பகாலா பாத்

தேதி: July 30, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

சேமியா - அரை கப்
கெட்டித் தயிர் - முக்கால் கப்
பால் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - சிறு துண்டு


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். தயிரை நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் சேமியாவைப் போட்டு வறுக்கவும்.
அத்துடன் காய்ச்சிய பால் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
மிதமான சூட்டிற்கு வந்ததும், அத்துடன் அடித்து வைத்துள்ள கெட்டித் தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்க்கவும்.
சுவையான பகாலா பாத் (Bagala Bath) தயார். ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுத்துப் பரிமாறலாம். அல்லது மிதமான சூட்டிலும் சாப்பிடலாம்.

தயிர் சேமியாவிற்கு பெங்காலியில் பகாலா பாத் (Bagala Bath) என்று பெயர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர். நான் எப்பவும் தாளிச்சு தயிரில் சேர்த்துட்டு தான் சாதமோ சேமியாவோ கலப்பேன். இது புதுசா இருக்கு சேர்த்துட்டு தாளிச்சு கொட்டுறீங்க. ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வானி சூப்பர்.

உங்க‌ பகாலா பாத் ரொம்ப‌ நல்லா இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

பாத் அருமையா இருக்கு வாணி. சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வனி, நித்யா, பாலநாயகி, உமா
தோழிகளே அனைவரின் வருகைக்கும் பதிவிற்க்கும் மிக்க நன்றி