காலிஃப்ளவர் குருமா

தேதி: August 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

இந்த காலிஃப்ளவர் குருமா திருமதி. சித்ரா அவர்களின் காலிஃப்ளவர் - பட்டாணி குருமா குறிப்பினைப் பார்த்து சிறு மாற்றங்களுடன் செய்தது.

 

காலிஃப்ளவர் - ஒன்று
தக்காளி - 2
பட்டாணி - அரை கப்
பட்டர் பீன்ஸ் - அரை கப்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - 2 கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
அரைக்க:
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பற்கள்
முந்திரிப்பருப்பு / பாதாம் பருப்பு - 6


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி, அத்துடன் தோல் சீவிய இஞ்சி, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைக்கவும்.
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு எடுத்து, சுத்தம் செய்து வைக்கவும்.
ப்ரஷர் பானில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் தாளித்து, தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கிளறவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைக் கரைத்து ஊற்றி கலக்கவும்.
பிறகு சுத்தம் செய்த காலிஃப்ளவர் துண்டுகள், பட்டாணி மற்றும் பட்டர் பீன்ஸை சேர்த்துக் கிளறவும்.
நன்றாகக் கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து ப்ரஷர் பானை மூடி வெயிட் போடவும். 3 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். ஆறியதும் திறந்து வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
சுவையான காலிஃப்ளவர் குருமா தயார். கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற அருமையான சைட் டிஷ் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்..சூப்பர்... விருப்ப‌ பட்டியலில் சேர்த்தாச்சு... அடுத்து செய்துவிட்டு உங்களுக்கு பதிவு போடுவதுதான் பாக்கி, பூ இல்லை வந்ததும் சமைத்துடுறேன்.

சூப்பர்... பேசிக் ரெசிபிஸ், புதுசா சமைக்க கத்துக்குறவங்களுக்கு ரொம்பவே பயன்படும். கலக்கறீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ரேணுகா, அன்பு வனி,

இந்தக் குறிப்பு நம் சீனியர் தோழி சித்ரா அவர்களின் குறிப்பைப் பார்த்து செய்தது.

லிங்க்:http://www.arusuvai.com/tamil/node/1629

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா அம்மா செய்து பார்கிரேன் சுலபமாக இருக்கு.

கலக்குறீங்க‌. இல்ல‌ இல்ல‌ கலக்காமலே இவ்ளோ சூப்பரா குருமா வெச்சி இருக்கீங்க‌.

பழய‌ குறிப்புனாலும் நீங்க‌ பண்ண‌ விதம் அருமை. சூப்பர் அம்மா.

காலி ஃப்ளவர் கிடைக்கட்டும் குருமா வெச்சி அசத்திடறேன்.

ஆனா ஒரு சின்ன‌ சந்தேகம். வெங்காயம் பச்சையா அரைக்கனுமா? இல்ல‌ வதக்கிட்டா? ஏனா நான் பச்சையா அரைத்து செய்தால் வெங்காய‌ வாசனை போகவே மாட்டுது. இதுக்கு என்ன‌ செய்யலாம்.

எல்லாம் சில‌ காலம்.....

அன்பு பாலநாயகி,

பச்சையாகவே அரைக்கலாம். அரைச்சதை மீண்டும் ஒரு தடவை வதக்கறோம் இல்லையா, அதனால், நல்ல‌ மணமாக‌ இருக்கும்.

செய்து பாருங்க‌.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நித்யா,

சுலபமான குறிப்புதான். சுவையும் நல்லா வந்தது.

குருமா செய்யற்துக்காகத் தேடினேன். சீனியர் தோழி சித்ராவின் குறிப்புகள் எல்லாமே நல்லா இருக்கு.

நீங்களும் பாருங்க, பிடிக்கும்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

Arumaiyana samaiyal vizhakkam. parthalle puriyum alavirvu photos parkumpothe sappida thoonduthu.

Thank you.

Seekiram try pannuven.

enaku kuruma pidikum. en mamavukaga intha recipie panna aasai. thank you thank you so much.

Hello madam pattani illama only flower mattum pottu seiyalama

God is great

அன்பு தாமரை,

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி. செய்து பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ஜீமால்,

செய்து பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ராஜ திவ்யா,

பட்டாணி சேர்க்காமலும் செய்யலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி