சுரைக்காய் கேசரி

தேதி: July 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

தோல் நீக்கி துருவிய சுரைக்காய் - ஒரு கப்
ரவை - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்ப் பொடி - சிறிது
நெய் - கால் கப்
நட்ஸ் - தேவையான அளவு
பச்சை ஃபுட் கலர் - சிறிது


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
சுரைக்காயுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் வைத்து 4 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி ரவையை வறுக்கவும்.
அதனுடன் வேக வைத்த சுரைக்காயைச் சேர்த்துக் கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு அரை கப் கொதித்த தண்ணீர் ஊற்றி, ஃபுட் கலர் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
பிறகு எலக்காய்ப் பொடி, சர்க்கரை மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.
சுவையான சுரைக்காய் கேசரி தயார். நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப‌ அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்
மைக்ரோ இல்லைன்னா, சாதாரணமா எவ்வளவு நேரம் அல்லது பதத்தில் காயை வேகவைப்பது?

கேசரி சிம்ப்ளி சூப்பர்... அவன் இல்லைன்னா சாதாரணமாவும் வேக வைக்கலாமா?

கலை

வாணி சுரைக்காய்ல அல்வா செய்திருக்கேன்,கேசரியையும் பன்னிடவேண்டியதுதான். அந்த mouse shape கேசரி செம cute.

mouse shape kesari super

mouse shape kesari super

கலக்குறீங்க‌ வாணி. வித்யாசமான‌ ஆரோக்யமான‌ குறிப்பு. அருமை.

எல்லாம் சில‌ காலம்.....

வாணி,
அழகான எலி :)
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சுப்பர்ப் ரெசிபி வாணி. எலியார் க்யூட். :-)

‍- இமா க்றிஸ்

கேசரி கலர்புல்லா இருக்கு... எலி சூப்பர்

அவனில் இல்லாமல் அடுப்பிலும் வேக வைக்கலாம்,
சுரைக்காயை முக்கால்வாசி வேக வைக்கவும், பின் ரவையுடன் மீதி வெந்து விடும்

தோழிகளே,
வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி

ரொம்ப நல்லா இருக்கு எலியும் கேசரியும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வருகைக்கும் பதிவிற்க்கும் மிக்க நன்றி