வாழைத்தண்டு புளிக்குழம்பு

தேதி: July 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

வாழைத்தண்டு - கால் அடி நீளத் துண்டு
சின்ன வெங்காயம் - 6 + 4
தக்காளி - ஒன்று
காய்ந்த மிளகாய் -3
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெல்லம் - சுண்டைக்காய் அளவு


 

வாழைத்தண்டை தோல் சீவி, மெல்லிய வட்டமாக நறுக்கி, அதை இரண்டாகவோ அல்லது நான்காகவோ நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் தனியா சேர்த்து சிவக்க வறுத்து, அதனுடன் 6 வெங்காயத்தையும் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிடவும். ஆறியதும் தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய 4 வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வாழைத்தண்டை தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து வதக்கவும்.
வாழைத்தண்டு லேசாக வதங்கியதும், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
ஓரளவு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
சுவையான வாழைத்தண்டு புளிக்குழம்பு தயார். சாதத்தில் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா தெரியுது இந்த டிஷ். பார்க்கலாம். முடிஞ்சா ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

‍- இமா க்றிஸ்

குழம்பு பார்க்க‌ சூப்பரா இருக்கு. வித்யாசமாவும் இருக்கு. வாழை தண்டுல‌ சாம்பார் கூட்டு பொறியல் தான் செய்து இருக்கேன். இதுவும் செய்து பார்த்துட்டு சொல்றேன். அப்புறம் புளி சேர்க்காம‌ செய்ற குழம்பு எனக்கு நிறைய‌ கத்து குடுங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

குழம்பு பார்க்க‌ சூப்பரா இருக்கு. வித்யாசமாவும் இருக்கு. வாழை தண்டுல‌ சாம்பார் கூட்டு பொறியல் தான் செய்து இருக்கேன். இதுவும் செய்து பார்த்துட்டு சொல்றேன். அப்புறம் புளி சேர்க்காம‌ செய்ற குழம்பு எனக்கு நிறைய‌ கத்து குடுங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

செல்வி,
வாழை தண்டு குழம்பு ரொம்ப புதுசா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழைத்தண்டுல புளிக்குழம்பு, புதுசா, சூப்பராயிருக்கே!. என்ன, இங்கே வாழைத்தண்டு கிடைப்பதுதான் அரிது. எங்காவது கிடைத்தால் கட்டாயம் செய்துப்பார்க்கிறேன். இப்போதைக்கு குறிப்பை மட்டும் பார்த்துக்கறேன்! ;‍)

அன்புடன்
சுஸ்ரீ