ப்ரோக்கோலி தண்டு சாம்பார்

தேதி: August 1, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

துவரம் பருப்பு - 2 கப்
ப்ரோக்கோலி தண்டு - 3
சின்ன வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - ஒரு பல்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
புளி பேஸ்ட் - அரை தேக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை
தாளிக்க
எண்ணெய்,
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம்
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் துவரம் பருப்புடன் பூண்டு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பாதி தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் அரை பதம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய ப்ரோக்கோலித் தண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்,
பிறகு சாம்பார் தூள், உப்பு மற்றும் புளிக் கரைசல் சேர்த்து, தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
அத்துடன் வேக வைத்த துவரம் பருப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதி வந்ததும் ப்ரோக்கோலித் தண்டு வெந்ததைச் சரி பார்த்து, வெல்லம் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாற சுவையான ப்ரோக்கோலி தண்டு சாம்பார் தயார். இந்த சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹெல்தி டேஸ்டி சாம்பார் சூப்பர்

ஆஹா! பார்க்கவே ஆசையா இருக்கே! என் ஃபேவரிட் ப்ரோக்கோலி தண்டு. முன்னாலயும் ப்ரேக்கோலி தண்டு ரெசிபி கொடுத்திருக்கீங்க. இது இன்னும் நல்லா இருக்கும் போல இருக்கு. ட்ரை பண்ணணும்.

‍- இமா க்றிஸ்

நான் இது வரைக்கும் ப்ரக்கோலி செய்ததில்லை.ட்ரை பன்னி பார்கிரேன்.

சூப்பர். இங்க வந்து ப்ரோக்கலி இன்னும் வாங்கல, ட்ரை பண்ணனும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வாணி,

குறிப்பு மிகவும் நன்றாக இருக்கு. உங்க ப்ரசண்டேஷனும் மிகவும் அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

சாம்பார் சூப்பரா இருக்கு. ப்ரோகோலி போட்டு வித்யாசமாவும் இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

பிரியா வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

அவசியம் டிரை பண்ணுங்க இமா. மிக்க நன்றி

டிரை பண்ணிப் பாருங்க நித்யா, நல்லா இருக்கும். நன்றி

வாங்கும் போது செய்து பாருங்க வனி. சுவையா இருக்கும். நன்றி

வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி சீதா மேடம்.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி பாலநாயகி

வாணி... :-) எங்க குட்டிப் பொண்ணு ட்ரிக்ஸி தண்டு சாப்பிட மாட்டேங்கறாங்க. நாங்கதான் அவித்துச் சாப்பிட்டு முடிக்கிறோம். இன்று உங்கள் இந்தச் சமையலை முயற்சி செய்தேன். வித்தியாசமாக இருந்தது. வெகு சுவையாகவும் இருந்தது. யமி. டிஷ் வாணி. மிக்க நன்றி. ஃபேஸ்புக் க்ரூப்ல போட்டு இருக்கேன். உங்களுக்கும் தனியாக ஒரு பார்சல் அனுப்பியாச்சு. :-)

‍- இமா க்றிஸ்