சாக்லேட் கேக்

தேதி: July 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

டார்க் சாக்லேட் - 200 கிராம்
உப்பில்லாத வெண்ணெய் - 200 கிராம்
செல்ஃப் ரெய்சிங் மாவு - ஒன்றரை கப்
பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப்
கோக்கோ பவுடர் - கால் கப்
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
முட்டை - 3
மோர் - அரை கப்


 

அவனை 160 C’ல் முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயைத் தயாராக வைக்கவும். மாவு, பேக்கிங் சோடா, கோக்கோ பவுடர், சர்க்கரை ஆகியவற்றை குறைந்தது மூன்று முறை சலித்து வைக்கவும்.
முட்டையுடன் மோரைச் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.
சாக்லேட்டை துருவியோ அல்லது சிறு துண்டுகளாக நறுக்கியோ வெண்ணெயுடன் சேர்த்து டபுள் பாய்லர் முறையில் உருக்கிக் கலந்து கொள்ளவும்.
இப்போது அனைத்தும் தயார். மாவுக் கலவையில் முதலில் முட்டை மோர் கலவையைக் கலந்து, பிறகு சிறிது சிறிதாகச் சாக்லேட் வெண்ணெய் கலவையையும் சேர்த்து நன்றாகக் கலந்து, பேக்கிங் ட்ரேயில் ஊற்றி அவனில் வைத்து பேக் செய்யவும்.
கேக்கின் உள்ளே கத்தி அல்லது டூத் பிக்கை விட்டு ஒட்டாமல் சுத்தமாக வெளியே வரும் போது எடுக்கவும். சுவையான சாக்லேட் கேக் தயார். நன்றாக ஆறவிட்டு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

இந்த கேக்கில் மாறுதலுக்கு சிறிது காஃபி சுவையும் சேர்க்கலாம். ஒரு மேசைக்கரண்டி அளவு இன்ஸ்டண்ட் காஃபி தூளை, கால் கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து ஆறவிட்டு சேர்க்கலாம். அப்போது மோரின் அளவை பாதியாக குறைத்துக் கொள்ளவும்.

கோக்கோ பவுடருடன் டார்க் சாக்லேட் கலந்து செய்யும் போது சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும். பொடித்த சர்க்கரைக்கு பதிலாக லைட் ப்ரவுன் சுகரும் பயன்படுத்தலாம். இனிப்பு மிதமாக இருக்க வேண்டுமென விரும்பியதால், நான் ஒன்றரை கப் சர்க்கரை சேர்த்துள்ளேன். சரியாக இருந்தது. இனிப்பு அதிகம் விரும்புபவர்கள் 2 கப் சர்க்கரை சேர்க்கலாம்.

ஒரு கப் செல்ஃப் ரெயிசிங் மாவு தயார் செய்வதற்கு: ஒரு கப் மைதா மாவுடன் ஒன்றரை தேக்கரண்டி பேக்கிங் பவுடர் மற்றும் 2 சிட்டிகை உப்பு கலந்து 3 முறை சலித்து எடுக்கவும்.

டபுள் பாய்லர் முறை: ஒரு பாத்திரத்தில் நீர் இல்லாமல் துடைத்துக் கொண்டு அதில் துருவிய சாக்லேட் மற்றும் வெண்ணெயைப் போட்டுக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்கத் துவங்கியதும் அதன் மேலே சாக்லேட் உள்ள பாத்திரத்தை தண்ணீரில் படாமல் பிடித்து, மெதுவாகக் கலந்துவிடவும். சூடான ஆவிபட்டு சாக்லேட் உருகத் துவங்கும். சாக்லேட்டில் தண்ணீர் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளவும். தண்ணீர் பட்டால் சரியாகவராது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Supro super!!!!!!!, cake nalla eruku , one time try panni parthen, remba sothapal. Unga cake parkave yammi ya eruku.

ரம்யா ஜெயராமன்

உங்க கேக் பார்க்க‌ ரொம்ப‌ சாஃப்டா சூப்பரா இருக்கு. ஆனா நான் நார்மலா கேக் செய்ற‌ அப்போ ரொம்ப‌ ஹார்டா இருக்கு. மினிமம் எவ்ளோ நேரம் பேக் செய்யனும்? உங்க‌ கேக் கண்டிப்பா ட்ரை பண்றேன். சாஃப்டா வந்தா பாலாவின் கேக்கிற்கு கிடைக்கும் பெருமை அனைத்தும் வனிதாவுக்கு சமர்பனம். எனக்கு அவன் யூஸ் பண்ற முறை சொல்லி தரவும். எப்படி சூடு பன்ன‌ணும் எவ்ளோ சூடு பன்னணும்.

எல்லாம் சில‌ காலம்.....

ஈஸி & சூப்பர் ரெசிபி வனி. குறிச்சு வைக்கிறேன்

‍- இமா க்றிஸ்

வனி கேக் சூப்பர்...

யம்மி கேக்.... ம்ம்ம்..

ஷாலி அருண்

தேவதைகள் வருவதில்லை
பிறக்கின்றனா்
என் குழந்தையைப்போல,,,,,///

சூப்பர் கேக்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

ரம்யா... ஒரே முறையில் மனசை விட்டுடகூடாது... விடாம முயற்சி பண்ணனும் ;) அப்பறம் எல்லா கேக் ரெசிபியும் ஜுஜுபி மேட்டர் தான். மிக்க நன்றி.

பாலனாயகி.. மிக்க நன்றி :) உங்களுக்கு ஹார்டா வருதா? மாவை ரொம்ப நேரம் கலக்கறீங்களோ? எந்த கேக் குறிப்புக்கும் இவ்வளவு நேரம்னு சரியா சொல்ல முடியாதுங்க. அது நீங்க பயன்படுத்தும் பாத்திரத்தின் அளவு, அவன் எல்லாத்தையும் சார்ந்தது. ஒரு 2 டேஸ் டைம் கொடுங்க, விளக்கமா ஒரு ப்ளாக் போஸ்ட் போடுறேன்.

இமா... மிக்க நன்றி. எனக்கு சாதாரணமா கோக்கோ பவுடர் சேர்க்கும் கேக்கை விட இது தான் ரொம்ப பிடித்தம். ட்ரை பண்ணிப்பாருங்க நேரம் கிடைச்சா. :)

நித்யா... மிக்க நன்றி :)

ஷாலி... மிக்க நன்றி :)

தனலக்‌ஷ்மி... கவிதை நல்லா இருக்குங்க :)

கவிதா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா