழியே பின்பக்கம் வயிற்றுத் துண்டு எங்கே முடிகிறதோ அங்கே நிறுத்தவும்.

இனி மேற்பாகம் தைக்கணும். ஊசி - ட்ரெய்ன்னு வைங்க. அது தன் பயணத்தை நெஞ்சுல ஆரம்பிச்சு வாய், மூக்கு, நெற்றி ஸ்டேஷன்லாம் தாண்டிப் பயணப்பட்டு.. பிடரில எஞ்சின் ஆஃப் பண்ணிரணும்.

அடுத்த ட்ரெய்ன்.. வாலுக்குக் கீழ ஆரம்பிச்சு வால் மேல ஏறிப் போய் நுனிக்குப் போனதும் திரும்ப அங்க இருந்து வால் வழியே இறங்கி வந்து முதுகுல ஆஃப். இடைல முதுகுல ஒரு காப் தெரியும். அதன் வழியே பஞ்சு நிரப்பிட்டு மூடித் தைக்கணும்.

‍- இமா க்றிஸ்

எல்லாம் நேரம் ;) இருங்க இருங்க... கவனிக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சந்தோஷமா! :-)
எனக்குத் திருப்தியாக இல்லை. அடுத்த பாடசாலை விடுமுறையில் முதுகு நடுத் துண்டும் வைத்துத் தைத்துப் பார்க்க நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

//இருங்க... கவனிக்கிறேன்.// ;)) நன்றி வனி. ;)

‍- இமா க்றிஸ்

இமா அம்மா,
வாவ் ரொம்ப‌ அழகா இருக்கே,
அழகா செய்து இருக்கீங்க‌, புஷூ புஷூ குட்டியா க்யூட்டா இருக்கு,

எனக்கு இது மாதிரி செய்றதுக்கு எல்லாம் பொறுமை இருக்குமானு தெரியலையே,

நான் நிஜம் குட்டி நாய்குட்டி கேட்டேன்,
எங்க‌ வீட்ல‌ வாங்கி தரல‌,
அதுக்கு வேற‌ பதில் சொன்னாங்க‌(ரகசியம் அது இங்க‌ வேணாம்)என் ப்ரெஸ்டீஜ் போய்ரும்,

நீங்களாவது அப்படியே நாய்குட்டியை எனக்கு கொரியர் பண்ணா உதவியா இருக்கும், யாரும் கேட்கல் நான் தான் 1‍ஸ்ட் , எனக்கு ம‌ட்டும் தான்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அது ஒரு மார்க் கொஸ்டின் டீச்சர்.
அது தன் ஒரு சொல் பதில்.

விளக்கத்திற்கு மிக்க‌ நன்றி... செய்யும்போது கண்டிப்பா திரும்ப‌ திரும்ப‌ படித்து கவனமா செய்கிறேன்.தேங்க்யூ...

அது ஒரு மார்க் கொஸ்டின் டீச்சர் - hahaha... I like it :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரெம்ப‌ ரெம்ப‌ அழகு இமா, நிச்சயம் செய்து பார்க்கிறேன் ஊருக்கு போயிட்டு வந்து,

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

//பொறுமை இருக்குமானு தெரியலையே,// கர்ர்.. இருக்கும். இல்லாட்டா வர வைக்கணும். ;))
//வேற‌ பதில் சொன்னாங்க‌// ம்.. இதுல என்ன ரகசியம் இருக்கு! எனக்கே தெரியுமே. பொறுமை இல்லை, அதானே! ;)) ட்ரை பண்ணுங்க. நேரம் எடுக்காது.

‍- இமா க்றிஸ்

//ஒரு மார்க் கொஸ்டின்// ம். ;)) //hahaha... I like it :P// ஹி ஹி. ;))

ரேணு & ரேணு... உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

//சந்தோஷமா! :-)
எனக்குத் திருப்தியாக இல்லை. அடுத்த பாடசாலை விடுமுறையில் முதுகு நடுத் துண்டும் வைத்துத் தைத்துப் பார்க்க நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.//

எனக்கு மிகுந்த சந்தோஷம்.. எப்படி செய்யுறதுன்னு தெரியாம இருந்த எனக்கு அழகான குட்டி நாய் குட்டி செய்யக் கற்றுக் கொடுத்துருக்கீங்க.. செஞ்சுடலாம் நினைக்கும் போதே சந்தோஷம்.. செய்த பிறகு எவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு எனக்கே தெரியலை..

உங்களுக்கு முடியும் போது முதுகு நடுத் துண்டும் வைத்துத் தைக்கும் முறையும் சொல்லித் தாங்க..கற்றுக் கொள்கிறேன்

கலை

நிச்சயம். உங்க சாக்குல நானும் ஒரு பரிசோதனை நடத்திருவேன். :-)
துணியைச் சரியாகத் தெரிவு செய்யுங்க. இதுக்கு ரொம்ப தடிப்பான ஃபெல்ட்டும் சரியா இருக்காது. துணி போல இல்லாமல் தடித்த பேப்பர் போல இருக்கும் ஃபெல்ட்டும் சரிவராது. இரண்டுக்கும் இடைப்பட்ட மாதிரி இருக்க வேண்டும். மெல்லிதாக, அட்டை போல இல்லாமல் மென்மையானதாக இருக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

என்கிட்ட ப்ரவுன் கலர் ஃபெல்ட் இருக்கு.. அது ரொம்ப மெல்லிசா இருக்கும்.. ஆனால் எனக்கு வெள்ளை நாய் குட்டி தான் பிடிச்சுருக்கு. அதற்கேற்ற மாதிரி வெள்ளை ஃபெல்ட் வாங்கிடுறேன்.

கலை

கலக்குங்க கலை. வாழ்த்துக்கள். :-)

‍- இமா க்றிஸ்

i like it

:-) புதிதாக அறுசுவையில் இணைந்திருக்கிறீர்கள். வணக்கம். _()_
உங்கள் கருத்துக்கு என் அன்பு நன்றிகள். சந்தோஷம்.

இங்கு நீங்கள் நேரடியாகவே தமிழில் தட்டலாமே! முயற்சி செய்து பாருங்கள்.

‍- இமா க்றிஸ்