சுக்கு,மிளகு,பனங்கற்கண்டு சளி

சளி பிரச்சனைக்கு சுக்கு,மிளகு,பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவைத்து கொடுத்தால் குறையுமா?
வேறு ஏதாவது கஷாயம் இருந்தாலும் கூறுங்கள்.எங்க வீட்டில் கணவர்,குழந்தைகளுக்கு மிகவும் அதிகமா சளி பிடித்திருகிறது.இங்க (பெங்களூர்) கிளைமெட் கொஞ்சம் கூலாஇருக்கு அதனால் தான் என்ன செய்யலாம்.

சளி இருமலுக்கு

பச்சை கொள்ளுப்பருப்பு 1 ஸ்பூன், கொஞ்சம் மிளகு, கொஞ்சம் சீரகம், கொஞ்சம் கொத்தமல்லி, நான்கு பல் பூண்டு, ஆன்கு பல் சின்ன‌ வெங்காயம், உப்பு சேர்த்து மைய்ய‌ அரைக்கவும். பின் இதில் தண்ணீர் விட்டு இலகுவாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து ஒரே ஒரு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் இந்த‌ விழுதை ஊற்றி தேவையான‌ திரவ‌ பதத்திற்கு நீர்விட்டு உப்பு சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கிடவும்.

இது "பச்சை கொள்ளு ரசம்" இதில் புளி கூடாது,புளி குளிர்ச்சி சளி இருக்கும்போது வேண்டாம். இந்த‌ ரசத்தை சாத்த்தில் பிசைந்து உண்ணலாம், அல்லது அப்படியே குடிக்கலாம். விரைவில் குணம் தெரியும். நான் இதுதான் செய்வேன். சீக்கிரம் இதன் விளக்கப்பட‌ குறிப்பும் கொடுத்துடுறேன்.

ரேனுகா சொல்லியிருக்குற மாதிரியே செய்துகொடுகிறேன்.

நெஞ்சு சளியா? அல்லது மூக்கில் நீர் வடியுதா? நெஞ்சு சளியா இருந்தா நான் முதல்ல தரும் மருந்து இஞ்சி சாறும் தேனும் தான். இஞ்சியை தோல் நீக்கி தட்டிக்கங்க. அதை விரலால் அழுத்தினால், பிழிந்தால் சாறு வரும். அது 1/2 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி தேன் கலந்து பெரியவர்களுக்கு 1 நாளுக்கு 4 முறை கொடுக்கலாம். சின்னவர்களுக்கு 1/4 தேக்கரண்டி சாறும் 3/4 தேக்கரண்டி தேனும் கொடுக்கலாம். தேன் சேர்ப்பதால் பச்சை இஞ்சி சாறு வயிறை பாதிக்காது.

கொள்ளு நல்ல பலன் தரும். இங்க உள்ள க்ளைமேட்டுக்கு ரேணுகா சொல்லும் ரசம் வாரம் 2 நாள் கொடுக்கலாம். உடல் சூட்டை சரியா வெச்சுக்கும். அருள் குறிப்பில் கூட கொள்ளு பருப்பு இருக்கும் பாருங்க.. அப்படி வித விதமா கொள்ளை அடிக்கடி உணவில் சேருங்க.

ரன்னிங் நோஸ் என்றால் சின்னவர்களுக்கு துளசி இலை சாறும் ஓம இலை சாறும் இடிச்சு எடுத்து சரி பாதியா கலந்து 1 ஸ்பூன் காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கலாம். வெற்றிலையை சின்ன துண்டுகளாக நறுக்கி அத்துடன் 3 மிளகு தட்டிப்போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்தும் கொடுக்கலாம். இதை ஒரு நாளுக்கு 3 முறை அவ்வப்போது 5 ml கொடுக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சளிக்கு எளிமையான‌ தீர்வு:‍
பால்‍ ல‌ மஞ்சள் தூள் போட்டு காய்ச்சி அதில் மிள‌கு, பனங்கற்கண்டு போட்டு தொடர்ந்து 5 நாள் இரவு சாப்பிட்ட‌ சளி, இருமல் காணா போய்ரும்,

குழந்தங்க‌ அதை சாப்பிட‌ அதில் கொஞ்சம் உலர் திராட்சை போட்டு கொடுக்கலாம்.

மஞ்சள் தூள் சிறந்த‌ கிருமி நாசினி......உடனே தீர்வு கிடைக்கும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சளி பிரச்சனைக்கு நான் கடைபிடிக்கும் மருந்து,துளசி இலை,கற்பூரவல்லி( ஓமவல்லி)இலை,திப்பிலி(இது கன்னடத்தில் இப்பிலி )மிளகு இவற்றை ஒரு லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, இந்த நீரை கொஞ்சம் சூடாக,சளி இருக்கும் நாட்களில் தினமும் குடித்தால் நல்ல Relief கிடைக்கும்.

நன்றி தோழீஸ்... செய்துகொடுகிறேன் அனைவருக்கும் நன்றி...

மேலும் சில பதிவுகள்