சாக்லேட் சிப் குக்கீஸ்

தேதி: August 4, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - ஒன்றேகால் கப்
உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம் / அரை கப்
வெள்ளைச் சர்க்கரை - கால் கப்
ப்ரவுன் சர்க்கரை - அரை கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் - 2 - 3 மேசைக்கரண்டி
கோக்கோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
பொடித்த பாதாம் - அரை கப்


 

மைதா மாவுடன் கோக்கோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் கலந்து மூன்று முறை சலித்து வைக்கவும்.
அத்துடன் பொடித்த பாதாமைச் சேர்த்து, நன்றாகக் கலந்து கொள்ளவும்.
வெண்ணெயுடன் பொடித்த வெள்ளைச் சர்க்கரை மற்றும் ப்ரவுன் சர்க்கரை சேர்த்து க்ரீம் போல கலந்து கொள்ளவும். அத்துடன் அடித்த முட்டை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அதனுடன் சிறிது சிறிதாக மாவுக் கலவையைச் சேர்த்துப் பிசையவும்.
கடைசியாக சாக்லேட் சிப்ஸ் சேர்த்துக் கலந்து வைக்கவும். அவனை 180 C' ல் முற்சூடு செய்யவும்.
மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி லேசாக அழுத்தி, பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும். (ஒவ்வொன்றிற்கும் 2 இன்ச் இடைவெளி இருக்குமாறு வைத்து அடுக்கவும்).
பிறகு ட்ரேயை அவனில் வைத்து 10 - 12 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். (அவனில் வைத்த 8 நிமிடங்களுக்குப் பிறகு அடிக்கடி பிஸ்கட்களை கவனிக்கவும். அடிப்பாகம் சிவந்திருந்தாலோ, ஓரங்களை தொடும் போது உடையாமல் இருந்தாலோ பிஸ்கட் பேக் ஆகிவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்).
டேஸ்டி & க்ரிஸ்பி சாக்லேட் சிப் குக்கீஸ் ரெடி. காற்றுப் புகாத டப்பாவில் ஸ்டோர் செய்யலாம்.

இந்த குக்கீஸில் பாதாமிற்கு பதிலாக வேறு நட்ஸையும் பொடித்துச் சேர்க்கலாம். சாக்லேட் சிப்ஸுக்கு பதிலாக டார்க் சாக்லேட்டைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் டார்க் மற்றும் வொயிட் சாக்லேட் சிப்ஸ் கலந்து குறைவாகவே பயன்படுத்தியுள்ளேன். விரும்பினால் அதிகமாகவும் சேர்க்கலாம். ப்ரவுன் சர்க்கரைக்கு பதிலாக முழுவதும் வெள்ளைச் சர்க்கரை மட்டுமே கூடப் பயன்படுத்தலாம்.

மாவை உருட்டாமல் அப்படியே ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து ட்ரேயிலிட்டு பேக் செய்யலாம். இப்படிச் செய்வதால் குக்கீஸின் டெக்‌ஷர் சற்று வித்தியாசமாக வரும். பார்க்க நன்றாக இருக்கும். கொடுத்துள்ள அளவுகளில் எனக்கு 20 பெரிய குக்கீஸ் கிடைத்தது.

முட்டையும், வெண்ணெயும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டியது அவசியம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கும்போதே செய்து சாப்பிடத் தோணுது...

அவன் இல்லையே...

(அவன் பற்றி உங்ககிட்ட சந்தேகம் கேட்டிருந்தேன் பதில் சொல்லவில்லை)

சஹிதா... இது நியாயமா? அன்னைக்கு ரெசிபில உங்க போஸ்ட் பார்த்ததுமே அந்த இழையை தேடி எடுத்து பதில் கொடுத்தேன். அம்புட்டு பெரிய பதிவு கொடுத்தும் பதில் சொல்லலன்னு சொன்னா நியாயமே இல்ல :( எல்லாம் இந்த அண்ணா பண்ற வேலை... யாரும் அவங்க போட்ட போஸ்ட்டுக்கு ரிப்ளை வந்திருக்கான்னு போய் பார்க்குறதே இல்ல.

நல்ல பிள்ளையாம் சஹிதா... போய் அந்த இழையை கண்டு பிடிச்சு படிச்சுட்டு டவுட்டு இருந்தா கேட்பீங்களாம் ;) டீலா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னக்கா குக்கீஸ் குக்கீஸ் னு ஒரே குக்கீஸ் வாரமா இருக்கே கலக்குறிங்க அக்கா பிரமாதம் வாழ்த்துக்கள்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலக்கி கலக்கி தான் குக்கீஸ் பண்ணேன்... கரக்ட்டா கண்டு பிடிச்ச உங்களுக்கு கடைசி ப்ளேட்ல இருக்க குக்கீஸ் பரிசு. :) மிக்க நன்றி பெனாசிர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா