கிட்ஸ் ஸ்வீட் கோன் பூரீஸ்

தேதி: August 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பூரிக்கு பிசைந்த மாவு - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
வட்ட வடிவ மூடி - ஒன்று (நடுத்தர அளவு)
எண்ணெய் - பொரிக்க


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். மாவு பூரிக்கு பிசைவது போலவே இருந்தால் போதும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும்.
சிறிது மாவை எடுத்து உருட்டி, சப்பாத்தி போல் தேய்க்கவும். பிறகு அதன் மீது வட்ட வடிவ மூடியை வைத்து அழுத்தி வட்டமாக வெட்டி எடுக்கவும்.
வெட்டி எடுத்ததை கோன் போல செய்து, அதன் அடிப்பகுதியை மிதமாக அழுத்திவிடவும். இதே போல் மீதமுள்ள மாவிலும் கோன் போல தயார் செய்யவும்.
அவற்றை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடிந்ததும் பொடித்த சர்க்கரையில் போட்டுப் பிரட்டி எடுக்கவும்.
குழந்தைகளுக்கு டிஃபனாக கொடுக்க டேஸ்டி ஸ்வீட் கோன் பூரீஸ் ரெடி

கோனின் உள்ளே மாதுளை, ஜெம்ஸ் சாக்லேட் போன்றவற்றை வைத்தும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்னொரு கிட்ஸ் ஸ்பெஷலா? சூப்பர்.....

ரேனு சூப்பர்.

கிட்ஸ் ஸ்பெஷல்... சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ரேணுகா,

நல்ல ஐடியா. ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

என்ன மேடம் இப்படி கலக்குரிங்க, உங்களுக்கு நல்ல கிரியேடிவ் இருக்கு.

குறிப்பு வெளியிட்ட‌ டீமுக்கு மிக்க‌ நன்றிகள்.

தேங்க் யூ பிரியா...

வருகைக்கும், பதிவிற்கும் மிக்க‌ நன்றிகள் பா இருவருக்கும்...:)

என்ன‌ செய்ய‌ என்குட்டீஸ் சாப்பாட்டு விஷயத்தில் ரொம்ப‌ அடமில்லைதான். இருந்தாலும்கூட‌ சில‌ சமையங்களில் இப்படி மேக்கப் தேவைப்படுது... :)

உங்களுக்கு குட்டீஸ் இருக்கா? எத்தனை பேர்?

அவங்க‌ படுத்துவது பார்த்தோ அல்லது சில‌ சமையங்களில் அனைவரையும் அசத்தும் விதமாகக்கூட‌ இப்படி செய்வதுண்டு... தானா வந்திடும்... தேங்க்யூ...:)