காலிஃப்ளவர் மசாலா

தேதி: August 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று
வெங்காயம் - 2
தக்காளி - 2
கரம் மசாலா தூள் - ஒரு மேசைக்கரண்டி
சில்லி தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஃப்ரெஷ் க்ரீம் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 10
பட்டை - சிறிது.
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
கொத்தமல்லித் தழை - சிறிது
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட்
எண்ணெய்


 

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் காலிஃப்ளவரைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில்லாமல் வடிகட்டி எடுத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காலிஃப்ளவரைப் போட்டு, சிறிது இஞ்சி, பூண்டு பேஸ்ட், அரை மேசைக்கரண்டி கரம் மசாலா தூள், அரை மேசைக்கரண்டி சில்லி தூள், ஒரு மேசைக்கரண்டி தனியா தூள் மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்று சேரும்படி நன்றாக் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி, பாதி அளவு தக்காளியைச் சேர்க்கவும். பிறகு மீதமுள்ள தூள் வகைகளையும் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
நன்கு வதங்கியதும் கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி ஆறவிடவும். ஆறியதும் அதனுடன் முந்திரி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள வெங்காய்த்தைச் சேர்த்து வதக்கி, வறுத்து வைத்துள்ள காலிஃப்ளவரைச் சேர்த்து பிரட்டவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.
பரோட்டா, சப்பாதிக்கு தொட்டுக் கொள்ள அருமையான காலிஃப்ளவர் மசாலா தயார்.

அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைக்கும் போது தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பு மற்றும் சில்லி தூள் சேர்த்து கொதிக்கவிடலாம். சுவைக்கேற்ப காரத்தை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சேர்த்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்