ஆல்மண்ட் கோக்கனட் மக்ரூன்ஸ்

தேதி: August 6, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

முட்டை - 5 - 6
பாதாம் பொடி - ஒரு கப்
உலர்ந்த தேங்காய் - ஒரு கப்
பொடித்த சர்க்கரை - ஒரு கப்
வெனிலா எஸன்ஸ் - கால் தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
முட்டையின் வெள்ளைக் கருவுடன் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து விப்பரால் கைவிடாமால் நன்றாக நுரை பொங்க அடிக்கவும். (நன்கு அடித்த பிறகு விப்பரை உயர்த்திப் பிடித்தால் நுரை கீழே விழாமல் ஸ்டிஃப்பாக நிற்கும் பதத்தில் இருக்க வேண்டும்).
அத்துடன் பாதாம் பொடி, தேங்காய் மற்றும் வெனிலா எஸன்ஸ் சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி ஒரு மரக்கரண்டியால் ஒரே திசையில் கலந்து கொள்ளவும்.
தயார் செய்த கலவையை ஒரு பைப்பிங் பேக்கினுள் நிரப்பவும்.
பிறகு பேக்கிங் டிரேயில் பேக்கிங் ஷீட்டை விரித்து, பைப்பிங் செய்யவும்.
ட்ரேயை முற்சூடு செய்த அவனில் 325 F - ல் வைத்து 20 - 30 நிமிடங்கள் பேக் செய்து, வெளியே எடுத்து ஆறவிடவும்.
சாஃப்ட் & டேஸ்டி ஆல்மண்ட் கோக்கனட் மக்ரூன்ஸ் ரெடி.

இதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் வானி, சுப்பர் அ இருக்கு இந்த‌ ரெசிபி .. இது வீட்ல‌ செய்ய‌ முடியும்னு நெனச்சதே இல்ல‌.. வெரி nice..

சூப்பர். நான் சில நாள் முன் முட்டை இல்லாமல் பண்ணேன், நல்லா வந்தது. ட்ரை பண்றேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலக்குறீங்க வாணி, கடைசீ ஃபோட்டோ எப்பவுமே catching ஆ இருக்கு.........

அருமை.... மக்ரூன்ஸ் பாதாமுடன்... யம்மி

ரொம்ப‌ நல்லா இருக்கு... மைக்ரோவேவ் அவன் இல்லாமல் செய்ய‌ டிப்ஸ் கொடுங்க‌. என்னிடம் இல்லை. எனக்கு குக்கீஸ் பிடிக்கும், பட் அவன் இல்லாமல் செய்யமுடிவதில்லை.

சூப்பர் ஆ இருக்கு... microwave ல் செய்வது எப்படி என‌ யாராவது சொல்லுங்க....

தோழிகள் அனைவரின் வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி

அவன் இருந்தா சுலபமா வீட்லே செய்ய முடியும் சுபத்ரா .

ஆமாம் வனி கன்டஸ்ட் மில்க் உபயோகித்து முட்டையில்லாமல் செய்யலாம்.

நன்றி அனு, பிரியா,

ரேணுகா அவன் இல்லாமல் மைக்ரோவேவிலும் குக்கீஸ் செய்யலாம்,மைக்ரோவேவ் இல்லாமல் குக்கீஸ் & மக்ரூன்ஸ் பண்ண முடியுமான்னு எனக்கு தெரியலிங்க.

நவீனா, உங்க மைக்ரோவேவுடன் வந்த Manual பேக்கிங் ஆப்ஷன்ஸ் இருக்குமே அதின் படி செய்து பாருங்க. மைக்ரோவேவ் ஒவ்வொன்றும் மாடலுக்கு மாடல் வேறு படும்.

Wiper illavital mixe or blender use panalama.indha egg beat pana

சொதப்பல்

அக்கா.நான் மக்குரூ

ன் பன்னேன்.நல்லாவே.வரவே இல்லே.அக்கா .
ணா என்ன தப்பு பன்னேனு தெரிய்ல்க்கா.

.