Admin anna avargaluku

Anna sila neram arusuvai username password koduthal accept agama again and again username password kekkuthu ovoru time um correctathan tharen but forumkulla enter agala again arusuvai page close pannitu vanthu username password 2 or 3 times thanthathan enter aga mudithu ellarukum ippadithan irukuma. and also eppo parkumpothum errernu kamikum reload pannuna arusuvai page pakka mudiyum en anna ippadi

நீங்க சொல்றதுதான் முதல் கம்ப்ளெயிண்ட். இதுவரைக்கும் அப்படி பிரச்சனை இருக்கிறதா யாரும் சொன்னதில்லை. அதோட மட்டுமில்லாம ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில லாகின் பண்றாங்க. அது எனக்கு தெரியும். அதனால எல்லாருக்கும் இந்தப் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. நீங்க என்ன Browser use பண்றீங்க? அதுல caching problem இருக்க வாய்ப்பு இருக்கு. IE use பண்ணினா அதை மூடிட்டு Firefox இல்லேன்னா Chrome க்கு மாறிடுங்க. அதிகம் பிரச்சனைகள் இல்லாத ப்ரவுசர்ஸ் இது ரெண்டும்தான்.

Anna nan google chrome use pannithan eppothumey arusuvai website varuven enaku dailyum ippadithan login agurathu illa eppadiyavathu vetla work mudichtu arusuvai pakkanumnu vanthu open pannuven but login agathathunala try pannitu close pannitu konja neram kalithuthan open pannuven orusila neram login pannavey mudiyathu login agathathunala forum open panni padichutu close panniruven. enaku romba pidichathey forum sec thaan ok anna thank u for ur reply

yenaku yeppadi message send pannuvathu yendru theriyavillai.

yenaku athai sollugal. please

சகோதரி பிரபா அவர்களுக்கு,

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, அறுசுவையில் ஏதேனும் பிரச்சனை இருந்தா அது எல்லோருக்குமே இருந்திருக்கணும். குறைந்தபட்சம் நீங்க என்ன ப்ரவுஸர், சிஸ்டம் யூஸ் பண்றீங்களோ, அதே மாதிரி சிஸடம்ஸ் யூஸ் பண்ற எல்லாருக்கும் அந்த பிரச்சனை இருக்கணும். ஆனா அப்படி இல்லேங்கிறதுதான் தெரியுது. இப்படி ப்ரபா முகேஷ்க்கு மட்டும் இது போல பிரச்சனை வரணும்ங்கிற மாதி நாங்க எதுவும் அறுசுவையில செய்யலைங்க.. :-)

நான் க்ரோம் ப்ரவுஸரும் யூஸ் பண்றேன். அறுசுவையை பார்க்கிற ஒரு மெஜாரிட்டி சதவீதம் க்ரோம் யூஸ் பண்றாங்க. அதனால இது ப்ரவுஸர்ல இருக்கிற ப்ராப்ளம் இல்லை. என்னோட கெஸ்ஸிங் இதுதான். நான் முன்ன சொன்ன மாதிரி உங்க ப்ரவுஸர்லே Cache problem அல்லது cookies ப்ராப்ளம் இருக்கலாம்.

உங்களுக்கு சைட் பார்க்கிறதுல பிரச்சனை இல்லை. லாகின் பண்றதுலத்தான் பிரச்சனைன்னு தெரியுது. ஆனா, எல்லா நேரமும் இந்த லாகின் பிரச்சனையா இல்லை. சில நேரங்கள்ல லாகின் பண்ணி போஸ்டிங் எல்லாம் போட முடியுது. அதனாலத்தான் பிரச்சனை அறுசுவையில இல்லைன்னு நம்புறேன். சரி, டெக்னிக்கலா என்ன நடக்குதுன்னு சொல்றேன். லாகின் பண்றப்ப என்ன நடக்கும்னா, சின்னதா ஒரு ஸ்க்ரிப்ட் (cookies) உங்க சிஸ்டம்ல write ஆகும். அதுதான் உங்க யூசர் நேம், பாஸ்வேர்டை ஸ்டோர் பண்ணி வச்சுக்கும். அதுதான் session maintain பண்ணும். நீங்க எந்த பக்கத்தை ஓபன் பண்ணினாலும் நீங்க log out ஆகாம பார்த்துக்கும். நீங்களா log out கொடுத்தாதான் அது க்ளியர் ஆகும். cache ங்கிறது நீங்க அறுசுவையில பார்க்குற பக்கங்கள் ஒரு டெம்ப்ரவரி ஃபோல்டர்ல ஸ்டோர் ஆகி இருக்கும். அடுத்த முறை அதே பக்கத்தை பார்க்கிறப்ப அது அறுசுவை சர்வர்ல இருந்து load ஆகாம, உங்க சிஸ்டம்ல இருந்தே லோடு ஆகும். இதனால ரொம்ப சீக்கிரமா பக்கங்கள் திறக்கும். இந்த caching ல எதாவது பிரச்சனைகள் இருந்தா, நீங்க லாகின் பண்றப்ப பக்கங்கள் புதுசா அறுசுவை சர்வர்ல இருந்து லோடு ஆகாம, பழைய பக்கங்கள் உங்க சிஸ்டம்ல இருந்தே லோடு ஆக வாய்ப்பு இருக்கு. அப்போ லாகின் செசன் மெயிண்டைன் ஆகாது. இது எந்த அளவுக்கு உங்களுக்கு புரிஞ்சது, நான் எந்த அளவுக்கு விளக்கினேன்னும் தெரியலை. சரி, நான் சொன்ன மாதிரி ஏதோ ஒரு பிரச்சனை உங்க ப்ரவுஸர்ல இருக்குன்னு வச்சுப்போம். இதுக்கு என்ன செய்யலாம்?

இப்ப நான் சொல்றதை ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்க. உங்க ப்ரவுஸர் ஓபன் பண்ணி, அதோட அட்ரஸ் பார் ரைட் சைடு கார்னர்ல பார்த்தீங்கன்னா, கோயில் குருக்கள் போட்டு இருக்கிற பட்டை மாதிரி சின்னதா மூணு கோடு தெரியும். அதை கிளிக் பண்ணினா, அதுல History ன்னு ஒரு option இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க. அதுல Clear browsing data ன்னு இருக்கும். அதுல Browsing history, Download history, Cookies and other site and plug-in data, Cached images and files, Passwords, Autofill form data இது எல்லாத்தையும் செலக்ட் பண்ணி, clear browsing data வை கிளிக் பண்ணுங்க. இப்ப அறுசுவையை ஓபன் பண்ணி லாகின் பண்ணுங்க.

செய்துட்டு என்ன ஆகுதுன்னு இங்க சொல்லுங்க. :-)

சகோதரி ரேணுகா ராஜீவ் அவர்களுக்கு,

//yenaku yeppadi message send pannuvathu yendru theriyavillai.//

எனக்கு நீங்க மெசேஜ் ன்னு எதை சொல்றீங்கன்னு தெரியலை. :-)

நீங்க என்ன செய்ய நினைக்கிறீங்க, என்ன செய்ய முடியலைங்கிறதை இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. வயசாயிட்டதால சீக்கிரத்துல எதுவுமே எனக்கு புரியமாட்டேங்குது.

Anna nan enaku login agurathula problem iruku nenga ethavathu solution solvingalanu just inform pannunen anna arusuvaila enaku mattum open panna mudiyatha mathiri nenga pannalenu theriyum but arusuvai website forum login agamaley pakka mudithu but orusila neramthan anna ippadi login agama iruku. nethum innaikum oru time username password thanthathum open agiruchu anna. inga systemla ethum problem irukanu nan check panna solren . anna nenga sonnathu history pagela irukra ellavatraiyum delete pannitu arusuvai open panna solringala correcta anna

அண்ணா சொன்னதை ட்ரை பண்ணுங்க. அப்படி சரி வரலன்னா ஒரு வேளை எனக்கு இருக்க பிரெச்சனை உங்களுக்கு இருக்கலாம் ;) பெரிய பிரெச்சனை ஒன்னும் இல்ல... என் பழைய லேப்டாப் அப்பப்ப சில கீ தகராறு பண்ணும். நான் ஒரு எழுத்தை தட்டினா தட்டி இருக்காது :P இதனால் அறுசுவை மட்டுமல்லாது நிறைய மெயில், ஃபேஸ்புக்னு எல்லாமே யூசர் ஐடி பாஸ்வார்ட் எனக்கு 4 முறை தட்ட வேண்டி இருக்கும். முக்கியமா ஷிஃப்ட் கீ ஒழுங்கா ப்ரெஸ் ஆகாது பல நேரம். இது போல ஏதும் இருக்கா பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

// login agurathula problem iruku nenga ethavathu solution solvingalanu just inform pannunen anna//
உங்க பிரச்சனையை நீங்க சொன்னதில தவறு எதுவும் இல்லைங்க. இந்தப் பிரச்சனை எல்லாருக்கும் இருக்கு, இல்ல நிறைய பேருக்கு இருக்குதுன்னா எதனாலன்னு கொஞ்சம் ஈசியா கண்டுபிடிக்கலாம். உங்களுக்கு மட்டும்தாங்கிறதால காரணம் என்னவா இருக்கும்ங்கிறதை சரியா கண்டுபிடிக்க முடியலை. இதுவா இருக்கலாமோன்னு கெஸ்ஸிங் தான் பண்ண முடியுது. அதனாலத்தான் உத்தேசமா ஒரு சொல்யூசன் சொன்னேன். நீங்க இன்னும் அதை ட்ரை பண்ணல. :-)

//history pagela irukra ellavatraiyum delete pannitu arusuvai open panna solringala correcta anna//

ஆமாம், browsing history, cache, cookies எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு அறுசுவையை ஓபன் பண்ணி லாகின் பண்ணச் சொன்னேன். முன்ன மாதிரி லாகின் ஆகாம பிரச்சனை வருதா, இல்ல பர்ஸ்ட் டைமே லாகின் ஆயிடுதான்னு சொல்லுங்க. இதுக்கு நீங்க சொல்ற பதிலை வச்சுதான் அடுத்த கட்ட ட்ரீட்மெண்டுக்கு போக முடியும். :-)

//ஷிஃப்ட் கீ ஒழுங்கா ப்ரெஸ் ஆகாது பல நேரம். இது போல ஏதும் இருக்கா பாருங்க.//

ஹா!! லாகின் ஆகலேன்னா மொதல்ல செக் பண்ண வேண்டிய விசயம், யூசர்நேம் பாஸ்வேர்டு சரியா கொடுத்து இருக்கீங்களாங்கிறதுதான். ரொம்ப பேஸிக்கான விசயம். இதை சரியா கொடுத்தீங்களாங்கிறதுதான் என்னோட முதல் கேள்வியா இருக்கும். அந்த கேள்விக்கு இடம் வைக்காம //ovoru time um correctathan tharen// ன்னு நீங்களே சொல்லிட்டதால, அந்த சாய்ஸை நான் வச்சுக்கலை. அடுத்து என்ன பிரச்சனையா இருக்கும்னு யோசிச்சேன். இப்ப வனி சிஸ்டர் போஸ்டிங் பார்த்த பிறகு எனக்குமே அதை கேட்கத் தோணுது. யூசர்நேம் பாஸ்வேர்டு தப்பு இல்லாம தர்றீங்கதானே..?! Notepad ஓபன் பண்ணி உங்க யூசர்நேம் பாஸ்வேர்டை நீங்க டைப் பண்ற வேகத்துக்கு நாலஞ்சு டைம் டைப் பண்ணிப் பாருங்க. ஒவ்வொரு முறையும் சரியா டைப் ஆகி இருக்கான்னு செக் பண்ணுங்க. கீபோர்டு பிரச்சனைக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கு.

உங்க பிரெச்சனை சரி ஆச்சாங்க??? பதிவேதும் போட்டிருக்கீங்களான்னு பார்க்க இழையை தேடி எடுத்தா உங்ககிட்ட இருந்து பதிவே இல்லையே. :( லாகின் பிரெச்சனையா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்