சிப்பி மசாலா

தேதி: August 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிப்பி - அரை கிலோ
வெங்காயம் - 2
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - கால் அங்குலத் துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
எலுமிச்சை - பாதி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


 

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
சிப்பிகளை ஓடும் நீரில் நன்றாக அலசிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, அத்துடன் எலுமிச்சையை இரண்டு துண்டுகளாக நறுக்கிப் போட்டு, சிப்பிகளையும் போட்டு மூடி 2 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
கொதித்த தண்ணீரிலிருந்து வரும் ஆவியில் சிப்பிகள் சூடாகி, அதன் ஓடு திறக்கும். உடனே அவற்றை வடிகட்டிக்கு மாற்றவும்.
கைகளால் சிப்பியின் ஓட்டை நீக்கவும். அதன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சதைப் பகுதி இருக்கும்.
உள்ளே இருக்கும் சதைப் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகளைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தனியாக எடுத்து வைத்துள்ள சிப்பிகளின் சதைப் பகுதியைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
சுவையான சிப்பி மசாலா தயார்.

இது ஆங்கிலத்தில் Mussels என்றழைக்கப்படும். இறால், கணவாய் போன்று இதுவும் அதிக நேரம் வேக வைத்தால் கடினமாகிவிடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யம்... இதை எங்கள் ஊரில் மட்டி என்பார்கள். என் ஃபேவரிட். ஊரில் இருந்த வரை சாப்பிட்டது இல்லை. பார்க்கவும் பிடிக்காது. இங்கு ஒரு தடவை சாமோவன் தோழி ஒருவர் pipies பொறுக்கக் காட்டிக் கொடுத்தார். அதன் பின்னால் சுவை பிடித்துப் போயிற்று. இப்போது பிப்பீஸ், மஸில்ஸ் எல்லாமே பிடிக்கிறது.

இந்தக் கமண்ட் தட்டும் போது சின்ன வயதில் கற்ற Molly Malone (ஐரிஷ் பாடல்) பாட்டு நினைவுக்கு வருகிறது. :-)

‍- இமா க்றிஸ்

அய்யோ சூப்பரா இருக்கு. ரொம்ப‌ நல்லா இருக்கு. கடைசி படம் சூப்பரோ சூப்பரா இருக்கு. வாய்ல‌ எச்சில் ஊருது. இப்பவே சாப்டணும் போல‌ இருக்கு. எப்பவோ சின்ன‌ வயசுல‌ சாப்டது. இப்பவும் சின்ன‌ வயசு தான். எவ்ளோ நாள் ஆச்சி. இப்போ கிடைக்க‌ மாட்டுது. கிடைத்ததும் நான் கண்டிப்பா ட்ரை பண்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

இது என்னவென்றே எனக்குத் தெரியாது . இமா , பாலநாயகி சொல்வதைப் பார்த்தால் சுவையாக‌ இருக்கும்னு தோணுது. ஆனாலும் அறிமுகலமில்லாத‌ உணவென்றால் நானும் என் பிள்ளைகளும் சாப்பிட‌ மாட்டோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் சஹிதக்கா இது சிப்பி, சோவி னு சொல்வோம்ல கடற்கரையில் நிறைய கிடக்குமே அதுக்குள்ள இறால் மாதிரி இருக்கும் விதவிதமா சிப்பி கடற்கரையில பொறுக்கி கழுவி காய வைத்தோம் என்றால் கோன் மாதிரி உள்ள சிப்பியில் இருந்து 2 நாள் கழித்து வெளியே வருவாஹ!

முதல்முறையா இந்த‌ Recipe யை இங்கதான் பார்க்கிறேன்.
கைவசம் ஏகப்பட்ட‌ வித்தியாசமான‌ குறிப்பு வெச்சிருக்கீங்க‌, கலக்குங்க‌.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி.
கடல் உணவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இமா,

நானும் முதன் முறையாக சமைத்துப் பார்த்தேன், நல்ல ருசி, கிடைக்கும் போது செய்து பாருங்கள் பாலநாயகி.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி பெனசிர்.

இங்கு வந்த பின் அநேக முறை பார்த்துள்ளேன், ஆனால் முதன் முதலாக இப்போது தான் வாங்கி சமைத்தேன்.அனு