ஓட்ஸ் அடை

தேதி: July 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

ஓட்ஸ் - ஒரு கப்
கடலைப்பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு சிறிய கட்டு
உப்பு - தேவையான அளவு


 

பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து 3 முறை கழுவிவிட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். ஊற வைத்த பருப்பு வகைகளுடன் சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும்.
அதனுடன் பொடி செய்த ஓட்ஸ் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
தோசை கல்லைச் சூடாக்கி, மாவை மெல்லிய தோசை போல ஊற்றி எண்ணெய் விட்டு வேகவிடவும்.
சற்று நேரம் கழித்து திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான, சத்து நிறைந்த ஓட்ஸ் அடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வருசையா ஆரோக்கிய குறிப்பு... கலக்குறீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான‌ ஆரோக்யமான‌ குறிப்பு. கலக்கல் அடை. சூப்பர்.

எல்லாம் சில‌ காலம்.....

எனது குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் குழுவினருக்கு நன்றி.

Expectation lead to Disappointment

உங்க‌ வாழ்த்திற்கு ரொம்ப‌ தேங்க்ஸ் வனி.உங்களை மாதிரி கேக் மற்றும் குக்கீஸ் செய்ய‌ ஆசை...ஆனா சொதப்புமா என்று பயம்.நான் வெக்கேஷன் போற‌ பிஸியில் இருப்பதால் திரும்ப‌ வந்த‌ பின் ஆற‌ அமர‌ எல்லாம் செய்து பார்க்கணும்.

Expectation lead to Disappointment

தங்களுடைய‌ வாழ்த்திற்கு மிக்க‌ நன்றி.

Expectation lead to Disappointment

அடை சூப்பர். செய்து பார்கிரேன்

ஓட்ஸ் அடை மிகவும் அருமையாக இருந்தது.அதில் நான் சுரைக்காய்,தேங்காய்ப்பூ சேர்த்து செய்தேன் நன்றாக இருந்தது.என் வாழ்த்துக்கள் மீனாள்.

பிடிச்சு இருக்கு. இப்படியே கண்ணால சாப்பிட்டுட்டுப் போறேன். நன்றி மீனாள். :-)

‍- இமா க்றிஸ்

மீனா,
புதுமையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

Meena unga adai seithen suvaiyaga irunthathu