ஈஸி சுகர் குக்கீஸ்

தேதி: August 1, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம் (அ) அரை கப்
மைதா மாவு - 2 1/4 கப்
சர்க்கரை - அரை கப்
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி


 

சர்க்கரையைப் பொடி செய்து, வெண்ணெயுடன் சேர்த்து க்ரீம் போல கலந்து கொள்ளவும்.
அதனுடன் முட்டையைச் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இக்கலவையுடன் மைதா மாவைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.
மாவைப் பிசைந்ததும் திரட்டும் பதத்தில் தான் இருக்கும். (உடனேயே திரட்டுவதானால் திரட்டலாம்).
மாவு மிருதுவாக திரட்ட வராதது போல இருந்தால் ப்ளாஸ்டிக் ஷீட்டில் சுற்றி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கலாம். அவனை 190 C’ல் முற்சூடு செய்யவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை திரட்டி பிஸ்கட் கட்டரால் விரும்பிய வடிவில் வெட்டி, பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் அடுக்கி அவனில் வைத்து 10 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
சுவையான சுகர் குக்கீஸ் தயார்.

மாவை மெல்லியதாக திரட்டினால் பிஸ்கட்டுகள் போல க்ரிஸ்பியாக இருக்கும். அல்லது வழக்கமான குக்கீஸ் போல வேண்டுமெனில் சற்று தடிமனாகவே திரட்டலாம். ஒரே சீராக திரட்டினால் தான் குக்கீஸ் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே பதத்தில் பேக் ஆகும்.

இந்த அளவில் எனக்கு 50 குக்கீஸ் (25 பெரியதும், 25 சிறியதும்) கிடைத்தது. ஒரு நேரத்தில் ஒரு ட்ரேயில் வைக்கும் அனைத்தும் ஒரே அளவில் இருப்பது நல்லது. நான் இரண்டு செட்டாக பேக் செய்து எடுத்தேன்.

அவனில் வைத்த 8 நிமிடங்களுக்குப் பிறகு அடிக்கடி பிஸ்கட்களை கவனிக்கவும். அடிப்பாகம் சிவந்திருந்தாலோ, ஓரங்களை தொடும் போது உடையாமல் இருந்தாலோ பிஸ்கட் பேக் ஆகிவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்.

முட்டையும் வெண்ணெயும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டியது அவசியம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமை... பிஸ்கட் பூ அழகு... அவன் இல்லையே.... பார்சல் ப்ளீஸ்

சுபர்ப் வனி. கடைசி படம் க்யூட்.

‍- இமா க்றிஸ்

அப்பா தாங்கல‌. அந்த‌ அவன் என்ன‌ பாடு படுதோ தெரிலயே. பாவம்பா கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க‌. தொடர்ந்து கேக் குக்கீஸ். நாங்க‌ வனி கிட்ட‌ இன்னும் நிறைய‌ வேற (கார‌ சாரமா) எதிர் பார்க்கிறோம்.

எல்லாம் சில‌ காலம்.....

வனி குக்கீஸ் கலக்கல்.

குக்கீஸ்க்கு பயன் படுத்தியிருக்கிற மோல்ட்ஸ் நல்லா இருக்கு வனி, நாங்க இதையே பட்டர் குக்கீஸ்ன்னு சொல்லுவோம்.

அன்பு வனி,

இந்த மாதம் ‍ குக்கீஸ் மாதம் போல. வரிசையாக நிறைய குக்கீஸ் ரெசிபி குடுத்திருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு. இந்த பிஸ்கட் கட்டர் வாங்கணும்னு ஆசையா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

பிரியா... முதல் பதிவுக்கு மிக்க நன்றி :) பார்சல் வந்துடும்.

இமா... முதல்ல அந்த குக்கீஸ் கட்டர்க்கு தேன்க்ஸ் இமா ;)

பாலநாயகி... உங்களுக்காகவே பிரியாணி அனுப்பி வெச்சிருக்கேன் ;) வனியை பற்றி தெரியல உங்களுக்கு.. ஒரு காத்து... அந்த காத்து வீசி முடியும்வரை அதே ஸ்டைல் குறிப்பு தான் இங்க வரும்.

நித்யா... மிக்க நன்றி :)

வாணி... மிக்க நன்றி :)

சீதா... கடைசி பூ இமா போன முறை வந்திருந்தப்போ கொடுத்தது. மற்றது நம்ம ஊரில் வாங்கினது தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

HI AKKA,
ur cookies and cake recipes are nice, but i have microwave oven only,please tell me how to do these cookies and cakes in microwave..it will be very helpful

//மைக்ரோவேவ் மீடியம் ஹையில் வைத்து 5 நிமிடம் விட்டு எடுத்தேன். 3 நிமிடம் முடித்து முதலில் திரந்து பார்தது தீயிந்து விடாமல் பார்துக்கொள்ளவும். நன்கு ஆரியதும் சாப்பிடால் தான் சுவையாக இருக்கும்// - நித்யா ரமேஷ் மைக்ரோவேவில் செய்யும் முறை சொல்லி இருந்தாங்க. உங்களுக்காக :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா