தேதி: August 6, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிவப்பு மிளகாய் - ஒரு கப்
தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பு - அரை கப்
கட்டி பெருங்காயம் - ஒரு சிறு துண்டு (அ) பெருங்காயப் பொடி - அரை தேக்கரண்டி
பூண்டு - 12 பற்கள்
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்டி பெருங்காயத்தைப் பொரித்தெடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பைப் போட்டு நன்றாக வாசம் வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.

வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி, மிளகாயைப் போட்டு வறுக்கவும். (மிளகாய் லேசாக நிறம் மாறும் வரை வறுத்தால் போதும்).

வெறும் வாணலியில் கறிவேப்பிலையைப் போட்டு மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளவும். பூண்டுப் பற்களை தோல் நீக்கி வைக்கவும்.

உளுத்தம் பருப்பு ஆறியதும், அத்துடன் பொடி செய்த பெருங்காயத்தைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாகத் திரித்தெடுத்து அகலமான பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

பிறகு மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாகத் திரிக்கவும்.

இதில் முக்கால் வாசி பொடியை திரித்து வைத்திருக்கும் உளுந்துப் பொடியுடன் சேர்த்து விட்டு, மீதியுள்ள மிளகாய்ப் பொடியுடன் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாகத் திரிக்கவும். இது சற்று ஈரப் பதமாக இருக்கும். (பூண்டின் ஈரப்பதம் இருக்கும்).

பிறகு உளுந்துப் பொடி, மிளகாய்ப் பொடி, பூண்டுப் பொடி அனைத்தையும் பக்குவமாக, சிறிது சிறிதாக நன்றாகக் கலந்து திரிக்கவும்.

சுவையான இட்லி / தோசை மிளகாய்ப் பொடி தயார். இட்லி, தோசை, அடை ஆகியவற்றிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். மிளகாய்ப் பொடியில் நல்லெண்ணெய் / உருக்கிய நெய் / தயிர் கலந்து தொட்டுக் கொள்ளலாம்.

Comments
இட்லி பொடி,
ரொம்ப பிடிச்சிருக்கு. அதிகம் தேடியதும்கூட. தேங்க்யூ...
என் அத்தை எத்தனையோ முறை வாய்வழி சொன்னார்கள்(அவங்க அரைப்பது நல்லா இருக்கும்). பட் பென்,பேப்பர் இல்லாமல் நோட் பண்ணாமல் விட்டுட்டேன். இப்ப உங்க குறிப்பை விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு. செய்து பார்த்துடுறேன்.
சீதா
இதுவரை தோலோடு உள்ள உளுந்து பயன்படுத்தினதே இல்லை. ட்ரை பண்ணிப்பார்க்குறேன் சீதா கண்டிப்பா. சீதா குறிப்புன்னு அது நிச்சயம் ஃபெயில் ஆகாது. :)
கொசுரு மேட்டர்: இப்பலாம் நான் தான் இட்லி செய்யுறதுல பெஸ்ட்டுன்னு நம்ம ஆள் சொன்னார் ;) அவங்க அம்மாவை விட, ரெஸ்டாரண்ட்டில் கிடைப்பதை விட நான் தான் நல்லா பண்றேனாம்!!! இந்த பெருமை உங்களுக்கு தான். தேன்க்யூ பேபி. லவ் யூ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சீதா அம்மா
சான்சே இல்ல. சூப்பர் பொடி. வெள்ளை உளுந்துல எதுவுமே இல்ல. கருப்பு உளுந்துல தான் சத்து இருக்கு. நான் பருப்பு பொடி தான் செய்வேன். இது பண்ணது இல்ல. இந்த பொடியும் டேஸ்டா இருக்கும். சூப்பரான குறிப்பு சொல்லி இருக்கீங்க அம்மா.
எல்லாம் சில காலம்.....
சீதாம்மா
வெள்ளை உளுந்துல இட்லிப்பொடி செய்வேன்,முழு உளுந்து வித்தியாசமா இருக்கு(ஆனா இதில்தான் சத்து அதிகம் இல்லையா?).
இனிமேல் இப்படிதான் செய்யனும்.
சீதா...
நானும் விருப்பப் பட்டியல்ல சேர்த்தாச்சு.
- இமா க்றிஸ்
சீதா மேடம்,
எங்க அம்மாவும் இதே போன்று தான் தோல் உளுந்தில் செய்வாங்க.ஒவ்வோரு முறை ஊரிலிருந்து வரும்போதும் அம்மா எனக்கு பொடி செய்து கொடுத்தனுப்புவாங்க. இம்முறை சீக்கிரமே காலியாகி விட்டது.
நாளைக்கு வேற கெஸ்ட் வர்ராங்க, நாலு நாள் எங்க வீட்லத்தான் இருப்பாங்க, மூன்று வேளையும் ஸ்ட்ரிக்டா நம்மூர் சாப்பாடுதான்னு வேற சொல்லியாச்சு. இன்றைக்கு இந்த பொடி அரைச்சு வைத்து விட்டேன், டேஸ்ட் பார்த்தேன், நல்லா இருக்கு.
டைம்லி ரெஸிப்பி.
Health tips regarding
Madam,
Nan unmarried. enaku health problem eruku. May i share with u. i want ur suggession
Muzhu Ulunthu parupu than
Muzhu Ulunthu parupu than strength ah. normal white ulunthu useless ah mam?
ரேணுகா
அன்பு ரேணுகா,
முதலாக வந்து பதிவிட்டதற்கு மிகவும் நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
வனி
அன்பு வனி,
தோல் உளுந்து வாசனை கூடுதலா இருக்கும். காரம் குறைக்கணும்னு தோணினால், பொட்டுக்கடலை மாவு கொஞ்சமா சேர்க்கலாம்.
தாங்க்யூ வனி:):)
அன்புடன்
சீதாலஷ்மி
பால நாயகி
அன்பு பால நாயகி,
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
அனு
அன்பு அனு,
வெள்ளை உளுந்திலும் செய்யலாம். தோலுடன் கூடிய உளுந்து வாசனை, சத்து கொஞ்சம் கூடுதல்.
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
இமா
அன்பு இமா,
நேரம் கிடைக்கிறப்ப, செய்து பாருங்க. விருப்பப் பட்டியலில் சேர்த்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
அன்புடன்
சீதாலஷ்மி
வாணி
அன்பு வாணி,
செய்துட்டீங்களா? மிகவும் சந்தோஷம்.
நானும் என் மகளுக்கு செய்து கொடுத்து விடுவேன்.
இந்த முறை ஒரு சின்ன வித்தியாசம், இது என் மகள் செய்து கொடுத்தார்:)
இங்கே சென்னையில் வெயில் அதிகம், அடுக்களையில் நின்று, மிளகாய் வறுத்து, திரிப்பதற்குள் ரொம்பவும் வேர்க்கிறது என்று சொன்னேன். அதனால், பெங்களூருக்குப் போயிருந்தபோது, அவர் செய்து தந்தார்.
இதில் கூடுதலாக ஒரு பலன், இப்ப ரெசிபி ஃபோட்டோ எடுத்து எனக்கு அனுப்புகிறார்.:)
அன்புடன்
சீதாலஷ்மி
யதி
அன்பு யதி,
வெள்ளை உளுந்திலும் செய்யலாம், செய்து பாருங்க. நல்லா வரும்.
அன்புடன்
சீதாலஷ்மி